பழைய பதிவுக் கோப்புகளை நீக்குதல்

நீங்கள் உபயோகப்படுத்தும் ஒரு மென்பொருள் ஒவ்வொரு முறை அதை உபயோகப்படுத்தும் போதும், வெளியீடுகளை ஒரு பதிவுக் கோப்பில்(log file) எழுதுகிறது என்று வைத்துக் கொள்வோம். சில மாதங்களுக்குப் பிறகு உங்கள் கணினியை நீங்கள் சோதிக்கும் போது, அந்த பதிவுக் கோப்புகளே வட்டின் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. இப்போது நீங்கள் 30 நாட்களுக்கும் மேலான பழைய பதிவுக் கோப்புகளை நீக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள். இதற்காக நீங்கள் நிரம்ப யோசிக்க வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை முனையத்தில் தட்டினால் போதும்.

 

$ find /tmp/test/ -mtime +30 -type f -delete

 

இந்தக் கட்டளையில்,

find = ‘find’ கட்டளை கோப்புகளைத் தேடுவதற்குப் பயன்படுகிறது

/tmp/test = பதிவுக் கோப்புகள் உள்ள அடைவு (directory)

-mtime +30 = 30 நாட்களுக்கும் மேலான கோப்புகள்

-type f = வழக்கமான கோப்பு வகை (regular file)

-delete = கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைக்குப் பொருந்தும் கோப்புகளை நீக்கச் சொல்கிறது

 

இதே பணியை பின்வரும் கட்டளையைப் பயன்படுத்தியும் செய்ய முடியும்: –

 

$ find /tmp/test/ -mtime +30 -type f -exec rm {} \;

 

 

இங்கே,

-exec rm {} \; = கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைக்குப் பொருந்தும் கோப்புகளின் மேல் ‘rm’ கட்டளை செயல்படுத்தப்படும்

 

 

இரா.சுப்ரமணி

 

 

%d bloggers like this: