Category Archives: ச.குப்பன்

ஒரு பைதான் பயன்பாட்டை புரலராக செய்வதற்கானகட்டணமற்ற வழிகள்

அறிமுகம்: ஒரு மாணவராகவோ அல்லது பயன்பாடுகளை உருவாக்குவதன் செயல்பாட்டுப் பக்கத்தைக் கற்கத் தொடங்குபவராகவோ இருக்கலாம். பயன்பாட்டை வளாககணினியில் உருவாக்கிபரிசோதிப்பதன் மூலம் ஏற்கனவே முதல் படிமுறையை செய்துவிட்டோம். இப்போது, அதை எங்கிருந்தும் அணுகுவதற்காக மேககணினியில் வெளியிட விரும்புவதாககொள்க. பிரச்சனை என்னவென்றால், புதிதாகத் தொடங்கும் போது மேககணினியின் புரவலராக செய்வது சிக்கலானதாகவும் விலை உயர்ந்ததாகவும் உணரப்படலாம். இந்தக் கட்டுரையில், பைதானின் இணையஅல்லது பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API) பயன்பாட்டை முன்பணம் செலுத்தாமல் புரவலராக செய்ய அனுமதிக்கின்ற சில எளிமையான கட்டணமற்ற… Read More »

குவாண்டம் கணினியின் பாய்ச்சல்: 2026 ஆம்ஆண்டின்பதிப்பு-3

இந்த கட்டுரையானது குவாண்டம் கணினித்துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய திருப்புமுனைகளுக்கான ஒரு தொடக்கநிலை வழிகாட்டியாகும் பல பத்தாண்டுகளாக, குவாண்டம் கணினிகள், விண்வெளியை விடக் குளிரான வெப்பநிலையில் இயங்க வேண்டிய, எளிதில் பாதிப்படையக்கூடிய ஆய்வகச் பரிசோதனைகளாகவே இருந்துவந்தன. இன்று, 2026-ல், நாம் “தர்க்கரீதியான கியூபிட் சகாப்தத்தின்” பிறப்பைக் காண்கிறோம். நாம் இனி வெறுமனே அதிக கியூபிட்களைச் சேர்க்கவேண்டியதில்லை; வரலாற்றில் முதன்முறையாக அவற்றை நம்பகத்தன்மையுடன் செயல்பட வைக்கின்றோம். “இரைச்சல்(Noisy)” சகாப்தத்தின் முடிவு சமீப காலம் வரை, குவாண்டம் கணினிகள் NISQ என… Read More »

ஆண்ட்ராய்டு கைபேசியை மேசைக்கணினி பயன்முறையுடனான(desktop mode) மீச்சிறு கணினியாக மாற்றுவது எவ்வாறு

மேசைக்கணினி ,போன்ற அமைவிற்குள் மூளையாக(brains) இருக்கும் ஆண்ட்ராய்டு கைபேசி என்ற கருத்தமைவு கடந்த பத்தாண்டிற்கு முன்பு பிரபலமடையவில்லை, ஆனால் இந்த வழிமுறை இன்னும் நிறைய நம்பிக்கைக்குரியதாகின்றது. உண்மையில், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் கைபேசியில்”மேசைக்கணினியின் பயன்முறை(desktop mode)” திறக்கப்படுவதற்கு காத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்புகூட உள்ளது. அதை எவ்வாறு செயல்படுத்தி பயன்பெறுவது என இப்போது காண்போம். முற்காலத்தில், Motorola Atrix 4G, Asus PadFone போன்ற கைபேசிகளுக்கு அவற்றில் சிறந்தமேசைக்கணினி வசதிவாய்ப்புகளைப் பயன்படுத்த விலையுயர்ந்த பாகங்கள் தேவைப்பட்டன. இப்போதெல்லாம்,… Read More »

சிறிய மொழி மாதிரிகள் (SLM)அறிமுகம்

அறிமுகம் தற்போது செய்யறிவு(AI) பயன்பாடு மாறிகொண்டே வருகிறது. புதிய வரையறைகளை உடைக்கும் பெரிய மொழி மாதிரிகளில் தலைப்புச் செய்திகள் கவனம் செலுத்தும் அதே வேளையில், சிறிய மாதிரிகள் பெரும்பாலான அன்றாட பணிகளை அதனுடையசெலவின் ஒரு பகுதியிலேயே கையாள முடியும் என்பதை உற்பத்தி குழுக்கள் கண்டுபிடித்துள்ளன. ஒரு அரட்டையறையைப் பயன்படுத்தியிருந்தால், ஒரு குறிமுறைவரிகளின் உதவியாளரை உருவாக்கியிருந்தால் அல்லது தானியங்கி ஆவண செயலாக்கத்தை உருவாக்கியிருந்தால், நூற்றுக்கணக்கான பில்லியன் அளவுருக்கள் கொண்ட மாதிரிகளுக்கான மேககணினியின் APIஇன் அழைப்புகளுக்கு  பணம் செலுத்தியிருக்கலாம். ஆனால் 2026 இல் பணிபுரியும்… Read More »

மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவு(AI)ஆனது நமக்கு ஒரு உதவியாளர்ஆகும், மாற்று அன்று

மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவின் பங்கு வேகமெடுத்து வருகிறது, ஆனால் மனிதனின் முடிவெடுக்கும் திறனுடன் இணையும்போதுதான் அதன் உண்மையான வலிமை வெளிப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அது வளர்ந்து வந்த காலகட்டத்தில், மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவின்(AI) பங்கு ஒரு பரிசோதனை முயற்சியாகவே இருந்தது. அது அடிப்படையில் சிறிய பணிகளைத் தானியக்கமாக்குவதற்கான ஒரு துணைவனாகவே இருந்தது. இன்று, மென்பொருளைக் கருத்தாக்கம் செய்யும், உருவாக்கும் , மேம்படுத்தும் விதத்தை அது உண்மையில் மாற்றியமைக்கிறது. Zoho-வின் ZIA , Anthropic-இன் Model Context… Read More »

நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்திடுகின்றமென்பொருட்களுக்கு ஆற்றல்வழங்குகின்ற திறமூலக் கருவிகள்

“திறமூலம்(open-source)” என்ற சொல் 1990-களின் பிற்பகுதியில் தான் புழக்கத்திற்கு வந்தது என்றாலும், 1950-கள் , 1960-களில் மென்பொருளின்நிரலாக்கம் பெரும் வளர்ச்சி கண்ட காலத்திலிருந்தே இந்தக் கொள்கை இருந்து வருகிறது. தொடக்ககால உருவாக்குநர்கள் தங்கள் குறிமுறைவரிகளையும் நெறிமுறை வடிவமைப்புகளையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்; 1969-ல் இணையத்தின் வருகையுடன் இந்த செயல்முறை மேலும் விரிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது திறமூல மென்பொருள் எங்கெங்கும் பரவியுள்ளது; அது வெளிப்படையாகத் தெரிந்தாலும் மறைந்திருக்கிறது, அதே சமயம் திரைக்குப் பின்னால் ஒரு புகழ்பெறாத (பிரபலமாகாத) கதாநாயகனாகவும்… Read More »

இந்த நவீன லினக்ஸ் செயலிகளை முயற்சித்திடுக

லினக்ஸ் செயலிகள் பற்றி நம்முடைய மனதில் இன்னும் சாம்பல் நிற விண்டோக்களும், கட்டளை வரி சார்ந்த சிக்கல்களுமாகவே இருந்தால், இந்த புதிய நவீன செயலிகள் அதை மாற்றக்கூடும். இப்போது அறிமுகப்படுத்தும் இந்த மூன்று செயலிகளும், ஒரு புதிய தலைமுறை லினக்ஸ் மென்பொருள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதைப் பிரதிபலிக்கின்றன—ஒரு உண்மையான செயலிகளின் அங்காடியைப் போன்று உருவாக்கப்பட்ட Flatpak store,ஆனது உள்ளூர் செய்யறிவால் இயக்கப்படும் இணையஇணைப்பில்லாமலேயே படியெடுப்பதற்கான ஒருகருவியாகும், இது வேகமான, நேர்த்தியான, உண்மையாகவே நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட… Read More »

கூகிள் இயக்ககத்திற்கான(Google Drive) லினக்ஸின் மாற்றுகள்

கூகிள் இயக்ககம் ஒரு சக்திவாய்ந்த , வசதியான இணைய பயன்பாடாகும். கெடுவாய்ப்பாக, லினக்ஸ் ஒருபோதும் அதன் சொந்த அதிகாரப்பூர்வ, ஆதரிக்கப்பட்ட இயக்கக பயன்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்ப உதவும் 6 சக்திவாய்ந்த லினக்ஸ் மாற்றுகள் பின்வருமாறு. அதிகாரப்பூர்வ லினக்ஸ் வாடிக்கையாளர் எவரும் இல்லாததால், தீவிர பயனர்கள் ஒத்திசைவுக்கு மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது. கூடுதலாக, தனியுரிமையை மதிக்கின்றோமெனில், தரவு சேகரிப்பு கவலைகளின் காரணமாக கோப்புகளை கூகிளின் சேவையகங்களில் சேமிக்க விரும்பாமல் போகலாம்.ஒரு திறமூல ஆர்வலராக… Read More »

ஒவ்வொரு கணினியிலும் நிறுவுகை செய்திடுகின்ற முனைம கருவிகள்

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு விண்டோ அல்லது லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படுகின்ற கணினியிலும் நான்கு முனைம கருவிகள் கண்டிப்பாக தேவையாகும். ஒரு மென்பொருள் பொறியாளராகவும், தொழில்நுட்ப வலைப்பதிவராகவும் எனது அனுபவத்தின் போது, ​​புதிய லினக்ஸின் நிறுவுகைகள், தற்காலிக பரிசோதனை சூழல்கள் , சுத்தமான விண்டோ அமைவுகள் போன்ற என்னால் எண்ண முடியாத அளவுக்கு அதிகமான கணினிகளை அமைத்துள்ளேன். அவ்வாறான சூழலில் காலப்போக்கில், உற்பத்தித்திறன்ஆனது பெரிய தவறுகளில் இழக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்தேன், ஆனால் நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் நிகழும்… Read More »

தன்னையே செயல்படுத்திகொள்கின்ற பைதானின் செயலி(Function)

ஆவணத்தின்சரம்(docstring) செயல்படுத்துவதாக இருக்கும் ஒரு பைதான் செயலியை எழுத முடிந்தால் என்ன செய்வது? உள்ளீடுகள், மீள்வு(return) வகையை வரையறுக்கின்றோம், மேலும் “correct” என்றால் என்ன என்பதை வரையறுக்கும் சரிபார்ப்பு தர்க்கத்தை எழுதுகின்றோம். மீதமுள்ளவற்றை செய்யறிவு(AI) ஆனது தானாகவே கையாளுகிறது. செய்யறிவு(AI) ஆனது செயலிகளுக்குப் பின்னால் உள்ள நிரலாக்க மாதிரி அதுதான், இது Strandsஎனும் ஆய்வகத்தின் புதிய பரிசோதனை நூலகமாகும். Strands ஆய்வகம் என்பது ஒரு புதிய GitHub அமைப்பாகும், அங்கு Strandsஇன்முகவரின் SDK இன் பரிசோதனை வசதிகள்… Read More »