CAD CAM CAE

எளிய தமிழில் CAD/CAM/CAE 12. பாகங்களைத் தொகுத்து இயக்கிப் பார்த்தல் (Motion simulation)

ஃப்ரீகேட் அசைவூட்டம் (Animation) பணிமேடை பாகங்களின் இயக்கத்தை உருவகப்படுத்தவும், படங்களின் காட்சித்தொடர்களை உருவாக்கவும், இவற்றைக்கொண்டு அசைவூட்டத்தை உருவாக்கவும் இப்பணிமேடை பல கருவிகளைக் கொண்டுள்ளது. பாகங்களின் நிலை மற்றும் திசையமைவை தேவைப்பட்டபோது மாற்றலாம். மேலும் கண்ணுக்குப் புலப்படுதல் (visibility), ஒளிபுகுதன்மை (transparency), வடிவத்தின் நிறம் (shape color) மற்றும் நிழற்படக் கருவி நிலை (camera position) போன்ற…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 11. பாகங்களைத் தொகுத்துப் பார்த்தல்

பாகங்களை இணைக்கும் பொழுது வரும் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிதல் நம்முடைய தயாரிப்பில் உள்ள பாகங்களை எல்லாம் 2D மென்பொருளில் உருவரைவு தயார் செய்துவிட்டோம். இந்த பாகங்களை எல்லாம் தயாரித்து துணைத் தொகுதிகளாகவும் முழுத் தொகுதியாகவும்  இணைக்கும் பொழுது சில பிரச்சினைகள் தெரியவரலாம். எடுத்துக்காட்டாக சில திருகாணிகள் முடுக்கியால் அணுக இயலாத இடத்தில் இருக்கலாம்.  நம்மால் 3D…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 10. எளிய வரைபடப் பயிற்சிகள்

உங்களுக்கு வரைபடங்களில் அடிப்படைப் பயிற்சி தேவை என்றால் என்னுடைய முந்தைய கட்டுரைகளை கீழ்க்கண்ட இணைப்புகளில் காணலாம்: பொறியியல் வரைபடம் (Engineering Drawing) – பாகம் 1 பொறியியல் வரைபடம் (Engineering Drawing) – பாகம் 2 பொறியியல் வரைபடம் (Engineering Drawing) – பாகம் 3 சித்திரமும் கைப்பழக்கம் சித்திரமும் கைப்பழக்கம் என்பது பழமொழி. நாம்…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 9. CAD கோப்பு வகைகள்

ஒவ்வொரு CAD மென்பொருளிலும் அதற்கேயான தன்னகக் கோப்பு வடிவத்தில் (Native format) சேமித்து வைப்பது அவசியம். முக்கியமாக 3D CAD மென்பொருட்களில், நாம் முன்னர் பார்த்தபடி, அளவுரு மாதிரிகளின் வரலாற்றையும் படிமுறைகளையும் இம்முறையில் மட்டுமே சேமிக்க முடியும். இதுதான் உங்கள் மூல வடிவம். எனினும் பல காரணங்களால் நாம் மற்ற கோப்பு வகைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். …
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 8. வடிவியல் கட்டுப்பாடு தீர்வி (Geometric constraint solver)

வழக்கமாக நாம் 2D வரித்தோற்றம் (orthogonal view) உருவரைவுகள் செய்யும்போது வரைபலகையில் கையால் வரைவது போலவே வரைவோம். அதாவது கோடுகளைத் தேவையான துல்லியமான அளவில் தேவையான திசையிலேயே வரைவோம். ஏனெனில் நம்முடைய நோக்கம் அந்தப் படத்தை வரைந்து, அளவுகள் காட்டி, அச்சிட்டுப் பணிமனையில் உற்பத்தி செய்யக் கொடுக்க வேண்டும். தோராயமாக வரைந்து கட்டுப்பாடு அமைத்தல் (Constraint…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 7. ஃப்ரீகேட் (FreeCAD) 3D

சால்வ்ஸ்பேஸ் செய்யும் எல்லா வேலைகளையும் ஃப்ரீகேட் செய்ய முடியும். இது தவிர மேலும் பல வேலைகளையும் செய்ய முடியும். ஃப்ரீகேட் பணிமேடைகள் (workbenches) உங்கள் பட்டறையில் மர வேலையும் உலோக வேலையும் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மர வேலைக்கு வாள் (saw), இழைப்புளி (planer), உளி (chisel) போன்ற கருவிகள் கொண்ட ஒரு பணிமேடை தனியாக…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 6. சால்வ்ஸ்பேஸ் (SolveSpace) 3D

எளிதாக நிறுவி இயக்க முடியும் சால்வ்ஸ்பேஸ் 3D என்பது அளவுரு மாதிரியமைத்தல் (parametric modeling) கட்டற்ற திறந்தமூல மென்பொருள். இது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் கணினிகளில் இயங்குகிறது. விண்டோஸ் கணினிகளில் நிறுவ வேண்டிய அவசியம் கூட இல்லை. EXE கோப்பு அப்படியே ஓடும். இது சிறிய கோப்பு ஆகையால் உங்கள் கணினியில் அதிக இடத்தையும்…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 5. அளவுரு மாதிரியமைத்தல் (Parametric modelling)

நேரடி மாதிரியமைத்தல் (Direct modelling) நாம் ஒரு சிக்கலான வடிவத்தைப் பல படிகளில் உரு மாற்றங்கள் செய்து தயாரித்து முடித்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இதை சேமித்து வைப்பதன் முக்கிய நோக்கம் இந்தக் கோப்பைத் திறந்து திரும்பவும் இந்த வடிவத்தை உருவாக்க இயல வேண்டும். இதை சேமித்து வைக்க நாம் இரண்டு விதமான உத்திகளைக் கையாளலாம்….
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 4. திட வடிவம் உருவாக்கும் உத்திகள்

திட வடிவ ஆக்கம் (Constructive solid geometry – CSG)  நம்மிடம் கோளம், கூம்பு, உருளை, கனச்செவ்வகம், வடை வடிவம் (torus) போன்ற அடிப்படை வடிவங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இந்த அடிப்படை  வடிவங்களை வைத்துச் சிக்கலான வடிவங்களை உருவாக்கும் வழிமுறைதான் திட வடிவ ஆக்கம். இந்த திட வடிவ ஆக்கத்தில் மூன்று வழிமுறைகள்…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 3. லிபர்கேட் (LibreCAD) 2D

உபுன்டுவில்  லிபர்கேட் நிறுவி, முதல் பயிற்சியாக ஒரு விளிம்புத் தட்டு (flange) வரைபடம் வரைவது எப்படி என்ற என்னுடைய முந்தைய கட்டுரையை இங்கே படிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சமீபத்தில் வெளியிடப்பட்ட, நூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட லிபர்கேட் 2.2 பயனர் கையேடு இங்கே காணலாம்.  வரித்தோற்றம் (orthogonal view) மற்றும் சம அளவுத்தோற்றம் (isometric view) இந்த…
Read more