Category Archives: கணியம்

கணியம் – இதழ் 12

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2012 ஆண்டில் கட்டற்ற மென்பொருட்கள் கணிப்பொறியை தாண்டி மொபைல் சாதனங்களை  பெரிய அளவில் சென்றடைந்தன. ஆண்ட்ராயிடு இயங்குதளம் முன்னிலையில் இருந்தாலும், அதில் உள்ள பெரும்பான்மையான மென்பொருட்கள் தனியுரிம மென்பொருட்களே. ஆண்ட்ராயிடு இயங்குதளத்திலும் அதிக அளவில் கட்டற்ற மென்பொருள்களை உருவாக்கவும் பயன் படுத்தவும் வேண்டும். Firefox OS மற்றும் ubuntu போன்றவை மொபைல் சாதனங்களில் முழுதும் கட்டற்ற மென்பொருள்களை கொண்டு வரும்… Read More »

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் –  சான்றிதழ்ப் படிப்பு Certificate Course in  Fundamental & Usage of Tamil Computing 02.12.12 – 28.12.12 எனும் ஒரு மாத காலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு டிசம்பர் மற்றும் மே மாதங்களில் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித் தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது. கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி,… Read More »

‘ Internal System Error ‘ Popup -ஐ உபுண்டுவில் விடுவிப்பது எப்படி?

Apport என்பது ஒரு பிழைத்திருத்தம் செய்யும் கருவி. இது தானாகவே சிதைவு அறிக்கைகளை (Crash Reports) உற்பத்தி செய்கிறது. Apport -ஆனது உபுண்டு 12.04 வெளியீட்டில் முன்னிருப்பாகவே செயல்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. உபுண்டு 12.04 பதிப்பினை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் ஒரு முறையாவது “Sorry, Ubuntu 12.04 has experienced an internal error” இந்த செய்தியினை பெற்றிருப்பீர்கள். Apport Tool -ல் அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியாது. இது உண்மையான பிழைகளை சரி செய்யாது. இந்த எரிச்சலூட்டும் பாப் அப்களை… Read More »

ஹெச்.டி.எம் . எல் 5 ஒரு பட விளக்கம் (2)

ஹெச்.டி.எம் . எல் 5 ஒரு பட விளக்கம் (2) சுகந்தி வெங்கடேஷ் ஹெ.டி.எம்.எல் 5 வருவதற்கு முன் இந்த விஷயங்களை காட்டுவதில் ஒவ்வோர் உலாவியும் ஒவ்வொரு விதமாகச் செயல்பட்டன. அது மட்டுமல்ல பயனாளிகள் எந்த உலாவிகள் பயன் படுத்துகிறார்கள் என்று இணையப் பக்கம் தயாரிப்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஒரு சில விஷயங்களை பயனாளிகள் பார்க்க, சில செருகிகள் [plugins] தேவைப்பட்டன. அவற்றை பயனாளிகள் தரமிறக்காவிட்டால் இணையப் பக்கங்கள் சரியாக வேலை செய்ய வாய்ப்பு இல்லை. இணைய… Read More »

தகவல் தொழில்நுட்ப சட்ட முரண்கள்

தகவல்தொழில்நுட்பசட்டமுரண்கள் சில கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிற பெரும்பாலான தொலைக்காட்சி மற்றும் இன்னபிற செய்தி ஊடகங்களுக்கு மத்தியில், நமது எண்ணங்களை சக மனிதர்களுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே ஊடகம் இணையம் தான். அச்சு ஊடகங்களில் எழுதிட முடியாத கோடிக்கணக்கான மக்கள், தங்களது கருத்துக்களை எளிதில் எழுதி விடமுடிகிறது இணையத்தில். அச்சு ஊடகங்கள் எழுதாமல் விட்டவற்றையெல்லாம் பதிவுலகில் பலரும் எழுதிவருவதைக்காண முடிகிறது. 1. நமக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று ரசிக்கும்படியாக இருக்கிறதென்றால், நம்முடைய நண்பர்களுக்கு… Read More »

MySQL-தகவல்களை சேமித்தல்

பாகம்: 3 MySQL-தகவல்களைசேமித்தல் இந்தப் பாகத்தில் அடிப்படை SQL மற்றும் MySQL commands -ஐப் பயன்படுத்தி எவ்வாறு data-வை table-க்குள் செலுத்துவது என்று பார்க்கலாம். ஆனால் programs வழியாக data-வை table-க்குள் செலுத்துவது பற்றி இப்போது அறிந்து கொள்ளத் தேவையில்லை. அதைப் பற்றி பின்னர் பார்க்கலாம். Data-வைtable-க்குள்செலுத்துதல்:- INSERT table_name (list, of, columns) VALUES (list, of, values); INSERT book (title, author, cond) VALUES (‘Where the Wild Things Are’,’Maurice Sendak’,… Read More »

பி.டி.எஃப் கியூப் (Pdfcube) – முப்பரிமாண பி.டி.எஃப் (PDF) தோற்றம்

பி.டி.எஃப் கியூப் (Pdfcube) – முப்பரிமாண பி.டி.எஃப் (PDF) தோற்றம் பி.டி.எஃப் கியூப் அற்புதமான சிறப்பியல்புகள் கொண்ட, ஒரு வேகமான மற்றும் குறைந்த கோப்பு அளவு உள்ள பி.டி.எஃப் காண்பிப்பான் ஆகும். முப்பரிமாண சுழலும் கன சதுர தோற்றத்தை உருவாக்க இது பாப்ளர் (Poppler) மற்றும் ஓபன் ஜி.எல். (OpenGL) ஐ பயன்படுத்துகிறது. இது பார்ப்பதர்க்கு அழகான தோற்றங்களுடன் பி.டி.எஃப் களை காண உதவுகிறது (சிறப்பாக லேடெக்ஸ், பீமர் மற்றும் பிரோஸ்பெர் காட்சியளிப்பு(presentation)). முப்பரிமாண சுழலும் கன… Read More »

பைதான் – கன்ட்ரோல் ஃபிளோ (Control Flow)

4.கன்ட்ரோல்ஃபிளோ(Control Flow) முன்பு கண்ட while மட்டுமின்றி, பைதானில், பிற மொழிகளில் இருப்பது போலவே. பல Control Flow கருவிகள் உள்ளன. அவை சற்றே மாறுபட்டு, புதிய தன்மைகளுடன் உள்ளன. 4.1 If statement: If. இது மிகவும் பிரபலமான ஒரு Control Flow statement. >>> x = int(raw_input(“Please enter an integer: “)) Please enter an integer: 42 >>> if x < 0: … x = 0… Read More »

விக்கிபீடியா கட்டுரைகளை இணைய இணைப்பின்றி காண உதவும்Kiwix மற்றும் Okawix

விக்கிபீடியா – இலவச கலை களஞ்சியம் (Wikipedia – The Free Encyclopedia) – இது இன்று இணையத்தை பயன்படுத்துபவர்கள் அனைவராலும் நன்கு அறிந்ததே! விக்கிபீடியா கட்டுரைகள் Creative Commons கீழ் உள்ளதால் இவற்றை சுதந்திரமாக பயன்படுத்தவும் நகலெடுக்கவும் இயலும். மேலும், விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் கட்டுரைகளை எழுத முடியும். இதன் காரணமாக தற்போழுது விக்கிபீடியாவில் 30 இலட்சத்திற்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன. முதல் பத்து இணைதளங்களில் விக்கிபீடியாவும்ஒன்று. (www.onlinemba.com/blog/wikipedia-facts/) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவராலும்… Read More »

GIMP-ல் False Depth of Field(மாய மண்டலவாழம்) ஒரு விளக்கம்

   இப்பகுதியில் GIMP—ல் Depth Of Field உருவாக்கம் பற்றி அறியலாம். பிம்பங்களை மங்கலாக்கி ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை முன்நிறுத்தும் முறையைத் தான் photography—ல் Depth Of Field(DOF) அல்லது மண்டலவாழம் என்போம். DOF விளக்கம்: ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து, “ஒளியியலில், சிறப்பாக திரைப்படம் மற்றும் புகைப்படத்துறை சார்ந்தவற்றில், DOF என்பது, ஒரு காட்சியில், மிக அருகில் தோன்றும் உருவத்தின் ஏற்றுக்கொள்ளத்தக்க தெளிவான இடைவெளி ஆகும். ஒரு லென்சில் துல்லியமாக ஒரே ஒரு தூரத்தை தான் கவனிக்க முடியும்… Read More »