ஆராய்ச்சி முடிவுகள் திறந்த அணுகலில் பொதுமக்களுக்குக் கிடைக்க டெல்லி பிரகடனம்

இந்தப் பிரகடனம் இந்தியாவில் பொது நலனுக்காக ஆராய்ச்சி வெளியீடுகளின் அணுகலைத் திறக்கப் பாடுபடும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்களை உள்ளடக்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டது. திறந்த அணுகல் இயக்கம், ‘பொதுமக்களின் வரிப்பணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி முடிவுகளை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதை’ இலக்காகக் கொண்டது.

இந்தப் பிரகடனத்தின் பங்களிப்பாளர்கள் மற்றும் கையொப்பமிட்டோர், திறந்த அணுகல் இந்தியாவின் உறுப்பினர்கள், மற்றும் புது டெல்லியில், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 நடைபெற்ற கலந்தாய்வில் பங்கு பெற்றோர். திறந்த அறிவியல் நடைமுறையை நாங்கள் ஆதரிக்கிறோம் (“சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிப்பதை” தவிர்க்கும் விதத்தில் வெளிப்படையாக ஆராய்ச்சி முறைகள் மற்றும் முடிவுகளைப் பகிர்தல்).

ஆராய்ச்சியாளர்களும் அறிவியலர்களும் சமநிலை மதிப்பாய்வில் வெளிப்படையான நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவோம் மற்றும் அறிவியலர்கள் சமூகத்தைத் திறந்த அணுகலில் தங்கள் பத்திரிகைகளை வெளியிடுவதற்கு ஊக்குவிப்போம். பொதுமக்களின் நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சியின் எல்லா வெளியீடுகளையும் (பத்திரிகை வெளியீடு மட்டுமல்ல) திறந்த உரிமங்களில் திறந்த வடிவங்களில் எந்த ஊடகத்திலும் வெளிப்படையாகப் பயன்படுத்த மற்றும் பகிர்வதற்கு உரிமம் வழங்க வேண்டும் என்ற கருத்தை முன்வைப்போம்.

மூலக்கட்டுரை இங்கே

One thought on “ஆராய்ச்சி முடிவுகள் திறந்த அணுகலில் பொதுமக்களுக்குக் கிடைக்க டெல்லி பிரகடனம்

  1. சொக்கலிங்கம் கருப்பையா

    மிக்க நன்றி அசோகன்.

    Reply

Leave a Reply to சொக்கலிங்கம் கருப்பையாCancel reply