Author Archives: விக்னேஷ் நந்த குமார்

LESS – CSS – விழுதொடர் நடைதாள் மொழி

LESS – CSS – விழுதொடர் நடைதாள் மொழிCSS எனப்படும் விழுதொடர் நடைதாள் மொழி (Cascading Style Sheets) பற்றிப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. இணையத்தின் ஆஸ்தானக் குறியீட்டு மொழியாக மீயுரைக் குறியீட்டு மொழி (HTML) விளங்குவதைப் போல, இணையத்தின் ஆஸ்தான ஒப்பனையாளர் நமது CSS தான். மிகவும் எளிமையான மொழிதான் என்றாலும், தனக்கென பல வறையரைகளைக் கொண்டது CSS. எடுத்துக்காட்டாக, இம்மொழியில் மாறிகள் (variables) இல்லை. இணையதளம் பெரிதாக வளரும்போது CSS நிரல்களைப் பராமரிப்பது… Read More »

Fedora என்றால் என்ன?

ஃபெடோரா என்பது ஒரு லினக்ஸ் சார்ந்த இயங்குதளம் (உங்கள் கணினியை இயக்கத் தேவையான மென்பொருட்களின் தொகுப்புதான் இயங்குதளம்). மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்™, மேக் ஓஎஸ் X (Mac OS X™) போன்ற பிற இயங்குதளங்களுடன் சேர்த்தோ அல்லது அவற்றிற்கு மாற்றாகவோ ஃபெடோராவைப் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தவும் பிறரிடம் பகிர்ந்துகொள்ளவும் முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது. ஃபெடோரா ப்ராஜெக்ட் என்பது கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களும் அவற்றைப் பயன்படுத்துவோரும், அவற்றை உருவாக்குவோரும் இணைந்த ஓர் உலகளாவிய சமூகம். ஒரு சமூகமாய் வேலை செய்து,… Read More »

ஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம்

            ஈமேக்ஸ் (emacs) – இதை என்னவென்று அறிமுகம் செய்வது? வெறும் உரைதிருத்தி (text editor) என்று கூறிவிட முடியாது; அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்லது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள். ஆம், எழுத்துக் கோப்புகள் (text documents) தொடங்கி, JPEG, PNG போன்ற படக்கோப்புகள், PDF ஆவணங்கள் எனப் பல வகையான கோப்புகளைக் கையாள வல்லது.   கோப்புகளைப் பார்ப்பதும் திருத்துவதும் வெறும் சிறு பகுதிதான். இதைக்கொண்டு மின்னஞ்சல் அனுப்பலாம், கிட் (git) போன்ற… Read More »

ஈமேக்ஸ் உரைதிருத்தி – பாகம் 2

ஈமேக்ஸ் என்னும் சூப்பர்மேன் பற்றிய அறிமுகத்தையும் சில கட்டளைகளையும் கடந்த கட்டுரையில் பார்த்தோம். மேலும் கட்டளைகளைப் பயிலும் முன்பு, ஈமேக்ஸின் மேஜிக் ஷோ ஒரு நிரலின் (program) தரத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் முதல் அளவுகோல் வாசிக்குந்தன்மை (readability). Indentation சரியாக இல்லாத நிரல் நிரலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்தகைய ஒரு நிரலை ஒரே நொடியில் அழகான நிரலாக மாற்றிக் காட்டும் ஈமேக்ஸ். Indentation அறவே இல்லாத ஒரு நிரலை ஈமேக்ஸில் திறக்கவும். C–x அழுத்தியபின் h அழுத்தவும்.… Read More »

தமிழ்க் கணிமையும் கட்டற்ற மென்பொருளும்

கணினியில் தமிழ் என்பது மிக மெதுவாய் வளர்ந்து வரும் ஒரு துறை. தமிழ் எழுத்துக்களுக்கான ஒருங்குறிக் குறியீடுகள், எழுத்துருக்கள் போன்றவை ஓரளவு முதிர்ச்சி அடைந்திருந்தாலும் அவை போதிய அளவில் இல்லை என்பதே உண்மை. எடுத்துக்காட்டாக, ஒரு நல்ல சொல்திருத்தி (spell checker) தமிழுக்கு இதுவரையிலும் இல்லை. இத்துறைகளில் ஆராய்ச்சிகள் உள்பட பல முயற்சிகள் நடந்து வந்தாலும் பெரும்பாலானவை கட்டற்ற மென்பொருட்களாக இல்லை. இதுகுறித்து இந்திய லினக்ஸ் பயனர் குழு – சென்னை ஒருங்கிணைப்பாளர் [ilugc.in ] ஶ்ரீநிவாசன் கூறியதாவது: “சில… Read More »

ஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம்

ஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம்   ஈமேக்ஸ் (emacs) – இதை என்னவென்று அறிமுகம் செய்வது? வெறும் உரைதிருத்தி (text editor) என்று கூறிவிட முடியாது; அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்லது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள். ஆம், எழுத்துக் கோப்புகள் (text documents) தொடங்கி, JPEG, PNG போன்ற படக்கோப்புகள், PDF ஆவணங்கள் எனப் பல வகையான கோப்புகளைக் கையாள வல்லது. கோப்புகளைப் பார்ப்பதும் திருத்துவதும் வெறும் சிறு பகுதிதான். இதைக்கொண்டு மின்னஞ்சல்… Read More »