எளிய தமிழில் GNU/Linux – பாகம்-2

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.

எளிய தமிழில் MySQL“, “எளிய தமிழில் GNU/Linux – பாகம்-1”  ஆகிய மின்புத்தகங்களுக்கு நீங்கள் அளித்த பெரும் வரவேற்பே இந்த நூலுக்கு வித்திட்டது.

உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

kaniyam.com/gnu-linux-book-in-tamil-part2 என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம்.
உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம். (முதல் புத்தகம் www.kaniyam.com/gnu-linux-book-in-tamil-part1/)

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால்,  மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும்.
இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

செப்டம்பர் 30, 2013 அன்று சென்னையில் தமிழ் விக்கிபீடியாவின் பத்தாண்டுகள் கொண்டாட்ட நிகழ்ச்சியில், இந்த நூல் வெளியிடப்பட்டது.

முதல் பிரதியை வெளியிட்டவர் : திரு. சி.இரா.செல்வகுமார் அவர்கள், பேராசிரியர், வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா
பெறுபவர் : திரு.சுந்தர் அவர்கள், 2004-ஆம் ஆண்டு முதல் ஆங்கிலம், தமிழ் விக்கிப்பீடியாக்களில் பங்களித்து வரும் தகவல்பெறுநுட்ப வல்லுனர்.

தமிழில் நுட்பங்களை எழுதி, கிரியேட்டிவ் காமன்ஸ் எனும் கட்டற்ற உரிமத்தில் வெளியிடுவதை பாராட்டி, செல்வா-குமரி அறக்கட்டளையின் பரிசாக, திரு. சி.இரா.செல்வகுமார் அவர்கள் 100 டாலர் (6500 ரூ) அளித்தார். இவர் ஏற்கெனவே, “எளிய தமிழில் MySQL” நூலுக்காக 5000 ரூ நன்கொடை அளித்துள்ளார்.

திரு.சி.இரா.செல்வகுமார் அவர்களுக்கு எமது நன்றிகள்.

கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

ஆசிரியர்
ஸ்ரீனி
கணியம்
editor@kaniyam.com

[wpfilebase tag=file id=37/]

%d bloggers like this: