Category Archives: ச.குப்பன்

புதிய ஆண்ட்ராய்டு கைபேசியில் எப்போதும் முதலில் நிறுவுகை செய்திடவிரும்புகின்றகட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுகள்( apps)

புதிய ஆண்ட்ராய்டு கைபேசியை கட்டமைப்பதுஎனும் செயல் நமக்கு எப்போதுமே உற்சாகமாக இருக்கும், ஆனால் துவக்க அமைப்பை முடித்தவுடன், நமக்குப் பிடித்த பயன்பாடுகளை நிறுவுகைசெய்வது பொதுவாக அடுத்த படிமுறையாகும். இந்த பயன்பாடுகள்(apps) அடிப்படையில் நம்முடைய முழு அனுபவத்திற்கும் ஏற்றவாறு அமைகின்றன. stock apps என்பதுஅடிப்படைகளை உள்ளடக்கி யிருந்தாலும், உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்கவும், தனியுரிமையை மேம்படுத்தவும், பயன்பாட்டினை மேம்படுத்தவும் கூடிய கட்டற்றகட்டணமற்ற கருவிகளுக்கு பஞ்சமில்லை. வழக்கமான பணிகளை தானியக்கமாக்குவது , கோப்புகளைப் பகிர்வது முதல் படத்தில் திருத்தத்தை கையாளுதல், மறைக்கப்பட்ட… Read More »

குவாண்டம் கணினி அறிய முடியாத கேள்விகளுக்கு பதிலளிக்கிறது என்றால், அவை சரி என்று நமக்கு எவ்வாறு தெரியும்

இயற்பியல், மருத்துவம், குறியாக்கவியல் போன்ற துறைகளில் தீர்க்க முடியாததாகத் தோன்றும் பல்வேறுபிரச்சினைகளைத் தீர்க்க குவாண்டம் கணினி உறுதியளிக்கிறது. ஆனால் முதலில் பெரிய அளவிலான, பிழை இல்லாத வணிக சாதனத்தை உருவாக்கும் போட்டி சூடுபிடித்துள்ள தற்போதைய சூழ்நிலையில், பின்வருமாறான கேள்வி நம்முன் எழுகின்றது: இந்த ‘சாத்தியமற்ற’ தீர்வுகள் சரியானவை என்பதை நாம் எவ்வாறு சரிபார்க்க முடியும்? ஒரு புதிய Swinburne ஆய்வு இந்த முரண்பாட்டைச் சமாளிக்கிறது. இந்த ஆய்வறிக்கை குவாண்டம் அறிவியல் ,நுட்ப இதழில் வெளியிடப்பட்டுள்ளது. “உலகின் அதிவேக… Read More »

அனைத்துவகைகளிலான தரவுகளையும் கையாளுவதற்காக குவாண்டம் எனும்கணினி வருகிறது. அதிலிருந்துபாதுகாப்பாக இருப்பது எவ்வாறு

ஏற்கனவே காலாவதியான குறியாக்கமாக இருப்பதை தொடர்ந்து இப்போதைய குவாண்டம் பாதுகாப்புக்கு மாறாவிட்டால். குவாண்டம் அதை உடைத்துவிடும் – குவாண்டம் கணினி தொழில்நுட்பமானது அதன் செயல்பரப்பை மறுவரையறை செய்யத் தயாராக உள்ளது. மருந்துகள், புதிய பொருள் உருவாக்கம் போன்ற தொழில்துறைகளை மாற்றும் திறன் நன்கு அறியப்பட்டாலும், நிறுவன பாதுகாப்பிற்கான அதன் தாக்கங்கள் மிகவும் ஆழமானவை – மேலும் மிகவும் அவசரமானவை. குறியாக்கத்திற்கான குவாண்டம் அச்சுறுத்தல் இன்றைய பெரும்பாலான குறியாக்க முறைகள், தாக்குபவர்கள் சரியான விசைகளை அணுகாமல் தகவல்களை குறிமொழிமாற்றம்… Read More »

விரலியை(USB)பயன்படுத்தாமல் லினக்ஸின்வெளியீட்டை(Linux Distro)ஆய்வுசெய்திடும்வழிமுறைகள்

நாமெல்லோரும் Linuxசெயல்படுகின்ற விரலியை(USB)கொண்டு கணினியை துவக்குவது மட்டுமே ஒரு லினக்ஸ்வெளியீட்டினை ஆய்வுசெய்திடுவதற்கான ஒரே வழி என்று தவறாக நினைத்துகொள்கின்றோம். உண்மையில் லினக்ஸ் செயல்படுகின்ற விரலியை(USB)கொண்டு கணினியின் துவக்கசெயலை செய்வதை விட புதிய லினக்ஸின் வெளியீட்டினை முயற்சிக்க எளிதான பல்வேறு வழிகள் கூட உள்ளன என்ற செய்தியை மனதில்கொள்க.தற்போதைய நம்முடைய நடைமுறை பயன்பாட்டிலுள்ள கணினிகளில் பல்வேறு லினக்ஸின் வெளியீட்டினை முயற்சிக்க பயன்படுத்தக்கூடிய மூன்றுவழிமுறைகள் பின்வருமாறு. 1 மெய்நிகர்கணினி(Virtual Machine) மேசைக்கணினியில் ஒரு இயக்க முறைமையை ஆய்வுசெய்திட மெய்நிகர் கணினி(Virtual… Read More »

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய லினக்ஸின் கட்டளை வரி தந்திரங்கள்

விண்டோவின் பட்டியல் அடிப்படையிலான இடைமுகத்திற்கு பழகும்போது லினக்ஸ் முனையம் மிகவும் கடினமானதாகத் தோன்றலாம், ஆனால் அதன் பயன்பாட்டை கேலி செய்ய ஒன்றுமில்லை. ஒரு பிழையைச் சரிசெய்ய ஏராளமான வாய்ப்புகள் பட்டியல்கள் வழியாகச் செல்ல நம்மை கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, லினக்ஸ் முனையத்தின் CLI தன்மை சரிசெய்தலை ஒரு தென்றலாக ஆக்குகிறது. அதேபோன்று, முனையத்திலிருந்து பயன்பாடுகளையும் தொகுப்புகளையும் நிறுவுகைசெய்வது இயங்கக்கூடியவற்றைப் பயன்படுத்துவதை விட மிகவும் எளிதானது. பல ஆண்டுகளாக லினக்ஸைப் பயன்படுத்துபவர்கள் CLI அனுபவத்தை மேம்படுத்த இரண்டு வழிகளைக் கண்டுபிடித்திடுவார்கள்,… Read More »

இந்த ஏழு கட்டளை வரி பயன்பாடுகள், லினக்ஸில் உற்பத்தித்திறனை உடனடியாக மேம்படுத்துகின்றன

பொதுவாக முதலில் லினக்ஸைத் தொடங்கும்போது, வரைகலை பயனர் இடைமுகத்தையே பெரும்பாலும் பயன்படுத்திகொள்வார்கள், ஏனெனில் அது பழக்கமானது, நேரடியானது, குறிப்பாக விண்டோ OS உடன் பழகிவிட்டவர்களுக்கு எளிதானது. இருப்பினும், சிறிது நேரம் செலவிட்ட பிறகு, முனையம் அதிக சக்தியையும் வேகத்தையும் வழங்குகிறது என்பதை உணர்ந்திடுவார்கள் முதலில், அடிப்படை கட்டளைகளைக் கூட கற்றுக்கொள்வது ஒரு பணியாக இருந்தது, ஆனால்சில அத்தியாவசிய பணிகளின்போது, பணிப்பாய்வு கணிசமாக மேம்பட்டுவிடும். லினக்ஸில் (குறிப்பாக உபுண்டு) உற்பத்தித்திறனை மேம்படுத்திடுகின்ற சில கட்டளை வரி பயன்பாடுகள்பின்வருமாறு. இவை… Read More »

லினக்ஸில் பயனர்இடவெளி மறுதொடக்கம்(userspace reboot)எனும் செயலி குறித்து அறிந்துகொள்க

இந்த கட்டுரையானது தொடக்கநிலையாளர்கள்கூட லினக்ஸில் பயனர்இடவெளி மறுதொடக்கம்(userspace reboot) என்பதுகுறித்து தெரிந்து கொள்வதற்கான ஒரு எளிய வழிகாட்டியாகும் லினக்ஸ் அமைவு மறுதொடக்கம் செய்ய வேண்டியிருக்கும் போது, நாம் நினைப்பதை விட திரைக்குப் பின்னால் மிகஅதிகமாக நடக்கிறது. நவீன லினக்ஸ் விநியோகங்களில் மிகவும் சுவாரசியமான, பயனுள்ள இயல்புகளில் ஒன்று பயனர்இடவெளி மறுதொடக்கம்(userspace reboot) அல்லது மென்மையான மறுதொடக்கம்(soft reboot) எனும் செயலியாகும். பயனர் இடவெளி மறுதொடக்கம்(userspace reboot)ஆனது பின்வருமாறான செயல்பாட்டினை அனுமதிக்கிறது: சேவை அடுக்கின் விரைவான மறுதொடக்கங்கள், OS… Read More »

மேம்படுத்துநர்கள் பல பத்தாண்டுகளாக எளிய பார்வையில் தெரியாமல் நகைச்சுவையின் உள்ளே இரகசியமாக ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்

பல பத்தாண்டுகளாக, மென்பொருள் உருவாக்குநர்கள் தங்கள் பணியில் நகைச்சுவைகளை நழுவ விட்டு வருகின்றனர். ஆயினும்மிகவும் நீடித்த, புத்திசாலித்தனமான திருப்திகரமான நகைச்சுவைகளில் ஒன்று வெற்றுப் பார்வையில் மறைந்துள்ளது: சுழல்நிலை சுருக்கெழுத்து(Recursive Acronym) . இது ஒரு தெளிவற்ற விசித்திரத்திலிருந்து ஒரு அன்புக்குரிய பாரம்பரியமாக வளர்ந்துள்ளது – இன்றும் வலுவாக உள்ளது. சுழல்நிலை சுருக்கெழுத்து(Recursive Acronym) என்றால் என்ன? சுழல்நிலை சுருக்கெழுத்தைப் புரிந்து கொள்ள, நாம் அடிப்படைகளுடன் தொடங்க வேண்டும். சுருக்கெழுத்து என்பது NASA (National Aeronautics and Space… Read More »

GPT4All ஐ ஆய்வுசெய்தல், உள்ளூர் LLM மேசைக்கணினியின் செயலி

கற்காலம் முதல் தற்போதைய மின்னணு தகவல் காலம் வரை, வாழ்க்கையை எளிதாக்குகின்ற குறிப்பிடத்தக்க பல்வேறு வகைகளிலான தொழில்நுட்ப முன்னேற்றங்களை மனிதகுலம் கண்டுவருகின்றது. அவ்வாறான நிலையில் தற்போது பல்வேறு செய்யறிவு(AI) கருவிகள் நம் முடையவிரல் நுனியில் கிடைக்கின்றன,செய்யறிவு(AI) bots அல்லது உதவியாளர்கள் நமக்கு நினைவூட்டல்களை அனுப்புவதன் மூலமும், கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமும், மேலும் பலவற்றின் மூலமும் நம்முடைய ஒவ்வொரு நாளையும் திட்டமிட உதவுகின்றன. செய்யறிவு(AI) கருவிகளின் பயன்பாடுகளின் குறிப்பிடத்தக்க திறன்களில் மனிதனைப் போன்ற உரையை உருவாக்குதல், மொழி மொழிபெயர்ப்புசெய்தல்,… Read More »

இப்போது நான்கு வழிகளில் ஒரு சில்லின் NPU ஆனது கணினியை சிறப்பாக ஆக்குகிறது

தற்போது செய்யறிவானது (AI) தேடுதலிற்கான கருவிகள் முதல் கானொளி அழைப்புகள் வரை அனைத்தையும் இயக்குகிறது, ஆனால் சில மடிக்கணினிகள் இன்னும் அவ்வாறான வசதிகளை ஒரே சீராக இயக்க சிரமப்படுகின்றன. ஏனெனில் சில மையச்செயலிகள்(CPU) நிகழ்நேர செய்யறிவின்(AI) பணிகளை திறமையாக கையாளுமாறு வடிவமைக்கப் படவில்லை.புதியதாக ஏதேனும் ஒரு கணினியை நாம் கொள்முதல்செய்கின்றபோது, மையச்செயலி(CPU), தற்காலிகநினைவகம்(RAM) ஆகியவை பற்றிய விவரக்குறிப்புகளைப் பார்த்திருக்கலாம், ஆனால் அதில் NPU என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற நரம்பியல் செயலியின் அலகுகள்( Neural Processing Units(NPU)) உள்ளனவா… Read More »