Gpg4win எனும் கட்டற்ற பயன்பாடு ஒருஅறிமுகம்

மின்னனு கையொப்பம் ,மறையாக்கம் ஆகிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மின்னஞ்சல்களையும் கோப்புகளையும் பாதுகாப்பாக கொண்டுசெல்ல உதவுவதுதான்  Gpg4win எனும் கட்டற்ற கட்டணமற்றபயன் பாடாகும் இதில்மறையாக்க தொழில்நுட்பமானது தேவையற்றவர்களை  குறிப்பிட்ட ஆவணத்தை படித்தறியமுடியாமல் தடுக்கின்றது அவ்வாறே மின்னனு கையொப்பதொழில்நுட்பமானது வேறுயாரும் குறிப்பிட்ட ஆவணத்தினை திருத்தம் செய்யமுடியாதவாறு தடுக்கின்றது இதன்பின்புலத்தில்
GnuPG எனும் கருவி மறையாக்கம் செய்திடும் செயலை செயல்படுத்திடுகின்றது  ,மைக்ரோ சாப்ட் அவுட்லுக்கின் கூடுதல் இணைப்புகருவியாக GpgOLஎன்பதும்  விண்டோ எக்ஸ்புளோரரின் கூடுதல் இணைப்புகருவியாக GpgEXஎன்பதும்  மேலும் உரையாடல்பெட்டியான Kleopatra  என்பதற்கு மாற்றாக GPAஎன்பதும்  இதன் பின்புலத்தில் செயல்படுகின்ற உள்ளுறுப்பகளாகும் GpgOLஎனும் கூடுதல் இணைப்பு கருவியானது  மைக்ரோ சாப்ட்அவுட்லுக்கின்2010, 2013, 2016 , 2019 ஆகிய பதிப்புகளின்32 பிட் .64பிட்ஆகிய இரண்டு வகை கணினிகளிலும் செயல்படும் திறன்மிக்கது மின்னஞ்சல்களை கொண்டு செல்லSMTP/IMAP, MS Exchange  சேவையாளர் 2010 மற்றும் அதற்கு பிந்தையபதிப்பு  ஆகியவற்றை பயன்படுத்தி கொள்கின்றது  இது விண்டோ மட்டுமல்லாது லினக்ஸ் ,மேக் ஆகிய இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன் கொண்டது  இதுOpenPGP , S/MIME (X.509) ஆகியவற்றை ஆதரிக்கின்றது நாம் விரும்பினால் இந்த Gpg4win  ஐ  இதனை நம்முடைய மொழியில்  செயல்படுமாறு கூடமாற்றியமைத்து கொள்ளமுடியும்மேலும்  விவரங்களுக்கு www.gpg4win.org/எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

%d bloggers like this: