Category Archives: பங்களிப்பாளர்கள்

தற்போது நாம் பயன்படுத்துவதை விட சிறந்த ஐந்து லினக்ஸின் கோப்பு மேலாளர்கள்

தற்போது சந்தையில் ஏராளமான வகையில் கோப்பு மேலாளர் பயன்பாடுகள் உள்ளன ஆனால் எந்தவொரு சிறந்த பயன்பாட்டினை கண்டவுடன், அதை பயன்படுத்திடுவதாற்காக முயற்சிசெய்திடாமல் இருக்க முடியாது. அதனால் அவ்வாறான பயன்பாட்டினை கண்டவுடன் அதனை பயன்படுத்திட துவங்கிடுவோம், ஏனேனில் சிலபயன்பாடுகள் மற்றவைகளை விட மிகச் சிறந்தவைகளாக நமக்குத்தோன்றிடுகின்றன. ஏனெனில் ஒவ்வொரு கோப்பு மேலாளர் பயன்பாடும் நம்முடைய மேசைக்கணினியில் நமக்குத்தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இல்லாமல் இருக்கலாம், அவ்வாறான சூழலில் நாம் நமக்குத்தேவையானவாறு அதை மாற்ற நினைக்கின்றோம், அதற்காக நாம்கூடுதலான நேரத்தையும்… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 10. லித்தியம் அயனி இழுவை மின்கலம் வகைகள்

லித்தியம் அயனி மின்கலங்களிலேயே எந்த நேர்மின்முனை, எதிர்மின்முனை, மின்பகுபொருள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்துப் பல வகைகள் உள்ளன. NMC வகை லித்தியம் அயனி மின்கலங்கள் நாம் பெட்ரோல் டீசல் கார்களில் ஓட்டத் துவக்குவதற்குப் பயன்படுத்துபவை ஈய-அமில (Lead-acid) மின்கலங்கள். இவற்றில் ஈயம் நேர் மின்முனையாகவும் (anode), ஈய ஆக்சைடு எதிர் மின்முனையாகவும் (cathode), நீர்த்த கந்தக அமிலம் (dilute sulphuric acid) மின்பகுபொருளாகவும் (electrolyte) பயன்படுத்தப்படுகின்றன. மின்னூர்திகளில் இழுவைக்குப் (traction) பயன்படுத்தும் லித்தியம் அயனி (lithium-ion)… Read More »

பிரச்சனைகளை சரிசெய்வதற்காக தெரிந்து கொள்ள வேண்டிய லினக்ஸின் கட்டளைகள்

லினக்ஸ் இயக்கமுறைமையை கேலிக்கூத்தாக்க விரும்புவோரின் மனவருத்தம் அடையுமாறு இந்த கட்டளைகள் செயல்படுகின்றன, இவை உண்மையில் பயன்படுத்த மிகவும் எளிதானவை. நவீன பயனாளர் வரைகலை இடைமுகப்பு உடனான(GUI) மேசைக்கணினி , பயன்பாடுகளை தங்களின் அன்றாட பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர் , எவரும் இதில் உள்ளினைந்து மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்டறியலாம். ஆனால் சிக்கல் எழும் அரிதான சந்தர்ப்பத்தில்,நமக்கு உதவ சில கட்டளைகளை தெரிந்துகொள்ள விரும்பிடுவோம். சிக்கல் என்னவென்றால், லினக்ஸின் செயல் வரம்பிற்குள் நமக்குத் தெரியாத அன்றாட பயன்பாட்டிற்கான… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 9. மின்கல அடிப்படைகள்

மின்னூர்திகளில் மின்சாரத்தை சேமித்து வைக்க நமக்கு ஒரு செயல்திறன் மிக்க நம்பகமான மின்கலம் தேவை. ஆகவே மின்கலங்கள் எந்த அடிப்படையில் வேலை செய்கின்றன என்று முதலில் பார்ப்போம். மின் வேதியியல் வினை (Electrochemical reaction) மின் வேதியியல் மின்கலம் என்பது வேதிவினைகளிலிருந்து மின் ஆற்றலை உருவாக்கும் ஒரு சாதனம் ஆகும். ஒரு முதன்மை (primary) மின்கலம் மீளமுடியாத வேதிவினைகளால் மின்னோட்டத்தை உருவாக்குகிறது. எ.கா. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் மின்கலங்கள். இவற்றை மீள்மின்னேற்றம் (recharge) செய்ய முடியாது. இரண்டாம்… Read More »

பெரிய மொழி மாதிரி (Large Language Model (LLM) என்றால் என்ன

திறமூலசெநு(OpenAI) ஆனது2022இல் ChatGPT ஐ வெளியிட்ட பிறகு, நாம் வாழும் இவ்வுலகம் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கண்டுவருகின்றது, மேலும் இவ்வாறான தொழில்நுட்பவளர்ச்சிக்கு முடிவே இல்லை என்றும் தெரிய வருகிறது. AIஇன் Chatbotsஆனவை Google, Microsoft, Meta, Anthropic போன்ற நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வனைத்து சாட்போட்களும் பெரிய மொழி மாதிரிகளின் (LLM) மூலமாகவே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பெரிய மொழி மாதிரி என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது? என்ற கேள்விகள் நம்மனதில் எழும் நிற்க இதனைப்(LLM)பற்றிய விவரங்களை இந்த… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 8. மாறுமின் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார்

தூண்டல் மோட்டாரின் (Induction Motor) அம்சங்களையும் தொடியற்ற நேர்மின் மோட்டாரின் (Brushless DC Motors – BLDC) அம்சங்களையும் மாறுமின் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார் (AC Permanent Magnet Synchronous Motor – PMSM) ஓரளவு கொண்டது. இதன் வடிவமைப்பு தொடியற்ற நேர்மின் மோட்டார் போன்றதே. சுற்றகத்தில் (rotor) நிலைக்காந்தங்களும் நிலையகத்தில் (stator) கம்பிச்சுருள்களும் இருக்கும். ஆனால் இதற்கு மூன்றலை (3 Phase) மாறுமின்சாரம் (AC) கொடுத்து இயக்குகிறோம். ஒத்தியங்கு மோட்டார் என்றால் என்ன? நிலையகத்திலுள்ள கம்பிச்சுருள்களில்… Read More »

Evaஎனும் ஒரு செநு(A.I ) உதவியாளர்

Eva என்பது பயனர்களின் பல்வேறு பணிகளைச் செய்ய உதவும் நோக்கத்தைக் கொண்ட ஒரு செநுவின்(A.I )உதவியாளர் ஆகும். மாற்றுத்திறனாளிகளும் கணினியை எளிதாகப் பயன்படுத்த உதவுவதே இதன் நோக்கமாகும். Eva எனும் அமைவு தொடர்பான , அமைவு அல்லாத பயன்பாடுகளைத் திறந்து செயல்படுத்தி பயன்பெற்றபின் அதனை மூடிவெளியேறலாம், இணையப் பயன்பாடுகளில் உள்ளடக்கத்தைத் தேடலாம், நேரஅளவுகளை மாற்றியமைக்கலாம் , திரைக்காட்சிகளை படமாக எடுக்கலாம். இதற்காக Eva இன் “Listen” அல்லது “Hey listen” என்று கட்டளையைத் தொடர்ந்து கூறிடுக. [… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 7. மாறுமின் தூண்டல் மோட்டார்

நீரேற்றி (water pump), மின்விசிறி, குளிர் சாதனங்கள், கலவைக் கருவி (mixie), மாவரைக்கும் எந்திரம் (wet grinder) போன்ற பல அன்றாட மின்சாதனங்களில் மாறுமின் தூண்டல் மோட்டாரைப் (AC induction motor) பயன்படுத்துகிறோம். இவற்றில் வீட்டில் பயன்படுத்தும் குறைந்த திறன் சாதனங்களில் பெரும்பாலும் ஒற்றையலை (single phase) மோட்டார் இருக்கும். தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அதிக திறன் சாதனங்களில் மூன்றலை (3-phase) மோட்டார் இருக்கும். மின்கலத்தின் நேர்மின்சாரத்தை (DC) மூன்றலை மாறுமின்சாரமாக  (3-phase AC) மாற்ற வேண்டும் மின்கலம்… Read More »

வசதிகளற்ற லினக்ஸ் நூலகம் ஒரு அறிமுகம்

வசதிகளற்ற லினக்ஸ் நூலகம் (Featureless Linux Library (FLL)) என்பது குனு லினக்ஸ் அமைவுகளில் (இப்போது SystemdD லினக்ஸ் அமைவுகளில்) காணப்படுகின்ற வித்தியாசமான வடிவமைப்பு முன்னுதாரணத்தை மையமாகக் கொண்டசிறிய நிரலாக்கங்களுடன் கூடிய ஒரு நூலகமாகும். கணினியின் திறன் அதிகரிக்கும் போது,பொதுவாக நிரலாளர்கள் அதிக “வசதி வாய்ப்புகளை” கூடுதலாக அதற்கேற்ப சேர்க்கிறார்கள்,இதனால் புதிய வன் பொருளில் ஏற்கனவே அடைந்த செயல்திறன்கள் முக்கியத்துவமில்லாதவைகளாக மாறிவிடுகின்றன இந்தத் செயல்திட்டம், இவ்வாறான முக்கியத்துவமில்லாதவைகளாக ஆகின்ற பயங்கரமான வளையத்திலிருந்து வெளியேறுவதற்காக libcக்கு மேலே ஒரு… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 6. நேர்மின் தொடியற்ற மோட்டார்

சந்தையில் பல இருசக்கர மின்னூர்திகளிலும் மூன்று சக்கர மின்னூர்திகளிலும் நேர்மின் தொடியற்ற மோட்டார்கள் (Brushless DC Motor – BLDC) பயன்படுத்தப்படுகின்றன.  இவை எவ்வாறு வேலை செய்கின்றன என்று புரிந்து கொள்வதற்கு முதலில் நேர்மின் தொடி மோட்டார் அடிப்படையைப் பார்ப்போம்.  நேர்மின் தொடி மோட்டார் (Brushed DC Motor) இவற்றில் சுற்றகத்தில் (rotor) கம்பிச்சுற்றுகளும் நிலையகத்தில் (stator) நிலைக்காந்தங்களும் இருக்கும். சுழலும் மின்திசைமாற்றிக்குத் (commutator) தொடிகள் மின்சாரத்தை வழங்குகின்றன. இதனால் சுற்றகம் (rotor) மின்காந்தமாகிச் (electromagnet) சுழல்கிறது.… Read More »