Category Archives: கணியம்

சில்லுவின் கதை 12. ஒரு நல்ல பொறியாளர் மேலும் இருவரைக் கொண்டு வரட்டும்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சீன அறிவியலாளர்கள் ஆராய்ச்சியை விட்டு வயல்களில் வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டது 0:00 தைவான் என்பது சீனாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மிகச் சிறிய தீவு. ஹாங்காங் அதற்கு அருகில் உள்ள இன்னும் சிறிய புள்ளி. இவற்றைப் பார்த்தால் நமக்கு என்ன தெரியவரும்? ஒரு நாட்டின் அளவு முக்கியமல்ல, அங்கு வாழும்… Read More »

சில்லுவின் கதை 11. இடைவிடாத தொழில்நுட்ப மேம்பாடுதான் உயிர்மூச்சு

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லுகளைத் தொகுப்பதோடு நிற்காமல் உயர் தொழில்நுட்பத்தில் ஈடுபடத் தைவான் இலட்சியம் 0:00 புனைவு ஆலை இல்லாத (fabless) முறையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள நிகழ்காலத்திற்கு ஒரு சிறிய பயணம் மேற்கொண்டோம். வடிவமைப்பு நிறுவனங்கள் உற்பத்தி வசதிகளில் பெரும் முதலீடு செய்வதற்குப் பதிலாகத் தயாரிப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தப் புனைவு ஆலை இல்லாத முறை… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 1

அனைவரும் தாய் மொழி, ஆங்கிலம், கூடவே மூன்றாவது மொழியாக பைத்தான் ( லினக்சுடன் ) கற்றுக் கொண்டால், இந்த உலகம் இன்னும் இனிமையானதாகும். மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வழி ஏற்படும். அந்தப் பொற்காலம் விரைவில் வரட்டும்.

என்று கூறியபோது, மகன் வியன் வியந்து போனான்.

‘அம்மா உனது பிறந்தநாளுக்கு என்ன பரிசு தந்தார்?’
‘GenAI பற்றிய ஒரு தொடர் இன்று இணையத்தில் எழுதத் தொடங்கியுள்ளார். அதுவே சிறந்த பரிசு.’
‘அம்மா எழுத்தாளரா?’
‘ஆமா. திருமணமாகி 14 ஆண்டுகளில், 14 நூல்கள் எழுதியுள்ளார்.’
‘ஆ. நான் பெரியவனாகி அவற்றை எல்லாம் படிப்பேன்.’
‘நீயும் எழுத வேண்டும்’
‘எழுதுவேன் எழுதுவேன். நீங்கள் எத்தனை புத்தகம் எழுதியுள்ளீர்கள்?’

பைத்தான் கற்க ஒரு சிறந்த வாய்ப்பு

பைத்தான் கற்பதற்கு பல்வேறு மாணவர்களும் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருப்பீர்கள். பல்வேறு இணைய வாய்ப்புகளின் மூலமாகவும், பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும் கற்றுக் கொள்ள முடிந்தாலும் தெளிவாக புரிந்து கொள்வதில் சிரமங்கள் நீடிக்கும். மேலும், பொருளாதார சூழல்களால் சரியாக வாய்ப்பு அமையாமல் கற்றுக்கொள்ள முடியாது போனவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்கால செயற்கை நுண்ணறிவு யுகத்தில் பைத்தான் போன்ற கணினி மொழிகளை கற்பது இன்றியமையாதது. நீங்கள் எந்த துறையில் இயங்கிக் கொண்டு இருந்தாலும், பைத்தான் போன்ற கணினி… Read More »

C மொழியின் சில முக்கியமான குறிச்சொற்கள் | எளிய தமிழில் சி

எளிய தமிழில் சி மொழி தொடர்பான கட்டுரைகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது சில முக்கியமான சீன் மொழியின் குறிச்சொற்கள் (keywords) குறித்துதான். இந்த குறி சொற்களை கவனமாக படித்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் அடுத்தடுத்து பார்க்கப் போகிற நிரல் ஆக்கங்களுக்கு இத்தகைய குறிச்சொற்கள் முக்கியமானது. மொத்தமாக சீ மொழியில் 32 குறிச்சொற்கள் இருக்கிறது. இந்த அனைத்து குறிச்சொற்களையும் முதலிலேயே கற்று வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை போகப் போக ஒவ்வொரு… Read More »

சில்லுவின் கதை 10. சொந்தப் புனைவு ஆலை இல்லாதத் தயாரிப்பு நிறுவனங்கள்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லு தயாரிக்கும் செயல்முறை உயர்நிலைக் கண்ணோட்டம்  0:30 ஏன் சொந்தப் புனைவு ஆலை இல்லாத (Fabless) தயாரிப்பு நிறுவனம் அவசியம்? இதற்குப் பதில் கிடைக்க, சில்லுகள் தயாரிக்கப்படும் செயல்முறையை முதலில் பார்ப்போம். IC வடிவமைப்பாளர்கள் கேடன்ஸ் (Cadence), மென்டர் கிராபிக்ஸ் (Mentor Graphics), சினாப்சிஸ் (Synopsis) ஆகியவற்றின் EDA – Electronic… Read More »

சில்லுவின் கதை 9. GPS க்கு மாற்றாக இந்திய சில்லுவை வடிவமைக்கிறோம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லுகளின் மிகப்பெரிய ஆற்றலை அமெரிக்க ராணுவ ஆய்வகம் முன்கூட்டியே உணர்ந்தது 0:35 DARPA (Defence Advanced Research Projects Agency) என்பது அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி அமைப்பாகும். சில்லுகளுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். அவர்கள் நிதியளித்த முதல் திட்டங்களில் ஒன்று லின் கான்வே (Lynn Conway) தலைமையில் 1981… Read More »

கூகுளுக்கு மாற்று | குறுந்தொடர் அறிமுகம்

கணியம் இணையதளத்தில் கட்டற்ற பல தகவல்கள் குறித்தும் நெடுந்தொடர்கள் எழுதப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், நான் முதன் முதலில் எழுத ஆரம்பித்த தொடர் தான்”எளிய தமிழில் எலக்ட்ரானிக்ஸ்”. நானே எதிர்பாராத வகையில், எலக்ட்ரானிக்ஸ் தொடரில் மட்டும் 35க்கும் அதிகமான வெற்றிகரமான கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். அதனோடு சேர்ந்து சில குறுந்தொடர்களை எழுதி இருக்கிறேன். தற்போதைக்கு எளிய தமிழில் சி, கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் உள்ளிட்ட தொடர் வரிசையிலும் கட்டுரைகள் எழுதி வருகிறேன். ஆனால், கணியத்தில் என்னுடைய எழுத்து… Read More »

LLM-களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு : பகுதி 2

Large Language Models (LLMs) என்பவை மனித மொழியைப் புரிந்துகொண்டு, அதைப் பகுப்பாய்வு செய்து, உகந்த பதில்களை உருவாக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்கள் ஆகும். இவை மிகப்பெரிய அளவிலான நியூரல் நெட்வொர்க்குகள் (Neural Networks)-ஆக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, LLM-களின் கட்டமைப்பு, பயிற்சி முறைகள், மற்றும் செயல்பாடுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம். 1. LLM-கள் எப்படி வேலை செய்கின்றன? Large Language Models (LLM-கள்) என்பவை மனித மொழியைப்… Read More »

AND கதவின் தலைகீழி NAND| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 36

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் கடந்த சில வாரமாக லாஜிக் கதவுகள் குறித்து பார்த்தோம்.அந்த வகையில், நம்முடைய தொடக்க கட்டுரைகளிலேயே AND கதவு குறித்து விவாதித்து இருந்தோம். இந்த AND கதவின் தலைகீழி என அழைக்கப்படும் கதவு தான் NAND கதவு. நீங்கள் AND கதவில் இரண்டு உள்ளீடுகள் அல்லது மூன்று உள்ளீடுகளை கொடுத்து அதற்கு எத்தகைய வெளியீடுகளை பெறுகிறீர்களோ! அதற்கு தலைகீழான வெளியீடு இந்த NAND கதவில் உங்களுக்கு கிடைக்கும். உதாரணமாக, AND கதவில் அனைத்து உள்ளீடுகளும்… Read More »