Category Archives: கணியம்

வருங்காலத்தை ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் – 1| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 45

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்பாக அடிப்படையில் இருந்தே பார்த்து வருகிறோம். ஆனால், தற்கால அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் துறையானது மிக வேகமாக வருங்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பங்களால், பதிலீடு(replace) செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் காலவெளிக்கு ஏற்ப, எலக்ட்ரானிக்ஸ் துறையும் தன்னை தகவமைத்துக் கொள்ள தவறுவதில்லை. அப்படி வருங்காலத்தைக் கலக்கப்போகும், வருங்காலத்தில் நம்மை ஆளப்போகும் சில எலக்ட்ரானிக்ஸ் துறைகள் தொடர்பாகத்தான் இந்த சுவாரசிய கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம். நீங்கள் இதுவரை படித்து எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளோடு ஒப்பிடும்போது இந்த… Read More »

நாம் டைப் செய்வது கணினிக்கு எப்படி தெரிகிறது? | ASCII CODE|லாஜிக் எலக்ட்ரானிக்ஸ் சங்கமம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 43

எனக்குள் பல ஆண்டுகளாக ஒரு சந்தேகம் இருந்தது. தட்டச்சு பொறிகளில் நாம் உள்ளீடை வழங்கும்போது, அந்த உள்ளீடை எப்படி கணினி புரிந்து கொள்ளும் என்று எனக்கு நீண்ட காலமாக நீடித்த ஒரு சந்தேகம் இருந்தது. சிறுவயதில் எல்லாம் தட்டச்சு பொறிக்குள் M என்றால் அதற்குள்ளும் M என்கிற வடிவத்தில் எழுத்து இருக்கும், அந்த M வடிவத்திலேயே மின்சாரம் சென்று அதற்குரிய வெளியீடு கிடைக்கும் என்றெல்லாம் கனவு கண்டு கொண்டு இருந்தேன். ஆனால், அதற்கான பதிலை கடந்த கடைசி… Read More »

சில்லுவின் கதை 16. எதிர்காலம் ஒளிமயமாக இருக்க இப்போதே தீயை மூட்ட வேண்டும்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) 17:16 வரை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். நாட்டிற்குள் புனைதல் ஆலைகள் இருப்பது தேசியப் பாதுகாப்புக்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்தோம் 17:17 பின்னர் 2021-ல் கோவிட் நம்மைத் தாக்கியது. பல நாடுகளுக்குத் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வழங்கியதால், இந்தியா உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும், சில்லுகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் விளைவாக… Read More »

சில்லுவின் கதை 15. மதத் தடைகளால் தொழில் புரட்சியையே கோட்டை விட்டோம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) வெளிப்புறத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றியே புகார் செய்யாமல் தன்னிலையை ஆய்வு செய்தல் 0:00 பிரபல வானியற்பியல் (astrophysicist) அறிஞர் பேராசிரியர் ஜயந்த் வி. நர்லிகர் (Prof. Jayant V. Narlikar), புரட்சிகரமான பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். நான் அவரது மின்னஞ்சல் குழுவில் இணைந்திருக்கிறேன். நான் “சில்லுவின் கதை” -யில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது,… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 4

சில அடிப்படைகள் hello world என்று அச்சிடுவது மட்டும் போதாது. அதற்கும் மேலே ஏதாவது செய்தால் நன்றாக இருக்குமே. பயனரிடம் ஏதாவது கேள்வி கேட்கலாம். பதில் வாங்கி, அதில் ஏதாவது மசாலா சேர்த்து, புது கலவையாக்கித் தரலாமா? அதற்கு, பைத்தானில் உள்ள Constant, Variable ஆகியவை உதவும். அவை பற்றி இங்கே காணலாம். அதற்குள்ளே புது வார்த்தைகளைக் கண்டு பயந்து விட வேண்டாம். நான் முதலில் இவற்றைக் கண்டு மிகவும் கலங்கிப் போன நாட்கள் பல. செந்தமிழும்… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 3

முதல் நிரல் கணினி நிரல் உலகில், காலம் காலமாக செய்யப்பட்டு வரும் ஒரு சடங்கு ஒன்று உள்ளது. எல்லா கணினி நிரல் நூல்களிலும் இதைக் காணலாம். என்ன? அறிவியலிலும் சடங்கா? ஏன் இப்படி? ஆம். ஆனால் இங்கு நாம் எந்தக் கடவுளையும் வணங்கத் தேவையில்லை. பூசைகள் ஏதுமில்லை. முதல் நிரலாக, ‘Hello World’ என்பதை திரையில் அச்சடிப்பதே முதல் நிரல். இதுதான் இத்துறையின் ஒரு சின்ன சடங்கு. சாதாரணமாகவே நாம், சடங்கு என்று வந்து விட்டால், எந்தக்… Read More »

சில்லுவின் கதை 14. மூரின் விதிக்கு மேலும் 25 ஆண்டுகளுக்கு உயிர் கொடுத்தது

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) டிரான்சிஸ்டர்களின் அளவை மிகவும் குறைக்கும்போது கசிவு மின்னோட்டம் பல மடங்கு அதிகரிக்கிறது 0:00 முந்தைய நிகழ்வில் நாம் மீப் புறஊதா (EUV – Extreme ultraviolet) ஒளி பற்றிப் பார்த்தோம். நாம் என்ன செய்ய முயற்சிக்கிறோம்? டிரான்சிஸ்டரின் நீளத்தைக் குறைக்க வேண்டும். ஏன் நாம் அதைச் செய்ய வேண்டும்? ஒரு சதுர… Read More »

USB cable க்குள் என்னதான் இருக்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 41

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறித்து பார்த்து வருகிறோம். தற்கால கணினி மற்றும் மொபைல் துறையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது USB (யு.எஸ்.பி)என அழைக்கப்படும் universal serial Bus தொழில்நுட்பம் தான். 1995 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்,IBM உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் இணைந்து யு.எஸ்.பி தொழில்நுட்பத்தை வடிவமைக்க தொடங்கியது. இதன் பயனாக, 1996 ஆம் ஆண்டு usb தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தில் version ஒன்று தொடங்கி இப்பொழுது… Read More »

சில்லுவின் கதை 13. எல்லாம் நாமே தயாரிக்க வேண்டியதில்லை எனும் வெற்றிக் கொள்கை

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) முதன்முதலில் காண்புறு (visible) ஒளியைப் பயன்படுத்தினர் 0:00 ஒளி அரித்தல் (Photolithography) என்பது அடிப்படையில் ஒளியைக் கொண்டு ஒரு சமதளத்தில் தேவையான வடிவமைப்பை அரித்து எடுத்தல் (etching). இதை எளிமையாகப் பார்க்கும்போது, ஒளியை ஒரு கத்தியைப் போல் பயன்படுத்தி வெட்டி எடுக்கிறோம் என்றும் சொல்லலாம். சிலிக்கான் வில்லைப் பரப்பில் ஒளியைப் பயன்படுத்தி… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 2

வீடியோ எப்போது? ‘உங்க பைத்தான் கட்டுரை அருமையாக இருக்காமே. வீடியோ ஏதாவது தறீங்களா? நித்யாவையும் GenAI வீடியோ போட சொல்றீங்களா?’ என்று நேற்று ஒருவர் கேட்டார். ‘ஏங்க. இப்போதான் முதல் கட்டுரையே எழுதியிருக்கேன். அதைப் படிச்சிட்டீங்களா?’ ‘இல்லீங்க. அதுக்கெல்லாம் நம்மால முடியாதுங்களே?’ ‘ஐயோ. உங்களுக்கு படிக்கத் தெரியாதா?’ ‘அட. காலேஜ் படிச்சிருக்கேன். ஆனா இதையெல்லாம் படிக்க எனக்கு வராதுங்க. தமிழ் படிப்பது கஸ்டம்.’ ‘ஓ. அப்படியா? இந்தாங்க. ஆங்கிலப் புத்தகம் . A byte of Python… Read More »