Author Archives: தமிழினியன்

வேர்ட்பிரசு – சுழியத்திலிருந்து…01

வேர்ட்பிரசு – சுழியத்திலிருந்து…   கடந்த 2003 ஆம் ஆண்டு மேட் முல்லன்வெக், (Matt Mullenweg) மற்றும் மைக் லிட்டில் (Mike Little) வேர்ட்பிரசு (WordPress) என்ற கட்டற்ற மென்பொருளை வலைப்பதிவுகளை நிர்வகிப்பதற்காக உருவாக்கிய போது அதை சீந்துவோர் யாருமில்லை, உருவாக்கியவர்களோடு சேர்த்து பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை பத்தைக் கூடத் தாண்டவில்லை. அதற்கு முன்பு வெளிவந்த b2 cafelog என்ற வலைப்பதிவு மென்பொருளின் தொடர்ச்சியாகத்தான் வேர்ட்பிரசை மேட்டும், மைக் லிட்டிலும் உருவாக்கினார்கள். அது வெறும் வலைப்பதிவுகளை உருவாக்குவதற்கான கருவியாகத்தான்… Read More »

வேர்ட்பிரஸ் சுழியத்திலிருந்து -03

வேர்ட்பிரஸ் சுழியத்திலிருந்து -03 ~தமிழினியன்   இந்தக் கட்டுரையில் வேர்ட்பிரசை நிறுவும் வழிமுறைகள், வேர்ட்பிரசை நிறுவிய பிறகு, வார்ப்புருக்கள் மற்றும் நீட்சிகளை நிறுவும் வழிமுறைகளைப் பார்ப்போம். முதலில் வேர்ட்பிரசை உங்கள் வழங்கியில் நிறுவ குறைந்தபட்சமாக சில கட்டாயத் தேவைகள் இருக்க வேண்டும். அவை   PHP 5.2.4 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்பு MySQL 5.0 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்பு உங்கள் வழங்கியில் இந்த குறிப்பிட்ட பதிப்புகள் இல்லாவிட்டால், வேர்ட்பிரசு 3.2க்கு மேலானவற்றை நிறுவ முடியாது.… Read More »

வேர்ட்பிரசு சுழியத்திலிருந்து – 02

இணையதள உள்ளடக்க நிர்வாகம்(Content Management Service):   உலகம் தோன்றிய ஆதிகாலத்தில் HTML என்னும் நிரலாக்க மொழியைக் கொண்டு இணையதளங்கள் வடிவமைக்கப் பட்டு வந்தன. ஒரு பக்கம் உருவாக்க முழுதாக HTML கோப்பை உருவாக்க வேண்டும். ஒரு பக்கம் – ஒரு HTML கோப்பு. சில காலங்களில் Bluefish, kompozer, Dreamweaver, Frontpage போன்ற கருவிகளும், பல வார்ப்புருக்களும் வடிவமைக்கப்பட்டன, இவற்றின் துணை கொண்டு இணையதளங்களை வடிவமைத்து வந்தனர். பிறகு Php, perl, Asp போன்ற பல… Read More »