FlightGear எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு மெய்நிகர் விமாண ஓட்டியாக பயிற்சிபெறமுடியும்

  முற்காலத்தில் அதாவது நம்முடையசமுதாயத்தை அரசர்கள் ஆண்டுவந்த காலகட்டத்தில் யானை ஏற்றம் 
குதிரை ஏற்றம் பின் அரசர்களின் தேர்ஓட்டுதல் ஆகியபணிகள் வீரதீரமிக்கத்தாக அனைவராலும் 
வியப்புடன் பார்க்கப்பட்டது அதன்பிறகு தற்போது இருசக்கரவாகணம் நான்கு சக்கர வாகண ஓட்டுவது 
என்பது மிகச்சர்வசாதாரணமாக கடந்த 20  ஆம் நூற்றாண்டில்  ஆகிவிட்டது தற்போது அதனை 
தாண்டி விமாணஓட்டிகளாக   வலம்வருவது எனும் தற்போதைய நவீணகால சூழ்நிலைக்கு 
முன்னேறிவிட்டோம்  இருந்தாலும் நம்முடைய வாழ்நாளில் ஒருநாளாவது சுயமாக விமாணத்தை 
ஓட்டமுடியுமா என்ற  கனவு நம்மில் பெரும்பாலானவர்களின் அடிமனதில் தற்போது இருந்துகொண்டே 
உ்ள்ளது இவ்வாறானவர்களுக்கு கைகொடுக்கவருவதுதான்    FlightGear எனும் கட்டற்ற பயன்பாடு 
இதனை கொண்டு மெய்நிகரான விமானத்தினை நாமே ஓட்டி பழகி நம்முடைய கனவினை மெய்ப்பிக்கலாம்
 வாருங்கள்

வணிக விமான ஓட்டும்உருவகபடுத்துதல் பயன்பாடுகளுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1996
ஆம் ஆண்டில் FlightGear எனும்செயல் திட்டம் தொடங்கப்பட்டது, அதுதிறனற்றது அன்று.,விமானஓட்டிக்கான
பயிற்சி
யை
, அல்லது ஒரு விமானஓடுகின்ற உருவகபடுத்துதல்
காட்சிய
ை பயன்படுத்தி கொள்ள விரும்பும் எவருக்கும் ஒரு சிக்கலான
, வலுவான, நீட்டிக்கக்கூடிய
மற்றும்
கட்டற்ற உருவகபடுத்துதல் கட்டமைப்பை உருவாக்குவதே இதன் அடிப்படை நோக்கமாகும்

இதனை பயன்படுத்தி கொள்வதற்கு   Fedora ,Ubuntu ஆகியவற்றில் ஏதேனுமொரு லினக்ஸ் 
இயக்கமுறைமையுள்ள  i5 செயலி யுடனும் 4GB  ரேமும் உடைய கணினிஅதனோடு OpenGLஅனுமதி
யில் வெளியிடப்ட்ட  துரிதப்படுத்தப்பட்ட 3D வீடியோ அட்டை உள்ளிட்ட,  மிகவும் எளிமையான 
வன்பொருட்களே  இந்த FlightGear இன்  தேவைகளாகும்  இந்த கட்டமைவுகளுடனான கணினியை 
கொண்டு இப்போது நாம் ஒரு மெய்நிகரான விமானம் ஓட்டிடும் பயிற்சியை துவங்கிடுவோமா முதலில் 
 $ sudo add-apt-repository ppa:saiarcot895/flightgear 
 $ sudo apt-get updates 
$ sudo apt-get install flightgear

ஆகிய கட்டளை வரிகளுடன் இந்த பயன்பாட்டினை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து
கொள்க
தொடர்ந்து இதனை வரைகலை இடைமுகப்பு முனைமமாக செயல்படுவதற்காக

$ fgfs

எனும் கட்டளை வரியை செயல்படுத்திடுக

 

தொடர்ந்து படத்தில் உள்ளவாறு தோன்றிடும் திரையின் இடதுபுறபகுதியில் உள்ளவைகள் கட்டமைவு 
செய்திட உதவும்  செயலிகளாகும் அவற்றுள் Summary  என்பது எந்தவொருபணியையும் செய்து 
முடிந்தபின்னர  துவக்கநிலை திரைக்கு வந்தசேரஉதவிடுகின்றது  Aicarrftsஎன்பது நாம்  Piper J-3 Cub,  
 Bombardier CRJ-700,ஆகியவற்றுள் என்னவகையான விமாணத்தில் பறப்பதற்கான பயிற்சிக்காக 
நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துள்ளோம் என காண்பிக்கும் ஆயினும் இந்த பயன்பாட்டில் இயல்பு
நிலையில் Cessna 150L எனும் விமாணம் மட்டுமே பயனாளர்களின் பயிற்சிக்காக நிறுவுகை 
செய்யப்பட்டிருக்கும் Environment என்பது நாம் பறக்கவிரும்பும் கால சூழலையும் தட்பவெப்ப நிலையையும் மாற்றியமைத்திட உதவுகின்றது மேலும் உருவகப்படுத்துதலுடன் மேம்பட்ட வானிலை மாதிரிகள, தற்போதைய வானிலை ஆகியவற்றை NOAA இலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும்  திறன் கொண்டதாகும் . Settings என்பது இயல்புநிலையில் இடைநிறுத்தப்பட்ட முறையில் 
உருவகப்படுத்துதலைத் தொடங்குவதற்கான, விருப்பங்களை வழங்குகிறது. மேலும் நாம் இதனை
 பல பயனாளர்களுடன் இணைந்து கூட்டாக பயன் படுத்திகொள்ளமுடியும், இது பல 
பயனாளர்களை அனுமதிக்கும் சேவையகங்களின் விமான சேவையின் உலக வலைபின்னலில் உள்ள
 மற்ற பயனாளர்களுடன் இணைந்து "பறக்க" அனுமதிக்கிறது. ஆயினும் இந்த 
செயல்திறனை   ஆதரிக்க நம்மிடம்  ஒரு  அதிவேகமான இணைய இணைப்பு இருக்க வேண்டும் 
Add-ons என்பது மேலும் கூடுதலான வித்தியாசமான சூழ்நிலைகளை காட்சிகளை இணைத்து பயிற்சி பெற
உதவுகின்றது இறுதியாக உள்ள fly என்பது இவையனைத்தும் சரியாக இருக்கின்றது எனில் நம்முடைய 
விமானத்தை மெய்நிகராக பறக்கும் பயிற்சியை செயல்படுத்திடுகின்றது திரையின் மேலே 
File என்பது நம்முடைய விமானத்தில் பறக்கும் பயிற்சியை ஒரு கோப்பாக சேமித்துகொண்டு மீண்டும் 
மேலேகூறியவாறு துவக்கத்திலிருந்து ஒவ்வொன்றாக கட்டமைவுசெய்துகொண்டிருக்காமல் பறப்பதற்கான 
பயிற்சியை அடுத்தமுறை விரிவாக  பயன்படுத்தி கொள்ளஉதவுகின்றது
 
%d bloggers like this: