GIMP 2.8 Scripts-FU பெட்டகத்தை பதிவிறக்கிக் கொள்ளுங்கள் (100க்கும் மேற்பட்ட scriptsமற்றும் filters)

GIMP 2.8 Script-FU 100-க்கும் மேற்பட்ட script-களை உள்ளடக்கியது. இவை முதலில் GIMP 2.4-கிற்காக உருவாக்கப்பட்டவை. பின்பு GIMP 2.8-கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டது. பில்டர்கள், எபெக்ட்கள் மட்டும் அல்லாது, இதில் உள்ள சில script-கள், நாள்காட்டி உருவாக்குதல், குறுந்தகடு மேல் உறை வடிவமைப்பிற்கும், watermark செய்வதற்கும் பயன்படும்.

 

புதிய GIMP 2.8 Script-FU-வில் இடம் பெற்றுள்ள Script-கள்:

 

  • Artist: Angled stroke-கள், Color Pencil, Conte-charcoal crayon, Crosshatched, Cutout, Inkpen, Note Paper, Paletter Knife, Pastel, WaterColor
  • Color: Invert, Saturation, BW from Graphic, Color Temp, Funky Color, Grey Point, Split Tone With ED, Tone Mapping
  • Contrast: Shadow Recovery, Auto Contrast, Change Contrast, High Pass, ISO Noise Reduction
  • Create new: CD label, GlassEffect Text, Glossy Orb, Letter Drop Animation, Scribbled Text, Text Balloon, Text Circle
  • Disorts: Circle Maker, Photocopy, Wrap Effect
  • Edges: Fade Outline, Fuzzy Border, Jagged Border, Translucent Border, Add Matte, Art Border, strait corners உடன், Frame போன்ற poster, round corners உடன், Frame போன்ற slide, Bevel உடன் Frame, hover effect மற்றும் round corners உடன் Frame, Photo Border Fancy, Photo Frame, Tasty Frame
  • Effects: Cartoon 2, Blackboard Effect, Cartoon Quick, Chrome Image, Cross Light, Landscape Illustrator, Lomo, Reflection, Sepoina Grafix
  • Effects Selection: Bevel Selection, Chisel Or Carve, Glass Selection, Glow Selection
  • Photo: Picture to graphic, Copyright text, EZ Red Skin Fix, Film Grain, Fix Overblown, Halftone, Highlight to Sky and Clouds, Infrared Simulation, Red Eye by Selected Area, Red Eye Desaturate, Vintage Photo, Web Photo Editor
  • Shapes: CD Mask, Circle Draw, Old Paper, Stampify
  • Sharpness: High-Passs Sharpen, BSSS-Sharpen, Midtone-Sharp, Smart Sharpening, Wisest Sharpen, Blur Non-Edges, Make wonderful, Orton
  • effect, Pixel Gradient, Sharp Blur, Soft Focus, Soft Focus Simple, Wrap Sharp
  • Sketch: quick sketch, Drawing, Line Sketch, Pastel Sketch, Pencil Sketch, Pen Drawn, Roy Lichtenstein, Synthetic Edges, Toned Line Art
  • Texture: Patchwork, Stained Glass, Texturizer
  • Misc: Arrow, Calendar Month, Calendar year, Prepare for Colorize, Remove Paths, Remove Settings, Step Resize, Stoked text, Watermark

 

வெளியீட்டுத் தகவலின்படி இந்த script-கள் GIMP 2.6-ல் வேலை செய்யாது. எனவே இவற்றை GIMP2.8 அல்லது GIMP 2.7-ளுடன் பயன்படுத்தவும். இந்த script-களை நிறுவ, அதன் archive-ஐ தரவிறக்கி, அதை மீட்டு பின்வரும் இடங்களில் சேமிக்கவும்.

நிறுவும் முறை:

உங்கள் பயனருக்கு மட்டும் : ~/.gimp-2.8/scripts அல்லது

அனைத்து பயனாளார்களுக்கும் : /usr/share/gimp/2.0/scripts

மேலும் பல effect-களுக்கும் filter-களுக்கும், இந்த இணைப்பை பார்க்க. bit.ly/kanigimp

 

 

 

 

நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த கணியம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

வலை பதிவு : jophinepranjal.blogspot.in/

 

 

%d bloggers like this: