எளிய GNU/Linux commands

இந்தப் பாகத்தில் நாம் ஒருசில எளிய GNU/Linux commands-ஐப் பற்றியும், அதன் பயன்பாட்டினைப் பற்றியும் காணலாம்.

  • ஒரு சில commands, arguments-ஐ எடுத்துக்கொள்கின்றன. உதாரணத்துக்கு man, echo போன்றவை arguments-ஐ கொடுத்தால் மட்டுமே செயல்படக் கூடியவை.
  • ஒரு சில commands-க்கு arguments தேவையில்லை. date, who, ifconfig போன்றவை arguments இல்லாமலேயே செயல்படுகின்றன.
  • Arguments என்பது ஒரு command-ன் செயல்பாட்டிற்காக நாம் வழங்கும் மதிப்புகள் ஆகும். இதனை parameters என்றும் கூறலாம்.

மேலும் GNU/Linux commands அனைத்தும் case sensitive ஆனவை. பொதுவாக அவை lower case-ல் அமையும். upper case-ல் கொடுத்துப்பார்த்தீர்களானால் அவை எதுவும் செயல்படாது.

 

date

இது தற்போதைய தேதி மற்றும் நேரத்தினை வெளிப்படுத்துகிறது.

 

$ date

 

who

இது தற்போது நமது system-ல் யாரெல்லாம் login செய்துள்ளார்கள் எனும் விவரங்களை அளிக்கிறது.

$ who

 

whoami

இது நாம் எந்த user-ஆக login செய்துள்ளோம் எனும் விவரத்தை அளிக்கிறது.

 

$ whoami

 

 

who am i

இந்த command-ஐ நாம் இவ்வாறு இடைவெளி விட்டு அளிக்கும் போது இது இன்னும் கொஞ்சம் விவரங்களையும் சேர்த்து அளிப்பதைக் காணலாம்.

 

$ who am i

 

 

ifconfig

இது நமது system-ன் network configurations-ஐப் பற்றித் தெரிந்து கொள்ளப் பயன்படுகிறது. உதாரணத்துக்கு ip address, mac address, broadcast address மற்றும் netmask address போன்ற விவரங்களை வெளிப்படுத்துகிறது.

 

$ ifconfig

 

uname

இது நமது கணினியில் உள்ள OS-ன் பெயரை வெளிப்படுத்துகிறது.

 

$ uname

 


$ uname -a

 

 

இவ்வாறு ‘-a’ எனும் option-வுடன் சேர்த்து command-ஐ அளிக்கும்போது, நமது OS-ஐப் பற்றிய கூடுதல் விவரங்களையும் சேர்த்து அளிக்கிறது.

 

man

man என்பது manual என்பதன் சுருக்கமே ஆகும். உதாரணத்துக்கு uname எனும் command-ன் பயன்பாடுபற்றி நமக்கு சரியாகத் தெரியவில்லையெனில், man எனும் command-ன் துணைகொண்டு அதன் manual-ஐப் படித்து நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.

 

$ man uname

 

 

 

 

பின்னர் ‘q’ எனும் எழுத்தானது இந்த manual-ஐ quit செய்து அதிலிருந்து வெளியேறப் பயன்படுகிறது.

 

echo

நாம் திரையில் வெளிப்படுத்த விரும்புவதை இந்த echo command வெளிப்படுத்தும். உதாரணத்துக்கு “I Love India” என்று நாம் திரையில் வெளிப்படுத்த விரும்பினால் இந்த வாசகத்தை echo-ன் argument-ஆக கொடுக்க வேண்டும். இது பின்வருமாறு.

 

$ echo “I Love India”

 

வெறும் ஒரே ஒரு வார்த்தையை நாம் வெளிப்படுத்த விரும்பினால் double quotes (” “) கொடுக்கத் தேவையில்லை. இது பின்வருமாறு.

 

$ echo Nithya

 

 

exit

இது shell prompt-ல் இருந்து வெளியேறப் பயன்படும். ctrl+d -ம் இதே வேலையைச் செய்கிறது.

 

 

Directory commands-ன் செயல்பாடுகள்

pwd

தற்போது நாம் எந்த directory-ல் வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும். இதற்கு எந்தஒரு option-ம் கிடையாது. பொதுவாக login செய்தவுடன், நாம் நமது home directory-ல் விடப்படுவோம்.

 

இங்கு நாம் login செய்தவுடன், pwd எனும் command-ஐ கொடுத்திருப்பதால், இது நமது home directory-ஆன /home/nithya என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

 

 

ls

இது, நாம் தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் directory-ல் உள்ள அனைத்து files மற்றும் folders-ஐயும் பட்டியலிடும்.

 

 

mkdir

ஒரு புதிய directory-ஐ உருவாக்கப் பயன்படுகிறது.

 

$ mkdir school

 

என்று கொடுக்கும் போது, “school” எனும் பெயரில் ஒரு புதிய directory உருவாக்கப்பட்டுவிடும். இதனை ls மூலம் நாம் உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

 

 

இங்கு மற்ற directory-களுடன் சேர்த்து, நாம் புதிதாக உருவாக்கிய ‘school’ எனும் directory-ம் பட்டியலிடப்பட்டுவதை கவனிக்கவும்.

 

cd

ஒரு directory-ல் இருந்து மற்றொரு directory-க்கு இடம்பெயர உதவுகிறது.

 

$ cd school

 

என்று கொடுக்கும்போது நாம் ‘school’ எனும் directory-க்குள் கொண்டு செல்லப்படுவோம். பின்னர்,

 

$ pwd

 

என்று கொடுப்பதன் மூலம் நாம் school எனும் directory-க்குள் உள்ளதை உறுதி செய்து கொள்ளலாம்.

 

 

இங்கு நாம் /home/nithya எனும் directory-ல் இருந்து /home/nithya/school எனும் directory-க்கு மாற்றப்படுள்ளதைக் காணலாம்.

 

Dot directories

 

single dot-ஐ . command-ல் குறிப்பிடும் போது, அது தற்போதைய directory-ஐக் குறிக்க உதவுகிறது.

 

double dots-ஐ .. command-ல் குறிப்பிடும் போது, அது தற்போதைய directory-ன் parent directory-ஐக் குறிக்கிறது. அதாவது ஒரு directory பின்னோக்கிக் குறிப்பிடும்.

 

இங்கு cd .. எனக் கொடுக்கும் போது தற்போதைய directory-ஆன ‘school’-ல் இருந்து, அதன் முந்தைய directory-ஆன ‘nithya’-க்குச் செல்வதைக் காணலாம்.

 

$ cd ..

 

 

ஒருவேளை 2 directory பின்னோக்கிச் செல்ல விரும்பினால் அதற்கு ../.. எனக் குறிப்பிடலாம். இது பின்வருமாறு.

 

 

 

 

rmdir

ஒரு காலி directory-ஐ அழிக்கப் பயன்படுகிறது.

 

$ rmdir school

 

என்று கொடுக்கும் போது, “school” எனும் பெயரில் இருக்கும் காலி directory-ஆனது நீக்கப்படும். இதனை ls மூலம் நாம் உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

 

 

Home Directory-க்குச் செல்லுதல்

நாம் பின்வரும் 3 வழிகளில் எங்கிருந்தாலும், நமது home directory-ஐ நேரடியாகச் சென்றடைய முடியும்.

$ cd

 

 

$ cd ~

 

 

$ cd /home/<username>

உதாரணம்

$ cd /home/nithya

 

 

நித்யா

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: