Category Archives: பங்களிப்பாளர்கள்

பைத்தானில் பெரிய தரவுத்தொகுப்புகளைக் கையாளுவதற்கான உதவிக்குறிப்புகள்

பைத்தானில் மிகப்பெரியஅளவிலான தரவுத் தொகுப்புகளைக் கையாளுகின்ற பணியானது பொதுவாகஅனைத்து நிரலாளர்களுக்கும் உண்மையில் ஒருமிகப்பெரிய சவாலாக இருக்கலாம், குறிப்பாக கணினியில் எளிதில் கையாளக்கூடிய சிறுசிறு தரவுத்தொகுப்புகளுடன் பணிபுரியும் போது மிகப்பெரியஅளவிலான தரவுத் தொகுப்புகளைக் கையாளுவது என்பது உண்மையில் மிகமுக்கியமான சவாலாக இருக்கக்கூடும். இதற்காக கண்டிப்பாக பயந்திடவேண்டாம்! அவ்வாறான மிகப்பெரிய தரவைகூட திறம்பட செயலாக்கவும் பகுப்பாய்வு செய்யவும் உதவுவதற்கான கருவிகளாலும் தந்திரங்களுடனான செயலிகளாலும் பைதான் ஆனது நிரம்பியுள்ளது என்பதே உண்மையான களநிலவரமாகும். அதனடிப்படையில் இந்த பயிற்சிகட்டுரையில், அதிக கவனம் செலுத்துவதற்கான… Read More »

சில்லுவின் கதை 15. மதத் தடைகளால் தொழில் புரட்சியையே கோட்டை விட்டோம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) வெளிப்புறத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றியே புகார் செய்யாமல் தன்னிலையை ஆய்வு செய்தல் 0:00 பிரபல வானியற்பியல் (astrophysicist) அறிஞர் பேராசிரியர் ஜயந்த் வி. நர்லிகர் (Prof. Jayant V. Narlikar), புரட்சிகரமான பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். நான் அவரது மின்னஞ்சல் குழுவில் இணைந்திருக்கிறேன். நான் “சில்லுவின் கதை” -யில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது,… Read More »

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு – பைத்தான் 28

பைத்தான்: வா! நந்தா! வா! என்னை மறந்துட்டேல்ல! நந்தன்: அப்படியெல்லாம் இல்லை! கொஞ்ச நாளா வேலை அதிகம்! அதான், உன்ன பார்க்க வரல! மத்தபடி ஐ லவ் யூ தான்! பைத்தான்: நீ இல்லாத இந்த நாட்கள்ல நெறய மாறிப் போச்சு! நந்தன்: அப்படி என்ன மாறிச்சு! பைத்தான்: தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்துல மூணாவது மொழி உண்டுன்னு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சொல்லிட்டாரு! நந்தன்: என்னது?! மூணாவது மொழியா? பைத்தான்: ஆமாப்பா! மூணாவது மொழியா சி, சி++, ஜாவா… Read More »

நம்முடையசொந்த செய்யறிவை(AI) உருவாக்குதல் தொடர்- பகுதி 2- செய்யறிவின்(AI)/இயந்திர கற்றலின்(ML) மேம்பாட்டிற்கான சூழலை அமைத்தல்

செய்யறிவையும்(AI) , இயந்திர கற்றலையும்(ML) தொடங்குவதற்கு நன்கு தயாரிக்கப்பட்ட மேம்பாட்டு சூழல் தேவையாகும். செய்யறிவின்(AI)/இயந்திர கற்றலின்(ML) பயணத்திற்குத் தேவையான கருவிகளையும் நூலகங்களையும் அமைப்பற்கான வழிமுறையை இந்தக் கட்டுரை காண்பிக்கும், இது தொடக்கநிலையாளர்களுக்கு ஒரு சீரான தொடக்கத்தை உறுதி செய்யும். சிக்கலான வளாக அமைப்புகளைத் தவிர்க்க விரும்புவோருக்கு Google Colab போன்ற இணைய தளங்களைப் பற்றியும் விவாதிப்போம். செய்யறிவின்(AI)/இயந்திர கற்றலின்(ML) மேம்பாட்டிற்கான கணினித் தேவைகள் செய்யறிவு(AI) , இயந்திர கற்றல்(ML) ஆகிய செயல்திட்டங்களில் மூழ்குவதற்கு முன், நம்முடைய கணினியானது… Read More »

சில்லுவின் கதை 14. மூரின் விதிக்கு மேலும் 25 ஆண்டுகளுக்கு உயிர் கொடுத்தது

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) டிரான்சிஸ்டர்களின் அளவை மிகவும் குறைக்கும்போது கசிவு மின்னோட்டம் பல மடங்கு அதிகரிக்கிறது 0:00 முந்தைய நிகழ்வில் நாம் மீப் புறஊதா (EUV – Extreme ultraviolet) ஒளி பற்றிப் பார்த்தோம். நாம் என்ன செய்ய முயற்சிக்கிறோம்? டிரான்சிஸ்டரின் நீளத்தைக் குறைக்க வேண்டும். ஏன் நாம் அதைச் செய்ய வேண்டும்? ஒரு சதுர… Read More »

பகுதி 1: நம்முடைய சொந்த செய்யறிவை(AI) நாமேஉருவாக்குதல் – செய்யறிவும்(AI) இயந்திர கற்றலும் ஒருஅறிமுகம்

தற்போது செய்யறிவு(AI), இயந்திர கற்றல்(ML) ஆகியவை நம்முடைய வாழ்வையே உருமாற்றுகின்ற தொழில்நுட்பங்களாக மாறிவிட்டன, இவை சுகாதாரப் பராமரிப்பு முதல் பொழுதுபோக்கு வரை அனைத்து தொழில்களிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. சுய-ஓட்டுநர் மகிழ்வுந்துகளை இயக்குவது, பரிந்துரை அமைப்புகளை இயக்குவது அல்லது சிறந்த மெய்நிகர் உதவியாளர்களை வழங்குவது என எதுவாக இருந்தாலும், செய்யறிவும்(AI) இயந்திர கற்றலும்எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. இந்த கட்டுரையானது அவைகளின் கருத்தமைவுகளில் தெளிவை வழங்குவதையும், நம்முடைய சொந்த செய்யறிவு(AI), அமைப்புகளை உருவாக்குவதற்கான நம்முடைய பயணத்திற்கான அடித்தளத்தை அமைப்பதையும்… Read More »

சில்லுவின் கதை 13. எல்லாம் நாமே தயாரிக்க வேண்டியதில்லை எனும் வெற்றிக் கொள்கை

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) முதன்முதலில் காண்புறு (visible) ஒளியைப் பயன்படுத்தினர் 0:00 ஒளி அரித்தல் (Photolithography) என்பது அடிப்படையில் ஒளியைக் கொண்டு ஒரு சமதளத்தில் தேவையான வடிவமைப்பை அரித்து எடுத்தல் (etching). இதை எளிமையாகப் பார்க்கும்போது, ஒளியை ஒரு கத்தியைப் போல் பயன்படுத்தி வெட்டி எடுக்கிறோம் என்றும் சொல்லலாம். சிலிக்கான் வில்லைப் பரப்பில் ஒளியைப் பயன்படுத்தி… Read More »

ஒரே நாளில் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றினை உருவாக்க முடியுமா?

ஆண்ட்ராய்டு மேம்பாட்டு உலகில் பத்தாண்டுகள் கழித்த பிறகு, அதன் போக்குகள் மாறுவதையும், நூலகங்கள் உயர்ந்து வீழ்ச்சியடைவதையும், எண்ணற்ற குறிமுறைவரிகள் எழுதப்படுவதையும் (மீண்டும் எழுதப்படுவதையும்!) இதுவரையில் கண்டுவந்திருக்கலாம். குறிப்பாக ஆர்வமுள்ள மேம்படுத்துநர்களிடமிருந்து அடிக்கடி சந்திக்கும் ஒரு கேள்வி: “ஒரே நாளில் ஆண்ட்ராய்டு செயலிஒன்றினை உருவாக்க முடியுமா?” சுருக்கமான பதில்? அது அந்தந்த சூழலை சார்ந்தது ஆகும் . முயன்றால்அவ்வாறான சூழல் எனும் முட்டுக்கட்டையை உடைத்திடலாம். நாம் எந்த வகையான செயலியைப் பற்றி விவாதிக்க விருக்கின்றோம்? ஒரு எளிய “Hello,… Read More »

சில்லுவின் கதை 12. ஒரு நல்ல பொறியாளர் மேலும் இருவரைக் கொண்டு வரட்டும்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சீன அறிவியலாளர்கள் ஆராய்ச்சியை விட்டு வயல்களில் வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டது 0:00 தைவான் என்பது சீனாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மிகச் சிறிய தீவு. ஹாங்காங் அதற்கு அருகில் உள்ள இன்னும் சிறிய புள்ளி. இவற்றைப் பார்த்தால் நமக்கு என்ன தெரியவரும்? ஒரு நாட்டின் அளவு முக்கியமல்ல, அங்கு வாழும்… Read More »

ஒவ்வொரு நிரலாளரும் தெரிந்துகொள்ளவேண்டிய திறமூல செய்யறிவு(AI) கருவிகள்

செய்யறிவு(AI) என்பது நமக்குத் தெரிந்தஅளவு நாம் வாழ்கின்ற இந்தஉலகை மாற்றியமைத்துவருகிறது,மேலும் நிரலாளர்களுக்கு, அதைபின்பற்றுவது உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரி்க்கவும் வசதிகளைமேம்படுத்தவும் தகவல்களை விரைவாக அனுப்பவும், நமக்காக பரிசோதனைக்கான குறிமுறைவரிகளை எழுதவும், அவ்வாறான குறிமுறைவரிகளில் உள்ள பாதிப்புகளைக் கண்டறியவும் இது உதவுகிறது. தற்போதைய சூழலில் இணையமானது பல்வேறு கருவிகளை ஏராளமானஅளவில் வழங்குகிறது, ஆனால் அவைகளிலிருந்து சரியானதைதேடிக் கண்டுபிடிப்ப தற்காவே அதிக நேரத்தையும் முயற்சியையும் எடுக்கவேண்டியுள்ளது. எனவே, அவ்வாறானவைகளுள் ஒரு சிறந்த நிரலாளராக மாறுவதற்கான செய்யறிவு(AI) கருவிகளின் பட்டியல் பின்வருமாறு .… Read More »