eXp OS என சுருக்கமாக அழைக்கப்பெறும் செயல்முறையிலான இயக்க முறைமை (eXperimental Operating System) என்பது இணைய வாயிலான நேரடி கல்வி தளமாகும், இது ஒரு சிறிய பல்லடுக்கு நிரலாக்க இயக்க முறைமையாகும் . , இது ஒரு புதிய இளங்கலை கணினி அறிவியல் மாணவனை ஒரு சில மாதங்களில் புதிய இயக்கமுறைமை ஒன்றினை உருவாக்கி செயல்படுத்தி பயிற்சி பெறுவதற்கு அனுமதிக்கிறது,
அதாவது இது புதிய இளங்கலை மாணவர்களுக்கு ஒரு இயக்க முறைமைஎவ்வாறு செயல்படுகின்றது என நேரடியாக செயல்முறையின்வாயிலாக கற்றுக் கொள்ள உதவுகின்றது. இந்த தளத்தில் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு விரிவான செயல் திட்டமான road map ஆனது புதிதாக ஒரு சிறிய இயக்க முறைமையை எவ்வாறு உருவாக்குவது என மாணவர்களுக்கு படிப்படியான வழிகாட்டுதலை வழங்குகின்றது. இந்த செயல்திட்டத்தின் போது பல்வேறு இயக்கமுறைமைகளின்(OS) தரவு கட்டமைப்புகள் மேலும் அவற்றின் உருவாக்க மையத்தின்( kernel) நடைமுறைகளை செயல்படுத்துவதை மாணவர் கற்றுக்கொள்கிறார். தொடர்ந்து இதனை பயிலும் மாணவர் ஒருவர் தான் உருவாக்கிய இயக்கமுறைமையானது நேரடியாக இயங்குதளத்துடன் வழங்கப்பட்ட மெய்நிகர் கணினியில் எவ்வாறு இயங்குகின்றது என்பதை காணமுடியும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கணினி அமைப்பில் இயக்கமுறைமை எவ்வாறு செயல்படுகின்றது என தெரிந்துகொள்வதுடன் நிரலாக்கத்தையும் வசதியாக பயிலமுடியும்
நாம் உருவாக்கப் போகும் “இறுதி அமைப்பு (final system)” எவ்வாறு இருக்கும் என அறிந்து கொள்ள நாம் ஆர்வமாக இருந்தால், இது ஒரு சுருக்கமான முன்னோட்டத்தை தருகின்றது. ஆயினும் இந்த செயலின்போது இணைய இணைப்புகளை மட்டும் துண்டித்திடாமல் பார்த்து கொள்க என்று எச்சரிக்கப்படுகின்றது. இதில் முதன்மைபகுதியானஆவணத்தின் பொருத்தமான பகுதிகளை எப்போது வேண்டுமானாலும் படித்து அதன்படி பின்பற்றி செயல்படுக. .இதனுடைய விவரக்குறிப்பு மிகவும் எளிமையான பல-பயனர் பல-பணி இயக்க முறைமையை விவரிக்கின்றது. நடைமுறையில் வழக்கமான ஒரு இயக்க முறைமையை போன்று இதனை நாம் பயன்படுத்த தேவையில்லை. அதற்கு பதிலாக புதியதாக உருவாக்கிடும் ஒரு இயக்கமுறைமையை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்துகொண்டபின்னர் நாமே சுயமாக புதியதொரு இயக்கமுறைமையை உருவாக்கிடும் திறனை இது நமக்கு வழங்குகின்றது மேலும் இது பின்வரும் நோக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது:
1. இளங்கலை கணினி அறிவியலை பயிலும் புதிய மாணவர் ஒருவரால் இயக்க முறைமையில் பாடநெறிக்கு உட்படுத்தப்படக்கூடிய பல்வோறு பணிகளின் இயக்கமுறைமை விவரக்குறிப்பைக் கொண்டிருக்க வேண்டும், அதாவது இதனை பயிலுபவர் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் எந்தவொரு இயக்கமுறைமையையும் தானே சுயமாக உருவாக்கி செயல்படுத்த முடியும். இந்த கல்வி தொகுப்பு போதுமான வழிகாட்டுதல் ,ஆதரவு கருவிகள் , சிறப்பு ஆசிரியரின் மேற்பார்வை போன்றவை எதுவும் இல்லாமலேயே மாணவர்கள் அந்த இலக்கை அடைய அனுமதிக்கின்ற து.
2. மாணவர் கொடுக்கப்பட்ட குறிமுறைவரிகளை கொண்டு புதியOS இன் மேல்பகுதியை மட்டும் உருவாக்க மாட்டார் அதற்கு பதிலாக இதன் துனையுடன் இயக்கமுறைமைக்கு தேவையான துவக்கம் முதல் முடிவு வரையிலான ஒரு முழுமையான குறிமுறைவரிகளை மாணவர் ஒருவரால் எழுதமுடியும். . இதில் வழங்கப்பட்ட ஒரே நிரலாக்க ஆதரவானது ஒரு இயக்க முறைமையின் உருவாக்கமையத்தை உருவாக்குவதற்கு நிரலாக்க மொழிக்கான ஒரு தொகுப்பாக விளங்குகின்றது.
நாம் கணினி அறிவியலில்ஒரு நிபுணர் அல்லாதவராக இருந்தாலும் நமக்கு நிரலாக்க , கணினி அமைப்பு ஆகியவை குறித்த அடிப்படை புரிதல் இருந்தால், இதனை செயல்படுத்துவதற்கும் ஒருசில முக்கிய வசதிகளைப் பெறவும் இது நமக்கு உதவுகின்றது மேலும் இதில்:
துவக்கப்பட்டை.- இயக்க முறைமையை இரண்டாம் நிலை சேமிப்பகத்திலிருந்து நினைவகத்திற்கு பதிவேற்றுதல்
செயல்முறை மேலாண்மை- ஒரே நேரத்தில் நினைவகத்தில் பல செயலாக்கங்களை நிருவகித்தல் .
நினைவக மேலாண்மை- செயல்முறைகளுக்கு நினைவக ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீட்டைக் கையாளுதல்
கோப்பு மேலாண்மை- இரண்டாம் நிலை சேமிப்பகத்தில் தரவு மற்றும் நிரல் கோப்புகளின் அமைப்பை நிர்வகித்தல்
வள பகிர்வு- கோப்புகளை / நினைவகத்தைப் பகிர பல செயல்முறைகளை அனுமதிக்க ஒரு பொறிமுறையை செயல்படுத்துதல் .
செயல்முறை ஒத்திசைவு- ஒரே நேரத்தில் செயல்படும் பல செயல்முறைகளால் வளங்கள் பகிர்ந்து கொள்ளும்போது முரண்பாட்டைத் தவிர்த்தல் .
பல பயனர் திறன் – பல பயனர்களிடையே பகிரப்பட்ட வளங்களை விட வெவ்வேறு சலுகைகளுடன் கையாளுதல் .
ஆகிய பல்வேறு பணிகளை ஒரேயொரு ஒற்றை செயலியில்இந்த இயக்க முறைமையை செயல்படுத்து வதையும். எவ்வாறு செயற்படுத்துவது என்பதையும் நாம் கற்றுக் கொள்ளமுடியும்
மூன்றாம் ஆண்டு விண்வெளி பொறியியல் பயிலும் மாணவர்கள் ஆண்டின் துவக்கத்தின் இரண்டு மாதங்களில் ஒரு சிறிய ஆளில்லா விமானத்தை உருவாக்க வழிகாட்டுவதைபோன்றே இந்த சோதனையும் இருக்கின்றது. (இந்த விமானம் ஆய்வகத்திற்கு வெளியே பயன்படுத்தப் படமாட்டாது!)
நாம் மேற்கொண்டு செல்வதற்கு முன், இந்த இயக்கமுறைமையானது XSM எனும் கட்டமைப்பு எனப்படும் உருவகப்படுத்தப்பட்ட வன்பொருளின் மேல் மட்டுமே செயல்படுகின்றது உண்மையான வன்பொருளில் நிறுவ முடியாது என்பதை நினைவில் கொள்க. இதேபோன்று, உயர்-நிலை நிரலாக்க மொழி EXPL, அமைவு நிரலாக்க மொழி(SPL) , XSM எனும் இயந்திர மொழி ஆகியவை இந்த eXp OS, XSM கட்டமைப்பு ஆகியவற்றில் மட்டுமே இயங்குகின்றன, மேலும் அவை நடைமுறையில் பயன்படுத்தி கொள்ளப்படும் எந்தவொரு உண்மையான இயக்க முறைமை அல்லது உண்மையான வன்பொருளிலும் பயன்படுத்தப்படாது. XSM இயந்திரத்தின் இந்த கட்டமைப்பு-நடுநிலை செயல்பாடானது சாதாரண பார்வையாளர்களுக்கு ஒரு பலவீனமாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில், eXp OS ஆனது இந்த எளிமைப்படுத்தப்பட்ட XSM கட்டமைப்பிலிருந்து அதன் பலத்தை கொண்டுள்ளது. இந்த எளிமைப்படுத்தப்பட்ட XSM இயந்திரத்தின் காரணமாக, எந்தவொரு இலகுரக இயக்க முறைமையின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது eXp OS இன் வளர்ச்சி ஒப்பீட்டளவில் எளிதானது. ஆனால் பிரபலமான Hack கணினியுடன் eXp OS ஐ ஒப்பிடலாம். ஒரு Hack கணினியை உருவாக்க, நாம் உருவகப்படுத்தப்பட்ட NAND வாயில்களுடன் துவங்கி படிப்படியாக முன்னேற வேண்டும், அதேசமயம் eXp OS ஒரு உருவகப்படுத்தப்பட்ட XSM இயந்திரத்தில் இயங்குகின்றது, இது ‘Nand முதல் Tetris வரை’யிலான செயல்திட்ட கணினி அறிவியலை முழுவதையும் உள்ளடக்கியது, அதேசமயம் eXp OS கணினி அறிவியல் – இயக்க முறைமைகளின் ஒரு முக்கிய துறையை மட்டுமே கற்பிக்கிறது. எனவே, இரண்டு செயல்திட்டங்களும் ஒரே தத்துவத்தைப் பகிர்ந்து கொண்டாலும், அவை எந்த வகையி்லும் தொடர்புடையவை அல்ல, மேலும் இயக்க முறைமைக் கருத்துக்களை மட்டும் கற்பிப்பதில் eXpOS இன் முக்கியத்துவம் முற்றிலும் பொருத்தமானது.
Exp OS குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு exposnitc.github.io/ என்ற இணையதளமுகவரிக்கு செல்க