கணியம் – இதழ் 15

வணக்கம்.

கணியம்இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.


கணிணி துறையும் தமிம் ஒன்றையொன்று சார்ந்து வளர, மொழியியல் துறை சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் பல தேவை. தமிழ் எழுத்துக்களை திரையில் காட்டுவது மட்டுமல்ல தமிழின்தேவை. கட்டற்ற மென்பொருட்களாக பின்வரும் தமிழ் சார்ந்த மென்பொருட்கள் தேவை.


எழுத்து பிழைதிருத்தி, இலக்கணப் பிழை திருத்தி, எழுத்தை ஒளியாக மாற்றுதல் , ஒளியை எழுத்தாக மாற்றுதல்

பல்வேறு encoding-unicode-ஆக மாற்றுதல் , வேர்ச்சொல் காணல், பகுபத உறுப்பிலக்கணம் காணல்

இலக்கிய தேடுபொறி. இவற்றை பல்வேறு பல்கலைக்கழகங்களும் தனியார் அமைப்புகளும் பலகோடி செலவு செய்து செய்திருந்தாலும், அவை பொதுமக்களுக்கு கட்டற்ற மென்பொருளாக வெளிவராமல், கிடங்குகளில் உறங்குகின்றன. இவற்றை ஒவ்வொன்றாக கட்டற்ற முறையில் செய்து, புதுயுகத்தில் தமிழ் வளர்க்க கணியம்குழு முழு முயற்சியில் இறங்கியுள்ளது.

Corpus மற்றும் இலக்கிய தேடுபொறி இவற்றை செய்ய, ஆர்வமுள்ள பலர், எமது கோரிக்கையை ஏற்று,மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். அதன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.இந்தமாதம் பணிகள் துவங்க உள்ளன. இதில் ஆர்வம் உள்ளோர் editor@kaniyam.comக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

நன்றி.

 

ஸ்ரீனி ஆசிரியர், கணியம் editor@kaniyam.com

 

பொருளடக்கம்


 • எல்லோரும் இந்நாட்டு மன்னர் பாகம்  -2
 • எளிய செய்முறையில் C – பாகம் 4
 • லினக்சில் பூட் லோடார்கள் (Boot Loader) – (1)
 • PHP கற்கலாம் வாங்க பாகம் 3
 • aaphoto-வுடன் நிழற்படங்களை மாயமாய் மேம்படுத்துங்கள் 
 • பைதான் – 8
 • கட்டற்ற மென்பொருளும் – அறிவியலும் பகுதி – I
 • எச்.டி.எம்.எல் 5 பட விளக்கம்(4)
 • மின் உரிமை மேலாண்மை / எண்முறை உரிமைகள் முகாமைத்துவம் 
 • உபுண்டுவில் ஓபன் DNS அமைத்தல் 
 • வெர்சன் கன்ட்ரோல் சிஸ்டம் ஓர் அறிமுகம் 
 • ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் 
 • கணியம் வெளியீட்டு விவரம் 
 • கணியம் பற்றி
%d bloggers like this: