Category Archives: பங்களிப்பாளர்கள்

பைத்தான் படிக்கலாம் வாங்க – 23 – தெனாலிராமன் – கிடைத்ததில் சம பங்கு

தெனாலிராமன் கதைகள் படிக்காத குழந்தைகள் கிடையாது. அறிவுக்கூர்மைக்கும் சில நேரங்களில் சேட்டைக்கும் தெனாலிராமனைச் சொல்வார்கள். கிருஷ்ண தேவராயரின் அவையில் விகடகவியாக இருந்த தெனாலிராமன், மன்னர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பல நேரங்களில் நகைச்சுவையாகச் சொல்வதில் வல்லவர். மன்னருக்குச் சரியான அறிவுரை சொல்பவர்கள் இல்லை என்றால் அவர்கள் நிறைய தவறுகள் செய்யத் தொடங்கி விடுவார்கள் அல்லவா? இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் (448) என்கிறார் திருவள்ளுவர். எவ்வளவு தான் சிறந்த அரசராக… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 22 – காதலா? கணக்கா? கனவா?

முந்தைய பதிவில் மதனும் கார்த்திகாவும் கனவிலும் சந்திக்கத் தொடங்கியிருந்தார்கள் என்று பார்த்தோம் அல்லவா? ‘நேற்று இராத்திரி தூக்கத்தில் ஒரு கனவு’ என்றாள் கார்த்திகா. தன்னுடைய கனவு அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாத மதன், ‘கனவுக்கெல்லாமா காலையிலேயே கூப்பிடுவாய்?’ என்று கேட்டான். ‘கனவில் நாம் இருவரும் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இரயில் ஏறுகிறோம்’, அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன், என்றாள் கார்த்திகா. ‘நாம் இருவருமா?’ என்று விழி முழுதும் வியப்பை வைத்துக் கொண்டான் மதன். ‘ஆமாங்க மதன்! ஆனால் கன்னியாகுமரி போய்ச்… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 2. மின்னூர்தி வகைகள்

மின்கல மின்னூர்திகள் (Battery Electric Vehicles – BEV) இவை முற்றிலும் மின்கலத்தில் ஏற்றப்பட்ட திறன் மூலம் இயங்குபவை. ஊர்தியை ஓட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் ஒரு பெரிய மின்கலத் தொகுப்பில் சேமிக்கப்படுகிறது, அதை மின் சாக்கெட்டில் செருகி மின்னேற்றம் செய்யலாம். இந்த மின்கலத் தொகுப்பு மின் மோட்டார்களுக்கு காரை இயக்க சக்தியை வழங்குகிறது. இவற்றை முழுமையான மின்னூர்திகள் (All-Electric Vehicles – AEV) என்றும் சொல்கிறார்கள். கலப்பின மின்னூர்திகள் (Hybrid Electric Vehicle – HEV) இவற்றில்… Read More »

உள்நுழைவு செய்பவரின் தகவலை PHP இல் காண்பிக்க வேண்டுமா?

இந்தக் கட்டுரையில், PHPயையும், அதன் பல்வேறு உள்கட்டமைப்பு முறைகளையும் பயன்படுத்தி ஒரு இணைய பக்கத்தில் உள்நுழைவு செய்த பயனாளரின் தகவலைக் காண்பிப்பது எவ்வாறு என்பதை அறிந்துகொள்வோம். உள்நுழைவு செய்பவரின் ஏற்புகை தேவைப்படுகின்ற இணையப் பயன்பாட்டை உருவாக்கும்போது, இணைய பக்கத்தில் உள்நுழைவு செய்த பயனரின் தகவல்களை பல்வேறு பக்கங்களில் காண்பிப்பது அவசியமாகும். e-commerce இணையதளங்கள், வங்கியின் இணையதளங்கள் போன்ற பல்வேறு பயன்பாடுகளில் இது பயனுள்ளதாக இருக்கும். PHPஉம் அதன் செயலிகளின் உதவியுடனும் இதை எளிதாக செயல்படுத்தலாம்.சில எடுத்துக்காட்டுகளின் உதவியுடன்… Read More »

கற்றுக்கொள்க லின்கஸின்உருவாக்கமைய நிரலாக்கத்தின் அடிப்படைகளை

ஒரு இயக்க முறைமையின் மையமும் மையக் கூறும் உருவாக்கமையம்(kernel) என அழைக்கப்படுகிறது. பணி மேலாண்மை ,வட்டு மேலாண்மை போன்ற அனைத்து அடிப்படை வன்பொருள் நிலையிலான செயல்பாடுகளும் இயக்க முறைமையின் உருவாக்கமையத்தால் கண்காணிக்கப்படுகின்றன. ஒரு பயனர்-நிலையில் செயல்முறைக்கு வன்பொருள் கூறுகளுக்கு நேரடி அணுகல் தேவைப்படும் போது, அது உருவாக்கமையத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்புகிறது, இது கணினியின் அழைப்பு என குறிப்பிடப்படுகிறது. உருவாக்கமையம் ஆனது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ளது, அனுமதிஅளிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே அணுக முடியும். இதன்மூலம் வன்பொருளை… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 1. உயர் நிலைக் கண்ணோட்டம்

சந்தையில் வளர்ந்து வரும் விற்பனை  2023 இல் உலகம் முழுவதிலும் விற்பனையான புதிய கார்களில் 18% கார்கள் மின்சாரக் கார்களாகும். இந்தியாவில் 2023-24 இல் 9 லட்சம் இரு சக்கர ஊர்திகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவில் 2023-24 இல் 5.8 லட்சம் மூன்று சக்கர ஊர்திகள் விற்பனை செய்யப்பட்டன. இது மொத்த மூன்று சக்கர ஊர்திகள் விற்பனையில் பாதிக்கு மேல் (54%). இவ்வாறு மின்னூர்திகள் (Electric Vehicles – EV) விற்பனை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.… Read More »

பைத்தானின் தொகுப்புகள்(Collections)

பைத்தானில், தொகுப்புகள் என்பவை தரவைச் சேமிப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்ற கொள்கலன்களாகும். tuples, lists, sets , dictionaries ஆகியன பைத்தானில் உள்ளமைக்கப்பட்ட தரவு கட்டமைப்புகளின்தொகுப்புகளாகும் இந்த தொகுப்புகளின் இனமானது, உள்ளமைக்கப்பட்ட தரவு கட்டமைப்புகளைத் தவிர கூடுதலான தரவு கட்டமைப்புகளையும் வழங்குகின்றது அவை பின்வருமாறு:. Counter, namedTuple, orderedDict , defaultDict, Deque, chainMap, ஆகியன பைத்தானில்’தொகுப்புகளின்’ தகவமைவில் உள்ள சில தரவு கட்டமைப்பு களாகும் இவைகள் குறித்த விளக்கங்களை இப்போது காண்போம், 1.Counter()எனும்செயலி இது ஒருதொகுப்பு வகையாகும்,… Read More »

எளிய தமிழில் Car Electronics 27. ஊர்தித் திரள் மேலாண்மை

நீங்கள் ஒரு நிறுவனத்தின் சரக்கு அல்லது பயணிகள் ஊர்தித் திரளுக்கு (fleet) மேலாளராக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஓட்டுநரின் கவனக்குறைவால் ஒரு விபத்து ஏற்பட்டால் நிறுவனம் தான் பொறுப்பு. மேலும் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவதும், ஊர்தியின் தேய்மானமும் ஓட்டுநரின் செயல்பாடுகளைப் பொறுத்து உள்ளது. உங்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டே எங்கெங்கோ ஓடும் உங்கள் ஊர்திகளை எல்லாம் எவ்வாறு நீங்கள் கண்காணிக்க முடியும்? இதற்குத் தொலைக்கண்காணிப்புத் (Telematics) தொழில்நுட்பம் உதவி செய்கிறது. ஓட்டுநர் செலுத்திய பாதை, செயலற்று… Read More »

உருவாக்க எதிரி வலைபின்னல்களும்,புத்தாக்க செயற்கை நுன்னறிவும் (Creative AI) ஒரு அறிமுகம்

இயந்திரங்களுடன் மனித படைப்பாற்றலை ஒருங்கிணைப்பதன் மூலம், உருவாக்க எதிரி வலைபின்னல்கள் (Generative Adverserial Networks(GANs)), புத்தாக்க செநு(AI) ஆகியவை ஒருகலைஞரின் வெளிப்பாடுகளை மறுவடிவமைப்பு செய்திடு வதற்காக அதன் எல்லைகளைத் விரிவுபடுத்திடுகின்றன. ஆனால் இவற்றில்நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பல ஆபத்துகளும் உள்ளன. உருவாக்கஎதிரி வலைபின்னல்கள் (generative adversarial networks (GANs)) ஆனவை செயற்கை நுண்ணறிவு துறையில், புதியதொரு கண்டுபிடிப்பாக படைப்பாற்றலில் புரட்சியை ஏற்படுத்துகின்ற சாத்தியக்கூறுகளுடன் தனித்து நிற்கின்றன: . இந்த அமைப்புகள் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோரின்… Read More »

எளிய தமிழில் Car Electronics 26. இணையம் வழியாக ஊர்தி மென்பொருளை மேம்படுத்தல்

கணினிகள், திறன்பேசிகள் ஆகியவை இணையத்தில் தொடர்புடன் இருப்பதால் மென்பொருளை இணையம் வழியாக மேம்பாடு செய்கிறார்கள் என்று முன்னர் பார்த்தோம். ஊர்திகளை விற்றபின் அதன் மென்பொருளில் பாதுகாப்பையோ அல்லது மற்ற அம்சங்களையோ மேம்படுத்த வேண்டும் என்றால் என்ன செய்வது?  முன்னர் நேரடியாகக் கம்பி இணைப்புகள் மூலம் மட்டுமே மென்பொருளை மேம்படுத்த முடியும் ஊர்திகளிலும் மற்ற சாதனங்களிலும் நிரல்கள், தரவுகள் போன்றவை மின் இணைப்பைத் துண்டித்தாலும் அழியாத நினைவகத்தில் (flash memory) எழுதி சேமிக்கப்பட்டிருக்கும். ஆகவே இம்மாதிரி உட்பதித்த சாதனங்களில்… Read More »