தொலைத் தொடர்புத் துறையில் நீண்ட அனுபவம் உள்ள அரவிந்த் பத்மநாபன் சில ஆண்டுகளுக்கு முன்பு பொருட்களின் இணையத்துக்கு (Internet of Things, IoT) ஒரு திறன்பேசி செயலியை உருவாக்க விரும்பினார். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜாவாஸ்கிரிப்ட் கற்றுக்கொண்ட அவர் இணையத்தில் நிரலாக்க மொழியில் முன்னேற்றங்கள் பற்றி ஆராயத் தொடங்கினார். இது செயலியை உருவாக்க அவசியமாக இருந்தது. ரியாக்ட் நேட்டிவ் (React Native) என்னும் தன்னக செயலிகளை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.
“நான் திறன்பேசி செயலி வடிவமைப்பு மற்றும் நிரலாக்கம் செய்ய விரும்பினேன். பயனர் இடைமுகத்தை வடிவமைக்க நேராக ரியாக்ட் நேட்டிவ் கற்றுக் கொள்ள முயற்சி செய்தேன். நான் ஜாவாஸ்கிரிப்ட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாயிற்று. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதைப் புரிந்துகொள்வது எனக்குக் கடினமாக இருந்தது, “என்று பத்மநாபன் (42 வயது) கூறுகிறார். ஒரு சில கூகிள் தேடல்களுக்குப் பிறகு, மென்பொருள் மொழிகள், கட்டமைப்புகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றிற்கு எளிமையான அறிமுகங்கள் எதுவும் இல்லை என்று அவர் உணர்ந்தார். ஸ்டேக் ஓவர்ஃப்ளோ (StackOverflow), கோட் ப்ராஜெக்ட் (CodeProject) போன்ற பல இணையதளங்கள் நிச்சயமாக உள்ளன. ஆனால், பத்மநாதனுக்கு இவை வேலைக்கு ஆகவில்லை. ஏற்கனவே அத்துறைகளில் பணிபுரிபவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இவை பயன்படும் – புதிதாகக் கற்றுக் கொள்பவர்களுக்கு அல்ல.
நிரலாளர்களுக்கான தொழில்நுட்ப தலைப்புகளை எளிதாக்க முற்படும் திறந்த மூல உள்ளடக்க தளம் டெவோபீடியாவை உருவாக்கும் யோசனை அவருக்கு வந்தது. விக்கிபீடியாவின் முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்த வலைத்தளம், தொழில்நுட்பத்தை புதிய பயிலுநர்கள் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது. உலகெங்கிலும் செல்லக்கூடிய இந்தியாவின் முதல் திறந்த மூல இயக்கமாக டெவோபீடியா இருக்கக்கூடும் என்று அவர் நம்புகிறார்.
இது பற்றி சிவம் சிரிவாஸ்தவ் (Shivam Srivastav) எழுதிய முழுக் கட்டுரை இங்கே.
மாதிரி டெவோபீடியா பக்கம்: பைத்தான் நிரலாக்க மொழி