BlissRoms எனும் கட்டற்ற இயக்கமுறைமை ஒரு அறிமுகம்

BlissRoms என்பது ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்டதொரு கட்டற்ற இயக்கமுறைமையாகும் ,இதுஅப்பாச்சி உரிமம் V2.0, குனு பொது உரிமம் 3.0 (GPLv3) ஆகிய உரிமங்களின் அடிப்படையில் பொதுமக்களின்பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது இது பல தனிப்பயனாக்குதலுக்கான விருப்பங்களையும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளையும் உள்ளடக்கியது.

நம்முடைய எல்லா சாதனங்களிலும் இயங்கக்கூடிய தரமான ROM/OS வழங்குவதிலும், எல்லா தளங்களிலும் ஒத்திசைவாக செயல்படுவதன் மூலம் தனிப் பயனாக்கங்களையும் விருப்பங்களையும் பாதுகாப்பதிலும் இது முக்கிய கவணம் செலுத்துகின்றது. எந்தவொரு சூழ்நிலையிலும் நாம் கற்பனை செய்யக்கூடிய அனைத்து வசதிகளையும் வழங்கஇது முயற்சிக்கின்றது. நம்முடைய பாரம்பரிய சாதனமான Bliss ROM கட்டமைப்பின் மேல், இதனுடைய GSI/Treble உருவாக்கங்கள் மிகவும் மும்முரமாக இணக்கமான சாதனங்களில் (Android Pie +) செயல்படுகின்ற திறன்கொண்டது.

இதனுடைய வசதி வாய்ப்புகள்:
1. இது வடிவமைப்பில் அதிக கவனம்செலுத்துகின்றது,
2. தனிப்பயனாக்கப் பட்ட அமைப்புகளை கொண்டுள்ளது,
.3. இது மிகுந்த செயல்திறன் கொண்டது,
4. இது குறைந்த மின்நுகர்வுடன் மின்கலணுடன் நட்புறவாக செயல்படுகின்றது,
5. கூடுலாக சேர்க்கப்பட்ட பாதுகாப்பினை கொண்டுள்ளது,
6. அருமையான இணக்கத்தன்மை கொண்டது

சுயநல இலக்குகளில் ஒரு பேரரசை உருவாக்குவதை விட நேர்மறையான செல்வாக்கின் மூலம்நல்ல சமூகத்தை உருவாக்குவது இதனுடைய குறிக்கோளாகும்என குறிப்பிடப்பட்டுள்ளது இதனை சமூக வளர்ச்சி ,மேம்பாட்டு நோக்கங்களுக்காக பல்வேறு இயக்க முறைமைகள் , மென்பொருள் செயல்திட்டங்களை உருவாக்கி பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள U.S.A. Federal 501c3 எனும் இலாப நோக்கற்ற அமைப்பானது
பராமரித்து வருகின்றது

குழு பயிற்சி,மேம்பாட்டு வாய்ப்புகள், சேவையகங்களை உருவாக்குதல்,சேவையகங்களைப் பதிவிறக்குதல், மென்பொருள்மேம்பாட்டு வடிவமைப்பு வாய்ப்புகளை வழங்குவதை உள்ளடக்கியது.ஆண்ட்ராய்டு மேம்பாடு தொடர்பான அனைத்து துறைகளிலும் தொழில் வல்லுநர்களை, வழிகாட்டிகளை உள்ளடக்கியது.

சேவைகளும் மூலக் குறிமுறை வரிகளும் பொதுமக்களுக்குத் திறந்திருக்கின்றது. அவைகளை தேவைப்படுபவர்களுக்க எந்த கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகின்ற பணிச்சூழலையும்,அவ்வாறு செய்ய அனுமதிக்கும் கருவிகளையும் இது வழங்குகின்றது. பயனாளர்கள் தங்களின் திறன்களை எவ்வாறு பணமாக்குவது என்பதை அறிவதற்கான கருவிகளையும் இது பயனாளர்களுக்கு வழங்க தயாராக இருக்கின்றது.
மேலும் விவரங்களுக்கு blissroms.com/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

%d bloggers like this: