உபுண்டுவை மாக்(Mac ) OS X Lion போன்று மாற்றுவது எப்படி?

அட என்ன சார், எவன கேட்டாலும் “ஆப்பிள் ஆப்பிள்” ன்னு பீத்துறாங்களே, “அதுல அப்படி என்ன தான் இருக்கு?” என்று கேக்குற பல பேருல நீங்களும் ஒருத்தவருன்னாமேல படிங்க.

 

 

ஆப்பிள் (Apple ) நிறுவனம், தான் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் கலை உணர்வு அதிகம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து செய்யும் நிறுவனம். இதனால் தான் அதன் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. ஆப்பிளின் இயக்குதளம் தான், இந்த OS X Lion. இதனை ஒரு முறை பயன்படுத்திவிட்டீர்கள் என்றால், அதன் கலை அம்சத்தை, எளிய இயக்குமுறையை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள். ஆனால் அதன் விலை நம்மை அதை வாங்க விடாமல் தடுக்கின்றது.
அதனால் என்ன? நாம் நம் உபுண்டுவையே OS X Lion போன்று எளிய முறைகளைப் பின்பற்றி மாற்றி விடலாம். முதலில் அந்த Mac OS X Lion எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்.

கைரோ டாக் (Cairo Dock ) நிறுவுங்கள்

Cairo Dock என்பது ஓர் அழகிய தொடக்கி (Launcher ). இது OS X Lion-இன் முக்கிய அம்சம். இதனைப் பெற பின்வரும் கட்டளைகளை உங்களது உபுண்டு முனையத்தில் அடியுங்கள்.

sudo add-apt-repository ppa:cairo-dock-team/ppa

sudo apt-get update

sudo apt-get install cairo-dock cairo-dock-plug-ins

அடித்து முடித்த பின், உபுண்டுவை “log out ” செய்து மறுபடியும் தொடங்குங்கள். தொடங்கும் போது, உங்களுக்கு Cairo Dock அடங்கிய மூன்று session-கள் தரப்படும். அதில் உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து உள்ளே செல்லுங்கள்.

 

Mac OS X Lion-இன் icon கள், theme மற்றும் cursor நிறுவுதல்

NoobsLab PPA என்ற இடத்தில இருக்கும் OS X Lion icon கள், theme மற்றும் cursor களை நாம் பின்வரும் கட்டளைகளை முனையத்தில் அடித்துப் பெறலாம்.

sudo add-apt-repository ppa:noobslab/themes

sudo apt-get update

sudo apt-get install mac-os-lion-theme mac-os-lion-cursors mac-os-lion-icons

 

பின்பு Advanced Settings மெனுவிற்கு சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்த theme ஐ நிறுவுங்கள்.

 

Plymouth screen நிறுவுதல்

முதலில் Paw -OS plymouth theme-ஐ நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதனைச் செய்ய இந்த சுட்டியை (love2spooge.deviantart.com/art/PAW-OS-X-Plymouth-Theme-173974024) சொடுக்குங்கள்.
பதிவிறக்கப்பட்ட கோப்புகளை extract  செய்து, “/lib/plymouth/themes/” அடைவுக்குள் நகலெடுங்கள்.
இப்போது நீங்கள் Nautilus file manager-ஐ தொடங்க வேண்டும். அதனைச் செய்ய இந்தக் கட்டளையை முனையத்தில் அடியுங்கள்.

 

sudo cp -R ~/Downloads/Paw-OSX/ /lib/plymouth/themes

பின்பு அந்த theme-ஐ நிறுவ வேண்டும். அதனைச் செய்ய இந்தக் கட்டளையை முனையத்தில் அடியுங்கள்.

 

sudo update-alternatives –install /lib/plymouth/themes/default.plymouth default.plymouth /lib/plymouth/themes/Paw-OSX/paw-osx.plymouth 100

sudo update-alternatives –config default.plymouth

 

அதன் பின், வரும் option-களில் இருந்து Paw OS-ஐத் தேர்ந்தெடுங்கள். இறுதியாக இவை அனைத்தையும் இயக்க, இந்த கட்டளையைக் கொடுங்கள்.

 

sudo update-initramfs -u

இப்போது உங்கள் உபுண்டு அட்டகாசமாக உள்ளதா? Lion OS-இன் ஆஸ்தான படங்களையும், wallpaper-களையும் நீங்கள் இணையத்தில் சுலபமாக பெறலாம். இவை அனைத்தையும் செய்த பின் உங்கள் கணினி உபுண்டுவில் தான் இயங்குகிறது என்று கூட, யாராலும் கண்டுபிடிக்க முடியாது!

 

 

ஸ்ரீராம் இளங்கோ

காரைக்குடியில் பிறந்து, தமிழுடன் வளர்ந்து, சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 19 வயது பொறியியல் மாணவன். எனக்கு மொழிகள் மேல் அலாதி பிரியம் உண்டு. ஆங்கிலத்தை நான் சுவையான மொழியாக கருதினாலும் எனக்கு பேச சொல்லி கொடுத்த தமிழை ஒரு போதும் மறந்தது இல்லை.
இணையத்தில் என் தாய்மொழி இரண்டவது பிறப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி துணிகிறேன்.

எனது வலைத்தளம் – www.sriramilango.co.nr

மின்னஞ்சல்  : sriram.04144@gmail.com

%d bloggers like this: