Ex-OR கதவு| நான் கொஞ்சம் வேற ரகம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 42

By | March 14, 2025

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், லாஜிக் கதவுகள் குறித்து பார்த்து வருகிறோம். லாஜிக் கதவுகளின் வகைகளில் இன்று நாம் கடைசியாக பார்க்க விருப்பது Ex-OR கதவு. லாஜிக் கதவுகளிலேயே பலரையும் குழப்பக்கூடிய, ஒரு வகையிலான கதவாக இந்த EX-OR கதவு இருக்கிறது.

IC7486 எனும் உள்ளார்ந்த மின்சுற்றே இந்த கதவிற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த கதவு ஒரே விதமான உள்ளீடுகளை அனுமதிப்பதில்லை. வெவ்வேறான உள்ளீடுகள் வழங்கப்படும் போது மட்டுமே வெளியீடை வழங்குகிறது.

கேட்பதற்கே சற்று வினோதமாக இருக்கலாம். அடிப்படையில் லாஜிக்கல் கூட்டல் செயல்பாடுக்கு(logical adders sum output)இந்த கதவு தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவின் குறியீடு கூட பார்ப்பதற்கு சற்றே வித்தியாசமாக இருக்கும். OR கதவைப்போல வரைந்து, அதற்கு பின்புறம் சற்றே வளைத்து விடும் வகையில் இதன் குறியீட்டு படம் அமைந்திருக்கிறது.

ஒரே விதமான உள்ளீடுகள்(00 ,11) வழங்கப்படும் போது இந்த கதவில் உங்களுக்கு வெளியீடு கிடைக்காது. அதுவே பூஜ்ஜியம்,ஒன்று(01,10) என வெவ்வேறான உள்ளீடுகள் கொடுக்கும்போது, உங்களுக்கு வெளியீடு கிடைக்கும். நான் குறிப்பிடுவது, இரண்டு உள்ளீடு கொண்ட கதவுக்கு(two input logic gate)மட்டுமே பொருந்தும்.

மூன்று உள்ளீடு கொண்ட கதவுகள்(three input logic gates)குறித்து நீங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தால், அதன் முடிவுகள் இதோடு ஒப்பிடும்போது சற்றே குழப்பும் விதமாக அமையலாம். அவை குறித்து, நாம் இதுவரை பார்க்கவில்லை எனவே அதோடு இதை குழப்பிக் கொள்ள வேண்டாம்.

இந்த கதவை வடிவமைப்பதற்கான டையோடு சுற்று கீழே வழங்கப்பட்டுள்ளது.

இந்த கதவை விளக்குவதற்காக switching மின்சுற்று கீழே வழங்கப்பட்டுள்ளது.

இந்த கதவுக்கான பூலியன் ஏற்கனவே அட்டவணை மற்றும் குறியீட்டு படம் கீழே வழங்கப்பட்டுள்ளது..

லாஜிக் கதவுகளின் அனைத்து வகைகளும் குறித்தும், அடுத்ததாக வெளிவரும்  ஆல்ரவுண்டர் லாஜிக் கதவுகள் எனும் கட்டுரையோடு இந்த குறுந்தொடர் முற்றுப்பெறும்.

மீண்டும் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் சந்திக்கலாம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com