யுனிக்ஸ் பிறந்த கதை
மீண்டும் ஒரு மாலைப்பொழுது, கதை கேட்கும் ஆர்வத்தில் கார்த்திகா மதனின் இடத்திற்கு சிறிது சீக்கிரமாக வந்துவிட்டாள், ‘என்ன பிரதர், டாஸ்க் எதுவும் இல்லையா, நியூஸ் படிச்சிட்டு இருக்கீங்க.’ கேட்டவாரே அருகில் இருந்த சேரில் அமர்ந்தாள். ‘வேலை எல்லாம் முடிச்சாச்சா?’, விசாரித்தான் மதன். ‘லினக்ஸ் கதையை கேட்க சீக்கிரம் வந்துட்டேன். ஆரம்பிங்க.’, அவசரப்படுத்தினாள்,
-
மதன்
ஸ்கிரீன் ஓப்பன் பண்ணா, ஒரு பெரிய ரூம், அங்கு ஒரு பெரிய மெஷின், அதுக்கு பேரு விர்ல்வின்ட் ஒன் (Whirlwind I) இது அமெரிக்கால MIT பல்கலைக்கழகத்தில் இருந்தது. இந்த மெஷின்ல தான் மொதல்ல ரேண்டம் ஆக்சிஸ் மெமரி வச்சாங்க (RAM). இதனால இதுக்கு முன்னாடி இருந்த கம்ப்யூட்டர் கலவிட இந்த கம்ப்யூட்டர் ரொம்ப வேகமா ரன் ஆச்சு. இந்த கம்ப்யூட்டர் மேம்படுத்தி tx-0 கம்ப்யூட்டர் உருவாக்கினாங்க. இந்த ரெண்டு கம்ப்யூட்டர்களையும் ஒருத்தர் மட்டும் தான் ஒரு டைம்ல வொர்க் பண்ண முடியும். இந்த மாதிரி ஸிங்கில் டாஸ்க்கா இருந்த ஒரு IBM 7094 கம்ப்யூட்டர டைம் ஷேரிங் மெஷினா 1963 ல மாத்தி காட்டினாங்க, அந்த டைம் ஷேரிங் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு CTSS அப்படின்னு பேர் வச்சாங்க. இந்த CTSS ஆப்ரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்த ப்ராஜெக்ட் மேக்(Project MAC) அப்படிங்கற திட்டத்தை உருவாக்கி MIT ல ஒரு குரூப் மண்டையை பிச்சுக்கிட்டு இருந்தாங்க, இவங்க கூட Bell Labs ம் GE ம் சேர்த்துக்கிட்டாங்க. இவங்க உருவாக்க போற அந்த மல்டி டாஸ்க்கிங் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு மல்டிக்ஸ்னு (multics) பேரும் வச்சுக்கிட்டாங்க.
-
கார்த்திகா
MIT, Bell Labs, GE, Multics, நியாபகம் வெச்சுக்குறேன்
-
மதன்
ஆனா இந்த மல்டிக்ஸ் ப்ராஜெக்ட்டுக்கு நிறைய பைனான்ஸ் பண்ண வேண்டி இருந்தது, அவ்வலவு செலவு செஞ்சும், எந்த ஒரு நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இல்ல, இதுக்கு மேல கண்டினியூ பண்ணா கஞ்சிக்கு கூட லாட்ரி அடிக்கணும்னு முடிவு பண்ணி 1969 ல Bell Labs ப்ராஜக்ட்ல இருந்து வெளிய வந்துட்டாங்க. இங்கதான் பிதாமகன்கள் இரண்டுபேர ஆறிமுகப்படுத்தப்போறேன், ஓருத்தர் பேரு கென் தாம்ஸன் (Ken Thomson) இன்னொருத்தர் பேரு டென்னிஸ் ரிட்சி (Dennis Ritchie), இவங்க ரெண்டு பேரும் Bell Labs காக மல்டிக்ஸ் ப்ராஜக்ட் வொர்க் பண்ணவங்க.
-
கார்த்திகா
டென்னிஸ் ரிட்சி (Dennis Ritchie), பேர எங்கேயோ கேள்விபட்டிருக்கேன்
-
மதன்
இந்தியாவ கண்டுபிடிக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு கப்பல் ஏறி வரும் போது காத்தடிச்சு வழி தெரியாம அமெரிக்கால லேண்டானாரே அவர்தான்.
-
கார்த்திகா
ஆமால்ல, இல்ல, அவரு பேரு கொலம்பஸ், எனக்கேவா, நாங்களும் ஹிஸ்டரி படிச்சிட்டு தான் வந்திருக்கோம், கதைக்கு வாங்க
-
மதன்
Bell Labs க்கு ரிட்டர்ன் ஆன ரெண்டு பேரும் அவங்க மல்டிக்ஸ்ல கத்துக்கிட்ட விஷயங்கள அவங்களோட குளோஸ் பிரண்ஸ் கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டாங்க, அவங்கள்ல முக்கியமானவர் Doug Mcllroy, அவங்க ரிசர்ச் சென்டரோட வருங்கால ஹெட். வந்தவங்க ரெண்டு பேரும் பெஞ்சில் இருக்கோமே ஒரு டூர் அடிக்கலாம்னு இல்லாம, எங்களுக்கு ஒரு மிஷின் வேணும் மல்டிக்ஸ் பத்தி நிறைய ஐடியா இருக்குன்னு கம்பெனி கிட்ட கேட்டாங்க. போங்கடா, பெழப்பு கெட்ட பசங்களா, நீங்க குருவி வெடி வெடிக்க நான் காசை கரியாக்கனுமா? அப்படின்னு சொல்லி ப்ரபோசல் ரிஜக்ட் பண்ணிட்டாங்க.
-
கார்த்திகா
குருவி வெடி, இதையும் நியாபகம் வெச்சுக்கறேன்.
-
மதன்
அப்பத்தான் இவங்க கிட்ட ஓரங்கட்டின ஒரு PDP-7 மெஷின் கெடச்சது. தாம்சன் என்ன பண்ணாறு, அவரு ஏற்கனவே மல்டிக்ஸ்ல எழுதின ஸ்பேஸ் டிராவல் கேம, இவங்ககிட்ட இருக்குற ஐடியாக்கள் யூஸ் பண்ணி PDP-7 னின் அசம்ளி லாங்குவேஜ்ல எழுதிட்டாரு. இதுல கெடச்ச கான்பிடன்ஸ் வெச்சு, பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து PDP-7 ல ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கிட்டாங்க. இதுக்கு UNICS னு பேரும் வெச்சுட்டாங்க. இவங்கள்ல ஒருத்தர் Kerningen, இவருக்கு UNICS ல லாஸ்ட்டா இருக்குற S எழுத்து புடிக்காம அத X ஆ மாத்தி, UNIX ஆக்கிட்டாரு. இது நடந்தது 1970.
-
கார்த்திகா
UNIX இப்படித்தான் வந்ததா? இன்ட்ரஸ்டிங்
-
மதன்
கொஞ்ச நாள்லயே Doug Mcllroy ரிசர்ச் சென்டர் ஹெட் அனாரு, இவங்களோட வொர்க் புடிச்சு போக, இவங்களுக்காக PDP-11 வாங்க கம்பெனிக்கு சஜஸ்ட் பண்ணாரு. PDP-7 ல இருந்து PDP-11 க்கு UNIX போர்ட் பண்ணாங்க, கூடவே கம்பெனிக்கு தேவையான ஒரு சாப்ட்வேர அதுல ரன் பண்ண வச்சாங்க. தாம்சன் அதேநேரம் ஈஸியா ப்ரோக்ராம் எழுத B னு ஒரு லாங்வெஜ் BCPL ன்ற லாங்வெஜ்ல இருந்து உருவாக்கினார், அத Dennis Ritchie இன்னும் மெருகேற்றி ஈஸியா ப்ரோக்ராம் எழுத ரொம்ப ஈஸியான லாங்குவேஜ்ஜா மாத்திட்டாரு. அதுக்கு பேரு C அப்படின்னு வச்சுட்டாரு. ப்ரண்ட்ஸ் எல்லாம் மறுபடியும் சேர்ந்து அசம்லில இருந்த UNIX ச C ல எழுதிட்டாங்க. இப்படித்தான் C லாங்குவேஜ் வந்தது. இது நடந்தது 1972. இவங்க எக்ஸ்ராவா, நிரைய கமாண்ஸ்களையும் UNIX காக C ல எழுதிட்டாங்க, அப்படி வந்துதான் ls, grep, cut, mv எல்லாம்.
-
கார்த்திகா
கரெக்ட், C லாங்வேஜ், Dennis Ritchie, இப்பதான் நியாபகம் வருது, C ரொம்ப ஈஸியான லாங்குவேஜ்ஜா?
-
மதன்
அது அவர்களுக்கு
-
கார்த்திகா
சரி மேல சொல்லுங்க, ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போகுது
-
மதன்
அதுக்கப்புறம் Bell Labs ல மட்டும் இருந்த UNIX ச தாம்சன் என்ன பண்ணாரு, அவர் படிச்ச Berkeley யூனிவர்சிட்டி ரிசர்ச் பசங்களுக்கு காண்பிச்சு கத்தும் கொடுத்துட்டாரு. அங்க இருந்த பசங்கல ஒருத்தர்தான் Bill Joy, இவரு கையும் காலையும் வச்சிக்கிட்டு சும்மா இல்லாம, vi எடிட்டர் எழுதிட்டாரு. இதை பார்த்த பசங்க நீ மட்டும் தான் எழுதுவியா, நானும் எழுதுறேன் பாரு அப்படின்னு சொல்லிட்டு ஏகத்துக்கும் UNIX கமாண்ஸ்ஸ C ல எழுத ஆரம்பிச்சுட்டானுங்க. அப்படி வந்ததுதான், sed, awk எல்லாம். இதுக்கிடையில அமெரிக்க ஆர்மி யோட டிபன்ஸ் டிப்பார்ட்மென்ட், இந்த பசங்க கிட்ட வந்து தியரியா இருக்குற ஒரு நெட்வொர்க் டிசைன்ன இம்பிளிமெண்ட் பண்ண சொன்னாங்க. இவனுங்க அத இம்பிளிமெண்ட் பண்ணதுக்கு பேருதான் பெர்க்லி சாக்கெட்ஸ் (Berkeley Sockets), இந்த இம்ளிமெண்டேஷன ஆர்மி எடுத்துட்டு போய் அவங்க கிட்ட இருந்த UNIX சிஸ்டங்களில் இண்ஸ்டால் பண்ணி ARPANET உருவாக்குனாங்க, அதுதான் இன்னைக்கு INTERNET டா வளர்ந்து நிக்குது.
-
கார்த்திகா
INTERNET பொறந்ததே UNIX லயா, சூப்பார்ப், பர்ஸ்டைம் இத கேல்விப்படறேன்
-
மதன்
சாப்ட்வேர் இன்டஸ்ட்ரீல நடந்த மேஜர் ஈவன்ஸ் எல்லாம் UNIX வழி வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள்ளதான் நடந்தது, ஒன்ன தவிர
-
கார்த்திகா
அந்த ஒன்னு என்னது?
-
மதன்
அதப்பத்தி அப்புறமா சொல்றேன்.
இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சுரேஷ் அவர்களிடம் வந்து, கலாய்பதாக நினைத்துக்கொண்டு, குட்டையை குழப்பினான், ‘அட்மின், இவகிட்டயா, அனேகமா நாளைக்கு டாக்டர்ட உங்க காத காட்ட வேண்டியிருக்கும் சீக்கிரம் வீட்டுக்கு எஸ்கேப் ஆயிடுங்க, உங்க பசங்க தேட போறாங்க’ சொல்லிட்டு மதன் அடிக்க வருவானோ என்று பயந்து ஓடிவிட்டான். ‘பசங்களா? எனக்கா?’ மதனை முறைத்தவாறு கேட்டாள். ‘நீங்க சொன்ன அதே ‘ஐயாம் 32 நவ்’ பொய், அத அப்டியே மெயின்டேன் பண்ணுங்க, அதுதான் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது’ சமாளித்தான் மதன். ‘என்ன பாத்தா 32 மாதிரியா தெரியுது’, கடுப்பாகி கேட்டாள். ‘போனானே அவனும் இதத்தான் கேட்டான். அதுக்கு நான் ஒன்னு சொன்னேன், நம்பிட்டான்’ என்றான். ‘என்ன சென்னீங்க?’ என்றாள், ‘சொன்னா டென்ஷன் ஆக கூடாது’ என்றான், ‘நான் ஏற்கனவே கடுப்புல தான் இருக்கேன், என்ன சொன்னீங்க?’ வெறித்தனமாக கேட்டாள். ‘ஹய் கிளாஸ் ஆன்டிங்கள்லாம் சின்ன பொண்ணா தெரிய பப்புக்கு பேய் வைன் அடிப்பாங்க அதனால்தான் நீங்க சின்ன பொண்ணா தெரியறீகன்று சொன்னேன்’ நடந்ததை கூறினான் மதன். ‘என்ன ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டீங்க’ கேபித்தாள். ‘சரி, நாளைக்கு எல்லாறையும் கூப்டு, அட்மின் ஆன்ட்டி இல்ல சின்ன பொண்ணுதான், அப்ளிகேஷன் போட்றவங்க போடலாம்னு அனோன்ஸ் செஞ்சிடறேன் போதுமா?’ என்றான். ‘நீங்க சும்மா இருந்தாலே போதும், நான் ஆல்ரெடி ரிசர்வ்டு, கதைக்கு வாங்க’ என்றாள்.
‘நெனச்சன்டி, நீ புக்காயிட்ருப்பண்ணு, எந்த பொன்னு இன்னைக்கு 27 வயசு வரைக்கும் ப்ரீயா இருக்கா, அதுவும் உன்ன மாதிரி IT ல இருக்குறவளுங்க, அதனாலத்தான் அனுபவஸ்தன் ஒருத்தன், நீ விரும்புற பொண்ண கட்டுனா அதுக்கு பேரு லவ் மேரேஜ், இன்னொருத்தன் விருப்புன பொண்ண கட்டுனா அதுக்கு பேரு ஆரேஞ்ச் மேரேஜ்னு டிவிட்டர்ல டிவீட்ட பேட்டான்.’ மனசாட்சியின் குரல் மதனுக்கு கேட்டது.
-
மதன்
சரி கதைக்கு வருவோம். இப்படி UNIX வளர்ந்து வந்த நேரத்தில், சாப்ட்வேர் இன்டஸ்ட்ரீல ஒரு தொற்றுநோய் பரவுச்சு. அதுவரைக்கும் சாப்ட்வேர் விற்கும் போது அதோட சோர்ஸ் கோடையும் சேர்ந்து கொடுப்பாங்க, 1970 ஸ் எண்டுளையும் 1980 ஸ்டார்டிங்ளையும் இந்த வழக்கம் மாறிடுச்சு. கம்பெனிங்க மத்த கம்பெனிங்களுக்கு அவங்க எழுதிய லாஜிக் தெரியக்கூடாதுன்னு சாப்ட்வேர் விற்கும்போது சோர்ஸ் கோட் தர மறுத்தாங்க. அதுவரைக்கும் மேத்தமெடிக்ஸ் தியரம் மாதிரி ஈஸியா கெடச்சிக்கிட்டிருந்த சோர்ஸ் கோடுங்கல கண்ல பார்ப்பதே குதிரைக் கொம்பா மாறிடுச்சு. சாதாரணமாக இருந்த சாப்ட்வேர் புரொபிரைட்டரி சாப்ட்வேரா (proprietary software) மாறிடுச்சு. இதனால ஓரு யூசர் அவன் காசு கொடுத்து வாங்கின ப்ரோக்ராம்ல ப்ரச்சன இருந்துச்சுன்னா அத அவனாலேயே சரி பண்ணிக்க முடியல, மறுபடியும் வாங்கின கம்பெனி கிட்ட ஓட வேண்டி இருந்தது. அந்த கம்பெனி அந்த யூசர் பிரச்சனைய சரிபன்ன சர்வீஸ் சார்ஜா மறுபடியும் காச கரந்தானுங்க.
-
கார்த்திகா
அவுங்க எழுதிய ப்ரோக்ராம்ல இருக்குற பிரச்சனைய கிளியர் பண்ண யூசர் இன்வஸ்ட் பண்ணனுமா, நல்ல கதையா இருக்கே??
-
மதன்
அப்படி நொந்து போனவர்கள்ல ஒருத்தர்தான் Richard Mathew Stallman, இவரு MIT ல ஒர்க் பண்ணும் போது அங்கிருந்த ஒரு புது பிரிண்டர்ல இவருக்கு தேவையான ஒரு விஷயம் இல்ல, அத நானே அந்த பிரிண்டர்ல சேர்த்துக்குறேன் எனக்கு அந்த பிரிண்டர் டிரைவர் சோர்ஸ் கோட கொடுங்கன்னு அந்த ப்ரின்டர் கம்பெனி கிட்ட கேட்டார், அதற்கு அந்த கம்பெனி ‘போயா லூசு, எந்த காலத்துல இருக்க, வாங்கும்போது காப்பிரைட் லைசன்ஸ் பார்த்தியா இல்லையா, அதுல சோர்ஸ் கோட் கொடுக்கமாட்டோம்ன்னு போட்டிருக்கோம்ல, அந்த லைசென்ஸ அக்சப்ட் பண்ணிட்டு தான ப்ரின்டர் வாங்குன, இப்ப சோர்ஸ் கோட் கெட்குற?’ னு சொல்லி தொரத்திடுச்சு. அப்ப முடிவு செஞ்சார், ‘இருங்கடா, இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்றேன், இன்னைக்கு பாப்புலரா இருக்குற புரோபிரைட்டரி யுனிக்ஸ் மாதிரியே ஒரு ஆப்ரேட்டிங் சிஸ்டம் எழுதி அத காபிலெப்ட் லைசென்சா சோர்ஸ் கோடோட கொடுக்கிறேன்’ அப்படின்னு முடிவு பண்ணி எழுதவும் ஆரம்பிச்சுட்டார். அவர் எழுத ஆரம்பிச்ச அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு பேரு GNU/Hurd, அவர் சொன்ன அந்த காபிலெப்ட் லைசென்சுக்கு பேரு GPL. இந்த GPL லைசென்ஸ் யூஸ் பண்ற சாப்ட்வேர்களின் சோர்ஸ் கோட யாருவேனும்னாலும் படிக்கலாம், அதுல தப்பிருந்தா திருத்தலாம், எப்படி வேணும்னாலும் இயக்கலாம், ஒரிஜினல் சோர்ஸ் கோட யாருக்கு வேண்டுமானாலும் பகிரலாம், அதுமட்டுமல்லாம திருத்தின சோர்ஸ் கோட யாருக்கு வேண்டுமானாலும் பகிரலாம். இதுக்கு பேரு போர் ஃப்ரீடம்ஸ் (Four Freedoms) அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரியான சாப்ட்வேர்கள் தான் ப்ரீ சாப்ட்வேர்ஸ் (Free Software) இல்லின்னா ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் அப்படின்னு (Open Source Software) சொல்லுவாங்க. இந்த மாதிரி இருக்குற ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேரை விக்க முடியாது, ஏன்னா சோர்ஸ் கோடையே ப்ரீயா தராங்க, அதனால் யார் வேண்டுமானாலும் காப்பி எடுத்துக்கலாம்.
-
கார்த்திகா
Open Source னா சோர்ஸ் கோட படிக்க முடியும், இப்பதான் தெளிவா புரியுது, இவ்வளவு நாளா Open Source க்கு அர்த்தம் புரியாம லினக்ஸ் அட்மினா இருந்திருக்கேன், அப்ப GNU/Hurd என்ன ஆச்சு?
-
மதன்
சொல்றேன், அப்படி எழுத ஆரம்பிச்சவரு, அவரு எழுதின சாப்ட்வேர்சை usenet ல இவர மாதிரி இருக்குற ப்ரோக்ராமர்ஸ் கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டாரு. சோர்ஸ் கோட பார்த்தவங்க அதிலிருந்த மிஸ்டேக் எல்லாம் பிக்ஸ் பண்ண ஆரம்பிச்சாங்க, இப்படி இன்ட்ரஸ்டா ஒர்க் பண்ணவங்க ஒன்னா சேர்ந்து ஒரு குழுவை ஆரம்பிச்சாங்க. அதுக்கு பேரு GNU Project. ஸ்டால்மன் யுனிக்ஸ்ல இருக்குற மாதிரியே பல கமாண்ட்ஸ் ஏழுதினாரு, gcc ன்ற ஒரு C கம்பைலர் எழுதினாரு, emacs எழுதினாரு, ஆனா இவறால இவர் யோசிச்சு வச்சிருந்த Hurd kernel ல எழுத முடியல, ஒரு ஆப்ரெட்டிங் சிஸ்டத்துல கர்னல் இல்லாம எதுவும் இயங்காது, இவரு ஒரு OS க்கு தேவையான எல்லாத்தையும் எழுதிட்டாரு கர்னல தவிர.
-
கார்த்திகா
அப்ப அவரோட கனவு என்னாச்சு?
-
மதன்
அவரோட கனவு 1991 ல நிஜமாச்சு. பின்லாந்தில் (Finland) ஹெல்சிங்கி யூனிவர்சிட்டில படிச்சிட்டிருந்த லினஸ் டார்வெல்ஸ் (Linus Torvalds) ன்ற ரிசர்ச் ஸ்டுடென்ட், தன்னோட குரு Andrew Tanenbaum கிட்ட இருக்குற யுனிக்ஸ் கர்னல போல இருக்கும் மினிக்ஸ் (minix) கர்னல மாதிரி தானும் ஒரு கர்னல உருவாக்க நினைச்சார், ஆனா அவர் மினிக்ஸ் மாதிரி மைக்ரோ கர்னலா இல்லாம ஒரிஜினல் யுனிக்ஸ் மாதிரி ஒரு மோனோலிதிக் கர்னல உருவாக்கினார். அதுக்கு லினக்ஸ் அப்படின்னு பேர் வந்தது, லினக்ஸ் கம்பைல் பண்ண, டார்வெல்ஸ், ஸ்டால்மன் எழுதிய gcc கம்பைலர் யூஸ் பண்ணார். அதுமட்டுமில்லாம ஸ்டால்மன் எழுதின பல ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர்ஸ் யூஸ் பண்ணார். தன்னோட கர்னலும் ஸ்டால்மன் சாப்ட்வேர்ஸ் போல எல்லாரும் பயன்படுத்தனும், தவறு இருந்தா திருத்தனும் அப்படின்னு ஆசைப்பட்டவர் ஸ்டால்மன் மாதிரி அவரோட கர்னல GPL லைசன்ஸ்ல வெளியிட்டார். உலகத்துல இருக்குற பல புரோகிராமர்கள் அவர் கர்னல்ல வொர்க் பண்ண ஆரம்பிச்சாங்க. லினக்ஸ் கர்னல் மட்டும் வச்சு ஒன்னும் பண்ண முடியாது, அதேபோல GNU ப்ரோக்ராம்கள் கர்னல் இல்லன்னா வொர்க் ஆகாது, இந்த GNU வையும் Linux ஐயும் சிலபேர் எடுத்துக்கிட்டு தன்னோட தேவைக்கு ஏத்தா மாதிரி தன்னோட ஆப்ரேட்டிங் சிஸ்டம் இருக்கணும்னு நினச்சு வடிவமைக்க தொடங்கினாங்க. அவங்க வடிவமைத்த டிஸ்ட்ரோ (distro) அப்படின்னு ஒரு முழு GNU/Linux ஆப்பரேட்டிங் சிஸ்டமா உருவாக்கி ப்ரீயா கொடுத்தாங்க (ஏன்னா, GNU/Linux ல இருக்குற எல்லா சாப்ட்வேர்களும் ஸ்டால்மன்னோட GPL லைசென்ஸில் வெளியிட்ட சாப்ட்வேர்ஸ். அதுங்கல விக்க முடியாது, அதனால GNU/Linux ஐயும் விக்க முடியாது). காலப்போக்குல GNU/Linux ச வெறும் லினக்ஸ் (Linux) அப்படின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.
-
கார்த்திகா
ச்சான்சே இல்ல, லினக்ஸ் பின்னாடி இப்படி ஒரு கதையா? நான் ஒரு லினக்ஸ் அட்மின்னு சொல்லவே கேவலமா இருக்கு.
-
மதன்
இப்பத்தான் லினக்ஸ் பற்றி தெரிஞ்சிக்கிட்டீங்கள்ல இனி கவலை படாதிங்க, இன்னைக்கு உலகத்துல லினக்ஸ் இல்லாத இடமே இல்லை, செல்போனிலிருந்து சூப்பர் கம்யூட்டர் வரைக்கும் லினக்ஸ் தான், உங்க கையிலிருக்கும் ஆன்றாய்டு போன்ல இருந்து நாசா மார்ஸ்சுக்கு அனுப்பிய ரோவர் வரைக்கும் லினக்ஸ் தான். ஆனா இதப்பத்தி யாருக்குமே தெரியாது, ஏன், நம்ம IT ப்பீல்ட்லயே முக்காவாசி பேரு லினக்ஸ், விண்டோஸ்மாதிரி வெரும் OS தான்னு நினைச்சிகிட்டு இருக்காங்க. அது வெறும் OS இல்லைங்க, அது ஒரு உணர்வு, லினக்ஸிற்கு பின்னாடி ஒரு சரித்திரமே இருக்கு, ஒப்பன் சோர்ஸ் புரட்சிக்கு சாட்சியா கம்பீரமா நிக்கிற ஒரு சின்னம்தான் லினக்ஸ்.
-
கார்த்திகா
வசனம்லாம் செமையா வருது
-
மதன்
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், ஆரம்பிச்சா விடிஞ்சிடும், இப்ப டைம் மிட்நைட் 00:05, இன்னும் வீட்டுக்கு போகலையா?
-
கார்த்திகா
என்னது? நைட்டு பன்னெண்டா? செத்தேன், உங்க ப்ரெண்ட் சொன்னது கரெக்ட், நான் அப்பவே கிளம்பியிருக்கனும், இப்ப புரிஞ்சிக்கிட்டேன் எதுக்கு உங்கள மொக்கன்னு கூப்பிடுறாங்கன்னு, பட் ஹாட்ஸ் ஆப் டூ யூ, நான் ஹிஸ்டரி கிளாஸ்ல கூட இப்டி இன்ட்ரஸ்டா கத கேட்டதில்ல, நீங்க பண்ண இன்சல்டுக்கு ஆப்பவே எந்திரிச்சு போயிருப்பேன், என்னமோ தெரியல நீங்க எக்ஸ்ப்லெயின் பண்ண விதம் என்ன உட்கார வச்சிடுச்சு
-
மதன்
அப்ப இதுதான் லாஸ்ட்டா?
-
கார்த்திகா
பார்ப்போம், எனிவே, எ பிக் தேங்ஸ்
-
மதன்
எப்படி போவீங்க, என் பைக் எடுத்துட்டு போறீங்களா?
-
கார்த்திகா
என்ன பாத்தா உங்களுக்கு காமெடி பீஸ் மாதிரி இருக்கா?
-
மதன்
இல்லங்க, உங்க பர்ஸ்னால்டி வச்சு பாக்கும் போது ஹார்லி டேவிசன் ஓட்டுவீங்களோன்னு ஓரு கெஸ்தான்
-
கார்த்திகா
சிரிச்சிட்டேன், போதுமா, வெளிய போனா ஆட்டோ இருக்கு, அப்படி இல்லன்னா என் ஃப்ரெண்டுக்கு கால் பண்ணி அவல ஸ்கூட்டி எடுத்துட்டு வர சொல்லிடுவேன்.
-
மதன்
ஹாஸ்டலுக்கு போனப்புறம் ஒரு மெசேஜ் அனுப்புங்க, எப்படியோ நீங்க லேட்டா போறதுக்கு நான் காரணம் ஆகிட்டேன், நீங்க பத்திரமா போயிட்டீங்கன்னு தெரிஞ்சிக்கிட்டா எந்த டென்ஷனும் இருக்காது பாருங்க, அதான்
-
கார்த்திகா
அது ஹாஸ்டல் இல்ல அப்பார்ட்மெண்ட், நானும் என் ப்ரண்டும் தங்கியிருக்கோம். என்ன பத்தி நீங்க கவலைப்பட வேணாம். நீங்க பத்திரமா வீட்டுக்கு போங்க, நடு ராத்திரி மோகினி பிசாசுங்க அதிகம் சுத்துமாம், பசங்கள பாத்தா விடாதுங்களாம்
-
மதன்
நானும் சிரிச்சிட்டேன்
-
கார்த்திகா
ஓகே, பாய்
-
மதன்
சியூ
‘அந்த பொண்ணு அவளுக்கு ஏற்கனவே பாய் ப்ரெண்ட் இருக்கான்னு சொல்லிட்டு போறா, எப்பர்ரா உன்னால சாதாரணமா இருக்க முடியுது’ ஆரம்பித்தது மனசாட்சி. ‘அவளுக்கு ஆள் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன, நான் ரொம்ப நாளா யார்கிட்டயாவது சொல்லணும்னு இருந்த விஷயத்த இன்னைக்கு தான் முழுசா சொல்லியிருக்கேன், அது போதும் எனக்கு’ என்று சந்தோஷத்துடன் தன் மனசாட்சியிடம் கூறினான்.
தொடரும்..
நக்கீரன்.ந [n.keeran.kpm at gmail dot com]