கணியம் அறக்கட்டளையின் Project Ideas-ல் Kondasamy Jayaraman என்பவரால் முன்மொழியப்பட்ட கருத்துதான், தினம் ஒரு தமிழ் சொல் – Twitter bot தமிழ் சொற்களை Twitter, Mastodon, Facebook போன்ற சமூக வலைதளங்களில் தினமும் தமிழ் சொற்களையும் உடன் அதன் பொருளையும் சேர்த்து, பதிவிடலாம் இதன் மூலம் இதுவரை நமக்கு அறிமுகமாகாத புதிய சொற்களையும், பழக்கத்திலிருந்து மற(றை)ந்த சொற்களையும் தெரியப்படுத்தும் ஒரு முயற்சி.
பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பங்கள்:
விக்சனரி-யில் இருந்து சொற்களை அதன் பொருளுடன் எடுத்து, அதை Back4App-ல் தரவுத்தளத்தை(Database) உருவாக்கிச் சேகரித்துவைத்துள்ளோம்.
தினமும் மூன்று முறை(8 மணி நேர இடைவெளியில்) Heroku, இந்தப் பைத்தான் நிரலை இயக்கி, சேகரிக்கப்பட்ட சொற்களிலிருந்து ஒரு சொல்லை எடுத்து, டிவிட்டரில் பதிவிடும்.
தற்பொழுது, டிவிட்டரில் பதிவிடும் படியாகத்தான் எழுதியுள்ளோம். இன்னும் Mastodon தேவையெனில் Facebook-லும் பதிவிடும் படியாக இந்த நிரலை மேம்படுத்த வேண்டும்.
GitHub Source: github.com/KaniyamFoundation/DailyOneTamilWord
Discussion : github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/31