வானிலை அறிவிப்பு செயலி(weather reporting app)எனும் போது, நம்மில் பலருக்கும் நினைவில் வருவது google நிறுவனத்தின் உடைய வானிலை அறிவிப்பு செய்தி தான்.
ஆண்ட்ராய்டுக்கு என பிரத்தியேகமாக, சில வானிலை அறிவிப்பு செயலிகளும் காணப்படுகின்றன.
ஆனால், இவற்றில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை எப்பொழுதும் உங்களுடைய இருப்பிட அனுமதியை(granting location access) இவற்றிற்கு வழங்க வேண்டும்.
உங்களுடைய இருப்பிட செயல்களை, இவை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்கும்.
அதேநேரம், வானிலை முன்னறிவிப்புகளில் பல நேரம் பிழைகள் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
பலரும் கட்டற்ற திறந்த நிலை வானிலை அறிவிப்பு செயலியை(foss weather app) தேடிக் கொண்டிருப்பார்கள்.
பெரும்பாலும் கணினிகளில் இதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், மொபைல் போனுக்கு என பிரத்தியேகமாக இத்தகைய செயலிகள் காணப்படுவதில்லை.
ஆனால், இந்தக் குறையை போக்குவதற்கு தான் cirrus செயலி வந்திருக்கிறது.
இந்த செயலியில், உங்களுடைய பகுதியின் வானிலை முன்னறிவிப்பு தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
இரண்டு கட்டற்ற வானிலை அறிவிப்பு இணையதளங்களோடு இணைந்து இந்த செயலி பணியாற்றுகிறது.
முழுக்க,முழுக்க திறந்தநிலை பயன்பாடாக உள்ளது தான் இதன் குறிப்பிட்ட சிறப்பாகும்.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும், உங்களுடைய இருப்பிட அனுமதி வழங்கலாம். இல்லை, உங்களுக்கு விருப்பமான நகரத்தை தேர்ந்தெடுத்து அதன் வானிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ள முடியும்.
நான் வசிக்கும் நாகர்கோவில் பகுதியில் வானிலை அறிவிப்புகளை 70% துல்லியத்தோடு இந்த செயலி வழங்குகிறது.
மேலும் அறிவிப்புகளையும் கடந்து நிகழ் நேர வரைபட வசதியும்(on-time weather mapping)இதில் காணப்படுகிறது.
இதன் மூலம் நிகழ் நேர வானிலை வரைபடத்தை உங்களால் பயன்படுத்த முடியும்.
அறிவியல் துறை மற்றும் வானியல் துறையில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த செயலியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும்.
மிகவும் எளிமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி, உங்கள் மொபைல் போனில் 20mb க்கு மேல் இடத்தை அடைப்பதும் இல்லை.
கீழே வழங்கப்பட்டுள்ள, அதிகாரப்பூர்வ இணைப்பை பயன்படுத்தி f droid தளத்திலிருந்து இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கி கொள்ளலாம்.
f-droid.org/en/packages/org.woheller69.omweather/
இதுபோன்ற, ஏற்கனவே கட்டுரை எழுதி இருந்த கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பற்றி படிக்க விரும்பினால்! கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்.
kaniyam.com/category/open-source-android-apps/
மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றுங்கள்.
உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி,
நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com