PPA வழியாக Android SDK நிறுவுதல்

அன்புடையிர் வணக்கம் !PPA ஓர் அறிமுகம்:

Personal Package Archiveஐ (PPA) பயன்படுத்தி பயனாளிகள் மென்பொருட்களையும் அதன் புதிய பதிப்புகளையும் எளிமையாக பகிர்ந்துகொள்ளலாம்.

இதன் மூலம் உபுண்டு பயனாளிகள் Standard Packagesகள் தானாக புதுப்பிக்கப்படுவதைப் போன்று PPAவில் உள்ள Packageகளும் நிறுவப்பட்டு புதுபிக்கப்படும்.

புதிதாக ஒரு repositoryஐ சேர்க்க இரு முறைகள் உள்ளன.

1. Terminal கட்டளை:

sudo add-apt-repository ppa:<repository Name>

2. Ubuntu Software Centerஐ திறந்த பிறகு Edit ->Software Sourcesஐ தேர்ந்தெடுங்கள். வருகிற Software Sources பெட்டியில் Other Softwares tabiil ல்,Add Buttonஐ சொடுக்குங்கள்.

 

 

இப்பொழுது software-properties-gtkபெட்டியில் 

APT Line : ___________________________

 

என்று வரும். இதில் PPAவுக்கான sourceஐ தட்டச்சு செய்யுங்கள்.

 

Android SDK:

Android Software Developement Kit (SDK) என்பது Android

இயங்குதளத்தில் இயங்கக்கூடிய மென்பொருட்களை உருவாக்க உதவும் ஒரு மென் கருவி(tool).

Android DT:

Android Development Tools (ADT) என்பது ஒரு Eclipse IDEகான plugin. இதன் மூலம்,Eclipse IDE யில் Android SDKயையும் பயன்படுத்தி Androidகான அப்பிளிகேசன்களை எளிமையாக உருவாக்கலாம். ADT 18.0 என்பது தற்போதைய ADT பதிப்புகளில் புதுமையானது.

முதலில் Eclipse IDEயும் Java JDKவும் நிறுவுங்கள். அடுத்து பின் வரும் முறையை தொடருங்கள்.

நிறுவும் முறை:

1.முதலில் டெர்மினலை திறவுங்கள்.

 

2. பிறகு sudo add-apt-repository ppa:upubuntu-com/devel

என்று தட்டச்சு செய்து சொடுக்குங்கள்.

 

தற்பொழுது sudo கட்டளையை பயன்படுத்தி இருப்பதால் கடவுச்சொல்

கேட்கப்படும். கடவுச்சொலை தட்டச்சு செய்த பின்னர், இப்பொழுது Android SDK நிறுவ தேவையான repository நம் உபுண்டு இயங்குதளத்தில் சேர்க்கப்படும்.

 

3.அடுத்ததாக

sudo apt-get update

கட்டளையை கொடுங்கள்.இப்பொழுது, உபுண்டு இயங்குதளம் புதிய தரவுகளை தரவிறக்கம் செய்யும்.

 

4.பிறகு,

sudo apt-get install android-sdk

 

என்ற கட்டளையைக் கொடுக்கவும்.

இக்கட்டளை Android SDKயை “/usr/bin/android-sdk-linux” folderல் நிறுவும்.

 

 

ஆஹா ! Android SDK Manager நிறுவப்பட்டது.

 

ADT PluginEclipseடன் இணைத்தல்:

Android SDK Managerரை திறவுங்கள்.

 

 

Eclipse IDE யையும் திறவுங்கள்.

Eclipseயில்

Help > Install New Softwareஐ தேர்வு செய்யுங்கள்.

 

 

திரையில் தோன்றிய உரையாடல் பெட்டியில் Add பொத்தானை சொடுக்கவும்.

 

 

முறை 1:

வருகிற Add Repository பெட்டியில்

 

Name: ADT Plugin

Location: dl-ssl.google.com/android/eclipse/

என்று தட்டச்சு செய்யுங்கள்.

 

முறை 2:

developer.android.com/sdk/eclipse-adt.html#installing

என்ற தளத்தில் ADT-18.0.0.zip ( dl.google.com/android/ADT-18.0.0.zip ) தரவிரக்குங்கள். Archive பொத்தானை கிளிக் செய்து தரவிரகிய Zip fileலின் Pathஐ கொடுங்கள்.

அடுத்தது Developer Toolsஐ தேர்வு செய்து பின்னர் Next பொத்தானை சொடுக்குங்கள்.

 

 

வருகிற விண்டோவில் என்னன்னா டூல்கள் இன்ஸ்டால் ஆகவேண்டுமோ அவை காட்டப்படும்.

Next பொத்தானை சொடுக்கியதை தொடர்ந்து License Agreement

காண்பிக்கப்படும்.

அதில் ஒப்புக்கொண்டு Finish பொத்தானை சொடுக்குங்கள்.

தற்பொழுது ADT Plugin நிறுவப்பட்டு Eclipse ரீஸ்டார்ட் ஆகும்.

 

Android SDKவை Eclipseடன் இணைத்தல்

 

பிறகு Window->Preferences தேர்வு செய்க.

இப்பொழுது Side Paneனில் Android சொடுக்கவும். அதில் SDK Location: என இருக்கும். Browse Buttonஐ கிளிக் செய்து Pathஐ செட் செய்யவும். நாம் “/usr/bin/android-sdk-linux” என்னும் இங்கு Pathஐ செட் செய்ய வேண்டும்.

இனி OK Buttonஐ சொடுக்கி தொடுருங்கள். இனி Android Apps களை உருவாக்கலாம்.

தொடருங்கள் .

 

 

 

 

ராஜேஷ் குமார், கணிப்பொறி பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவர்.University College Of Engineering, விழுப்புரம்

மின்னஞ்சல்: gprkumar@gmail.com

%d bloggers like this: