பொதுவாக, இயற்பியல் மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கு மட்டுமே, பரிச்சயமான ஒரு துறை தான் எலக்ட்ரானிக்ஸ்.
இதற்கு ஊடாகவே, பல நூற்றுக்கணக்கான பொறியியல் துறைகள் வலம் வருகின்றன.
இன்றளவும் கூட பலருக்கும், எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான எளிய தகவல்களை கற்றுக்கொள்ள வேண்டும்! எனும் ஆர்வம் இருக்கும்.
பள்ளிப் பாட புத்தகங்களைக் கடந்து, எலக்ட்ரானிக்ஸ் தொடர்பாக படித்து தெரிந்து கொள்ள பல வழிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
ஆனால், அவற்றில் பலவும் ஆங்கில மொழியிலேயே கிடைக்கின்றன.
கற்றுக் கொள்வதற்கு மொழி தடையாக அமைந்துவிடக் கூடாது! என்பதே கணியம் அறக்கட்டளையின் நோக்கம்.
அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், அறக்கட்டளையின் பொறுப்பாசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில், யாவருக்குமான எளிய எலக்ட்ரானிக்ஸ் எனும் தொடரை தொடங்கவிருக்கிறேன்.
வரும் நாட்களில், வாரத்திற்கு சில கட்டுரைகள் வீதம் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான அடிப்படைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
அடிப்படையில் பள்ளிப்படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் கற்றுக்கொள்ள திணறிய மாணவர்களுள் எனது பெயரும் அடங்கும்.
எனக்குப் புரிந்த மொழியில், மிகவும் எளிமையாக, சிறு சிறு உதாரணங்களோடு உங்களது அறிவை மெருகேற்ற வருகிறேன்!
இவ்வாறு எழுதப்படக்கூடிய கட்டுரைகள் முழுக்க முழுக்க தொடக்க நிலை எலக்ட்ரானிக்ஸ் குறித்த அடிப்படை அறிவை வழங்க உதவும்.
தற்போது நீங்கள் எந்த துறையை பின்பற்றிக் கொண்டிருந்தாலும் சரி! எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான அடிப்படை அறிவை உங்களால் எளிமையாக பெற முடியும்.
வெளியில் இருந்து பார்ப்பதற்கு மலை போல தெரியும் எலக்ட்ரானிக்ஸ் தகவல்களை! சிலை போல செதுக்கி உங்களுக்கு படைக்கவிருக்கிறேன்.
மேலும் கட்டுரைகள் குறித்து உங்களுக்கு கருத்துக்கள் இருப்பின், தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு தெரிவிக்கவும். உங்களது கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர்.செ
இளங்கலை இயற்பியல் மாணவர்
( தெ.தி.இந்து கல்லூரி – நாகர்கோவில்)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
கணியம் அறக்கட்டளை.
மின் மடல் முகவரி:-