GIMP-ல் இடம்பெறும் 284 எஃபெக்ட்ஸ் மற்றும் இமேஜ் ஃபில்டர் [ Effects & Filters ]

 

G’MIC ஆனது GIMP உடன் வரும் நீட்சி(Plugin) ஆகும். தற்போதுள்ள G’MIC 1.5.0.8 ஆனது இமேஜ் ஃபில்டர், 284-ம் மேற்பட்ட உருமாற்றங்களைக் கொண்டது. மேலும் 1/2/3 பரிமாண படங்களை வேறு வகையாய் மாற்ற, திறமையாக கையாள, வடிகட்ட, பல்நிறமாலையாய் காண (Multi Spectral Visualizing) 15 வகைகளை கொண்டது.

எப்படி நிறுவுவது:

sourceforge.net/projects/gmic/files/ என்ற இணைப்பில் G’MIC 1.5.0.8.deb தொகுப்பை பதிவிறக்கலாம்.

 

wget -O gmic-1.5.0.8.deb sourceforge.net/projects/gmic/files/gmic_1.5.0.8_i386.deb/download

sudo dpkg -i gmic-1.5.0.8.deb

 

இதனை PPA அல்லது Personal Package Archive (மென்பொருள் நிறுவ பயன்படும் மென்பொருள் பெட்டகம்) மூலமாகவும் நிறுவலாம் அதற்கு,

 

ppa:ferramroberto/gimp

 

 

என்பதை உபுண்டுவில் சேர்க்கவும்.

 

sudo add-apt-repository ppa:ferramroberto/gimp

sudo apt-get update

sudo apt-get install gmic gimp-gmic

 

பயன்படுத்தும் முறை:

நிறுவிய பின் ஏதேனும் ஒரு படத்தை GIMP-ல் நிறுவவும். பின்பு

Filter >> G’MIC-ஐ தேர்ந்தெடுத்தால் dialog box ஒன்று திறக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான effects தேர்ந்தெடுத்து பயனாக்கம் செய்யலாம். ஒவ்வொரு உருமாற்றமும் மாறுதல் செய்யப்படக் கூடியது, அந்த மாற்றங்களை G’MIC சாளரத்தில் நேரடியாக காணலாம்.

 

 

நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

வலை பதிவு : jophinepranjal.blogspot.in/

மின்னஞ்சல் : jophinep@gmail.com

 

 

%d bloggers like this: