பெடோரா 17 – ஒரு அறிமுகம்

 

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளது. பெடோரா 17க்கு “beefy miracle” என்ற சர்ச்சைக்குரிய அடைமொழியும் உண்டு. புதிய பெடோராவில் /lib,/lib64,/bin,/sbin பொதிகள்(folders) நீக்கப்பட்டு அவை /usr பொதியுடன் இணைக்கப் பட்டுள்ளன. பழைய பெடோரா பதிப்புகளுடன் ஒத்து இயங்க (backward compatibility) இந்த பொதிகள் symlink ஆக தரப்பட்டுள்ளன ( ls -l / ) . இந்த காரணத்தினால் பழைய பதிப்பை yum upgrade மூலம் புதிப்பிக்க விரும்புபவர்கள் சில கூடுதல் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

fedoraproject.org/wiki/Upgrading_Fedora_using_yum#Fedora_16_-.3E_Fedora_17 . இந்த பொதிகள் மாற்றம் “usrmove feature” என்று அழைக்கப்படுகிறது, இதைப்பற்றி மேலும் அறிய இந்த சுட்டியைப் பாருங்கள் www.freedesktop.org/wiki/Software/systemd/TheCaseForTheUsrMerge

 

3D இயக்கி(driver) இல்லாமல் – Gnome shell

 

பொடோரா 17 ஜீனோம் 3.4.1 உடன் வருகிறது. கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஜீனோம் 3.4 பல புதிய திருத்தங்களை உள்ளடக்கியுள்ளது. புதிய ஜீனோம் 3D வசதி இல்லாத கணிணிகளில் மீசா 3D llvmpipe எனப்படும் இயங்கி (driver) மூலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இயங்க வல்லது. ஜீனோம் எக்ஸ்டென்சன் (GNOME extensions) எனப்படும் கூடுதல் மென்பொருள் தொகுப்பு இந்த வெளியீடு மூலம் மேலும் பண்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் கணிணியில் ஜீனோம் எக்ஸ்டென்ஸை நிறுவ extensions.gnome.org/ என்ற சுட்டியை உலாவியில் பார்க்கவும்

கேடிஈ(KDE) 3.5.3 , எக்ஸ்எப்ஸீயீ(XFCE) 4.8 , லிபரி ஆபீஸ்(libreoffice) 3.5.2.1 , கிம்ப்(GIMP) 2.8 – என பல முக்கிய புதிய மென்பொருட்களை உள்ளடக்கியது இந்த புதிய வெளியீடு.

Virtualization மற்றும் cloud:

கேவியம்(KVM) மற்றும் எல்எக்ஸ்சி கண்டைனர்(LXC containers) உதவியுடன் லிப்விர்ட் சேண்ட்பாக்ஸ் (libvirt sandbox) எனப்படும் தொழில்நுட்பம் பெடோராவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மென்பொருளை தனித்த கட்டுபடுத்தப்பட்ட தளத்தில் இயக்கும் திறனை பெடோரா தருகிறது. இதைத் தவிர, ஓப்பன் விசுவிட்சு (openvswitch) , ஓப்பன் ஸ்டாக் (openstack essex) போன்ற மென்பொருட்களும் பெடோராவில் சேர்க்கப்பட்டுள்ளன.

தட்டுகள் (Drives)

பெடோரா தற்பொழுது நீக்கக்கூடிய சேமிப்புக் கருவிகளை (removable drives) /run/media/$USER என்ற பொதியில் நிறுவுமாறு (mount) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பெடோராவின் பழைய பதிப்புகளில் இந்த நீக்கக்கூடிய சேமிப்பு கருவிகளை /media பொதியில் நிறுவுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. BTRFS எனப்படும் filesystem நிறுவி (installer) தொகுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பெடோரா 18ல் btrfs மீண்டும் சேர்க்கப்படும் என்று தெரிகிறது

பெடோரா லினக்ஸ் கெர்னல் 3.3.4 ஐ உள்ளடக்கியது. இந்த புதிய கெர்னல் இண்டலின் சாண்டி பிரிட்ஜ் (sandy bridge) பிராசசர்களில் மின்கலன் மின்சாரத்தை சேமிக்கும் திறமை கொண்டது. சில கெர்னல் மாடூல்கள் பிரிக்கப்பட்டு “kernel-modules-extra” என்ற பெயரில் புதிய பேக்கஜ் ஆக வெளியிடப்பட்டுள்ளது.

மல்டி சீட்(multi seat)

சிஸ்டம்டீ (systemd) எனப்படும் இனிட் சிஸ்டம் (init system) பெடோரா 15ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இனிட் சிஸ்டம் , தற்பொழுது “systemd-logind” என்ற லாகின் மேலாளரை (login manager) பெற்றுள்ளது. இது மல்டி சீட் எனப்படும் வசதியை பெடோராவிர்குள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ஒரு பயனர் “docking station” ஐ பெடோரா தளம் நிறுவப்பட்டுள்ள கணிணியுடன் இணைத்தவுடன் , சிஸ்டம்டீ புதிய திரையில் லாகின் திறையை (login screen) செலுத்திவிடும். இதன் மூலம் பல பயனர்கள் , பல திரைகளில் பெடோராவை தங்கு

தடையில்லாமல் இயக்க முடியும். (docking station: plugable.com/products/UD-160-A/ )

 

 

இதைத் தவிர

1. GPT தற்பொழுது 2TB க்கு அதிகமாக வந்தட்டு உள்ள கணிணிகளில் மட்டும் நிறுவப்படும் (சில கணிணிகளில் இந்த GPT பார்சியன் மேசை(partition table) சிக்கல்களை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.)

2. GCC கம்பைலர் (compiler) 4.6 ல் இருந்து 4.7க்கு புதுப்பிக்கப் பட்டுள்ளது. பெடோராவின் அனைத்து மென்பொருட்களும் 4.7 கம்பைலரில் மறுகட்டமைப்பு (recompile) செய்யப் பட்டுள்ளது.

3. பெடோராவை தற்பொழுது இண்டல் ஆப்பிள் (interl -mac’s ) கம்ப்யூட்டர்களில் நேரடியாக இயக்க முடியும்

4. பாண்ட் டிவிக் டீல், (font-tweak tool) ஜீனோம் பாக்ஸஸ் (gnome-boxes) போன்ற புதிய மென்பொருட்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

முடிவு

பெடோரா தளம் பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது. ஜீனோம் 3.4 பயனர்களின் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பெடோரா லினக்ஸ் பல புதிய தொழில்நுட்பங்களை தத்தெடுப்பதில் முன்னோடி என்னும் கூற்றுக்கு பெடோரா 17 ஒரு சான்று.

 

பெடோரா, ஆர்வலர்களால் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் பயனர்களுக்கான மடல் குழுமத்தில் சேர்ந்து நீங்களும் தமிழ் மொழிபெயர்ப்பில் பங்கேற்கலாம்

 

lists.fedoraproject.org/mailman/listinfo/tamil-users

 

fedora.transifex.net/projects/p/fedora/language/ta/

 

மேலும் இந்த பெடோரா வெளியீட்டை பற்றி அறிய, கீழ்கண்ட சுட்டிகளை பார்க்கவும்,

Gnome 3.4 வெளியீட்டு குறிப்புகள்: library.gnome.org/misc/release-notes/3.4/

சாமானிய மேசை கணிணீ பயனர்களுக்கான குறிப்புகள் docs.fedoraproject.org/en-US/Fedora/17/html/Release_Notes/sect-Release_Notes-Changes_for_Desktop.html

கணிணி மேலாளர்களுக்கான குறிப்புகள்

docs.fedoraproject.org/en-US/Fedora/17/html/Release_Notes/sect-Release_Notes-Changes_for_Sysadmin.html

F17 Feature List: fedoraproject.org/wiki/Releases/17/FeatureList

F18 Planned Feature List: fedoraproject.org/wiki/Releases/18/FeatureList

Official release commentary (DVD extras style): www.youtube.com/watch?v=dmWdYJTsKb

அருண் S.A.G

வலை : zer0c00l.in

மின்னஞ்சல் : sagarun@gmail.com

%d bloggers like this: