எளிய தமிழில் C | புதிய தொடர் அறிமுகம்

நமது கணியம் இணையதளத்தில், பெரும்பாலான பிரபலமான நிரலாக்க மொழிகள்(programming languages) குறித்து தொடர்கள் வெளிவந்து, பின்பு புத்தகங்களாக கூட பதிப்பிக்கப்பட்டு இருக்கின்றன.

Html,css, javascript,ruby எனப்  பல்வேறுபட்ட மொழிகள் குறித்தும், தொடர்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால், கணினி நிரலாக்கம் என்று படிக்க செல்லும் ஒவ்வொரு மாணவருக்கு,ம் தொடக்கப்படியாக அமைவது “சி” எனப்படும் தொடக்க கணினி மொழிதான்.

உண்மையில், அனைத்து மொழிகளுக்கும் தலைமகனாகவும் இன்றும் “சி” விளங்குகிறது.

இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமான சி பிளஸ் பிளஸ்(C++) குறித்தும் படித்திருப்பீர்கள், பயன்படுத்தியிருப்பீர்கள்.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, கணினி நிரலாக்க உலகை ஆட்டுவித்து கொண்டிருக்கும், என்றும் இளமையான C மொழியின் அடிப்படைகள் குறித்து படிக்க வேண்டுமென அனைவருக்கும் ஆர்வம் இருக்கும்.

வழக்கமாக, துறை சார் நிபுணர்களே இது போன்ற தொடர் கட்டுரைகளை எழுதுவார்கள். ஆனால், இம்முறை உங்களோடு சேர்ந்து நானும் C மொழியை கற்றுக் கொள்ளப் போகிறேன். ஆம்! நானும் C மொழியை கற்றுக்கொள்ளவருக்கும் ஒரு மாணவன் தான்.

எளிய எலக்ட்ரானிக்ஸ் எனும் தொடரை வெற்றிகரமாக எழுதி வரும் நம்பிக்கையில், முதல் முறையாக C மொழியிலிருந்து என்னுடைய நிரலாக்கப் பயணத்தை தொடங்கவிருக்கிறேன்.

உங்களுடைய ஆதரவும், கருத்துக்களுமே என்னுடைய பயணத்தை எளிமையானதாக மாற்றும்.

தொடர்ந்து என்னுடைய இந்த தொடருக்கு ஆதரவு தாருங்கள்.

அடுத்து வரும் கட்டுரையில் C மொழியின் வரலாறு தொடர்பாக மேலோட்டமாக பார்த்து விடலாம்.

மேலும், வாரம் ஒரு நிரலாக்கம் என்னும் தலைப்பில் C மொழியில் சிறு சிறு நிரலாக்க குறிப்புகளையும், உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வரும் வாரங்களில் C கட்டுரைகளோடு சந்திப்போம்.

இந்த புதிய தொடர் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் அல்லது விருப்பங்கள் இருப்பின், தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றுங்கள்.

உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

என்றும் உங்கள் ஆதரவில்,

ஸ்ரீ காளீஸ்வரர்

மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com

%d bloggers like this: