1. ஆங்கிலம் தெரியவில்லை, அதனால் என்னுடைய முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது.
2. சிறு வயதில் எனக்கு இங்கிலீஷ் ஒழுங்காகச் சொல்லிக் கொடுக்கவில்லை, அதன் பாதிப்பை இன்று வரை நான் உணர்கிறேன்.
3. ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணமே தெரியாமல் இருப்பதால், இங்கிலீஷ் என்றாலே பயமாக இருக்கிறது.
4. ஆங்கிலம் தெரியாமல் இருப்பதால் நேர்காணல்(இன்டர்வியூ)களில் வெற்றி பெற முடியவில்லை.
இப்படி, ஆங்கிலம் தெரியாமல் அவதிப்படுபவரா நீங்கள்? உங்களுக்கான ஆங்கில அடிப்படை இலக்கண வகுப்புகளைப் பயிலகம் திட்டமிடுகிறது. இவ்வகுப்புகள் இணையம் வழியே இரண்டு வாரங்கள் தமிழில் நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணிநேரம் வரை இவ்வகுப்பு இருக்கும். இவ்வகுப்பில் ஆங்கில இலக்கணம் அடிப்படையில் இருந்து கற்றுக்கொடுக்கப்படும்.
நோய்த் தொற்றும் அதன் காரணமாகத் தொடர் ஊரடங்கும் பலரது அடிப்படை வாழ்வாதாரத்தை அசைத்திருக்கும் சூழலில், அறத்தின் அடிப்படையில் இவ்வகுப்புகளை இலவசமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.
விருப்பமுள்ள நண்பர்கள் கீழ் உள்ள கூகுள் படிவத்தில் தங்கள் தொடர்பு விவரங்களைக் கொடுக்கலாம். தேவையுள்ள உங்கள் நண்பர்களுக்கும் இவ்வகுப்பு பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துங்கள்.
பயிற்சி தொடங்கும் நாள் : 19.08.2020 பிற்பகல் 2 மணி இந்திய நேரம்.
பயிற்றுநர் : கி. முத்துராமலிங்கம்
முன்பதிவுக்கு: forms.gle/qPxvc3H1aE8vVc286
பதிந்தவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி / அலைபேசிச் செய்தி வழி, வகுப்பு பற்றிப் பின்னர் தெரிவிக்கப்படும்.
பயிலகம் பற்றித் தெரிந்து கொள்ள: payilagam.com