கற்கும் கருவியியல் (Machine Learning) அறிமுகம் – Explore ML– இலவச இணைய வழி குறுந்தொடர் வகுப்பு

வணக்கம்,

கணியம் அறக்கட்டளை சார்பாக, தமிழில், இணைய வழியில் கற்கும் கருவியியல் (Machine Learning) அறிமுகம் குறுத்தொடர் வகுப்பு நடத்த உள்ளோம்.

கால அளவு – 3 நாட்கள் ( தேவையெனில் இன்னும் ஓரிரு நாட்கள் கூடுதலாக )

செப் 11, 12, 13 – 2024

நேரம் – இரவு 8.30 – 9.30 இந்திய நேரம் (IST) ( புதன், வியாழன், வெள்ளி )
காலை 11.00 – 12.00 கிழக்கு நேர வலயம் (EST) ( புதன், வியாழன், வெள்ளி )

மொத்தம் 3-5 மணி நேரங்கள்

பயிற்றுநர் –

முனைவர் ப. தமிழ் அரசன் / Dr. B. Tamil Arasan

www.linkedin.com/in/tamil-arasan-ph-d-644a3763

scholar.google.com/citations?user=Szi3WqkAAAAJ&hl=en

இவ்வகுப்புகளில் கற்கும் கருவியியல் (Machine Learning) அறிமுகம், Linear Regression மூலம் ஒரு Model உருவாக்குவதை கற்கப் போகிறோம்.

கற்கும் கருவியியல் எனும் கடலின் கரையில், சற்றே கால் நனைத்து, பின் சிறிது தூரம் ஒரு படகு ஓட்டப் போகிறோம்.

Explore ML: Get to know the general types of machine learning. Learn
how arrays serve as the building blocks for data representation and
manipulation in machine learning.

Build Your First Model: See how to
create a working ML model step-by-step.

Hands-on Linear Regression:
Solve a problem using linear regression in real-time.

பின்வரும் இலவச மின்னூலில் இவற்றை விரிவாக விளக்கியுள்ளோம்.


freetamilebooks.com/ebooks/learn_machine_learning_in_tamil

வகுப்புக்கு சில நிபந்தனைகள் உள்ளன.

– நல்ல இணைய வசதி இருக்க வேண்டும்.
– கணினி
– பைத்தான் மொழியில் பயிற்சி இருப்பது மிக அவசியம்.
– கற்றவற்றை தினமும் செய்து பார்த்து பழக வேண்டும். அவற்றை தினமும் ஒரு
வலைப்பதிவாக எழுதி வெளியிட வேண்டும். வகுப்புக்கு ஒரு மணி நேரம். அவற்றை செய்து பார்த்து, வலைப்பதிவு எழுத இரண்டு மணி நேரம் தினமும் தேவைப்படும்.

தொடர்புக்கு – KaniyamFoundation@gmail.com

t.me/tamillinux இந்த டெலிகிராம் குழுவில் இணைந்து உரையாடலாம்.

வகுப்புக்கான இணைப்புகள் இந்த குழுவில் புதன் அன்று பகிர்வோம்.

%d bloggers like this: