பொதுவாக எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்பான கட்டுரைகள் மட்டுமே எழுதி வந்தேன்.
ஆனால், இந்த வாரம் செய்தித்தாளில் மின்னதிர்ச்சியால் இறந்த ஒரு தம்பதியின் செய்தியை படித்த போது மிகவும் வேதனையாக இருந்தது.
மின் அதிர்ச்சியால் உயிரிழப்புகள், ஆண்டாண்டு காலமாக நீடித்து வருகிறது.
மேற்படி, நான் கடந்து வந்த இந்த நிகழ்வில் பக்கத்து வீட்டில் போடப்பட்டிருந்த அலங்கார விளக்குகளிலிருந்து மின்சாரம் கசிந்து! சம்பவம் நடந்த வீட்டில் இருந்து துணி காய வைக்கும் இரும்பு கம்பியில் பட்டு மின்னதிர்ச்சி ஏற்பட்டதில் கணவன், மனைவியாகியோர் உயிரிழந்திருக்கின்றனர்.
முதலில் மின் அதிர்ச்சி எதனால் ஏற்படுகிறது என்று பார்ப்போம். குறை கடத்திகள் குறித்தெல்லாம் பேசி இருக்கிறோம் அல்லவா! உண்மையில் மனிதனும் ஒரு அரை குறை கடத்தி தான். மனிதனின் உடலில் பல வகையான தனிமங்கள் பொதிந்து கிடக்கின்றன. எனவே மனித உடலின் ஊடாகவும் எளிமையாக மின்சாரத்தால் பயணிக்க முடியும்.
சுமார் 30 முதல் 40 வோல்ட் மின்சாரம் வரை நமது உயிரை பறிக்கின்ற அளவுக்கு ஆபத்தானதாக இருக்காது. அவ்வளவு ஏன்? பெரியதாக மின்னதிர்ச்சி கூட தெரியாது. ஆனால் அதற்கு மேல் மின்னழுத்த வேறுபாடு அதிகரிக்கும் போது நமக்கு மின் அதிர்ச்சி ஏற்பட தொடங்கும்.
நமது வீட்டிற்கு வரும் 240 வோல்ட் வரையிலான மின்சாரத்தில் நமக்கு மின் அதிர்ச்சி ஏற்படும்! அதனால் தான், மிகவும் பாதுகாப்பான காப்புக் கம்பிகளை தரையோடு(proper grounding) இணைத்திருக்க வேண்டும்.
மேலும, தற்காலத்தில் மின் சுற்றுகளை துண்டிக்கும் சர்க்யூட் பிரேக்கர்(circuit breaker) அமைப்புகளும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
இவை, மின்னழுத்த வேறுபாட்டில் ஏற்படும் திடீர் மாறுபாட்டை கண்டறிந்து! சில மில்லி வினாடிகளில் மின்சாரத்தை தடுத்து விடுகின்றன.
அதேநேரம், உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய மின்சார இணைப்பு சரியாக இருக்கிறதா என அடிக்கடி பரிசோதித்துக் கொள்வது சிறப்பு.
மேலும், அதிக காலம் பயன்படுத்தாத மின் சுற்றுகளை கையாளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மின்சாரம் குறித்து அடிப்படை அனுபவம் இல்லாத நபர்கள்! மின்சாரம் சார்ந்த கருவிகளையோ,மின்சுற்றுக்களையோ சரி செய்ய முயற்சிக்கக் கூடாது.
அப்படி நிச்சயமாக சரி செய்ய வேண்டுமென்றால்! வீட்டிற்கு வரக்கூடிய மின் இணைப்பை முறையாக துண்டித்து விட்டு சரி செய்ய வேண்டும்.
உங்கள் வீட்டில் பழங்காலத்து பியூஸ் முறை பயன்படுத்தப்பட்டாலும் கூட, அதிலும் கவனமாக தான் இருக்க வேண்டும். பியூஸ் அமைப்பில்(fuse) துண்டிப்பு ஏற்பட்டவுடன்(short circuit) பலரும் அதிகப்படியான அளவில் தாமிர கம்பிகளை சுற்றி மீண்டும் மின்சாரத்தை சரி செய்து விடுவதை பார்க்க முடிகிறது.
பொதுவாக ஒரு மில்லி மீட்டர் மற்றும் அதற்கு குறைவான அளவிலேயே பியூஸ் அமைப்பில் தாமிர கம்பிகளை சுற்ற வேண்டும்.
இல்லையேல், முறைப்படி ஒரு பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன் அல்லது மின்விநியோகத்துறை பராமரிப்பாளரை அழைக்க வேண்டும்.
வீட்டில் உள்ள பழைய சுவிட்சுகள் மற்றும் சாக்கெட்டுகளை மாற்றும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
எப்பொழுதும் தரைக்கும் நமக்கும் தொடர்பு ஏற்படுத்தாத, அதிக உயரம் கொண்ட, ஈரம் இல்லாத ரப்பர் செருப்புகள் அல்லது பாதுகாப்பு ஷூக்களை( safety boots)அணிந்திருக்க வேண்டும்.
முதலில், நிச்சயமாக மின் இணைப்பை துண்டித்திருப்பது சிறப்பு.
மேலும், அவ்வாறு மீண்டும் இணைப்புகளை வழங்கிய பிறகும் ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீட்டில் மின் இணைப்பு எடுக்கும் போதும் சரி! புதியதாக மின் இணைப்பில் மாற்றங்கள் செய்யும்போதும் சரி! அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள, நிறக் குறியீடு(காலர் code) முறையின் அடிப்படையிலேயே மின் இணைப்புகளை வழங்க வேண்டும்.
இதன் மூலம், பின்னாளில் எளிமையாக பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.
சரி ஒருவருக்கு மின்னதிர்ச்சி ஏற்பட்டால் எவ்வாறு காப்பாற்றுவது?
ஒருவருக்கு மின் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது, என்று உறுதி செய்து கொண்டால்! பெரும்பாலும் அவரை தொடக்கூடாது, கையில் கிடைக்கக்கூடிய மின்கடத்தாத பொருளைக் கொண்டு அவரை மின் இணைப்பில் இருந்து துண்டிக்க வேண்டும்.
அதே நேரம், மின்னதிர்ச்சி ஏற்படும் போது உங்கள் அருகில் யாரும் இல்லை என்றால்! இருக்கும் சில வினாடி நேரத்திற்குள் சமயோஜிதமாக சிந்திக்க வேண்டும்.
நேரடியாக, உங்கள் ஊடாக பாயும் மின்சாரம் உங்கள் கால்கள் வழியாக தரையை அடையும் போது! சிறிது நிமிடங்களில் உங்களை தூக்கி வீச வாய்ப்பு இருக்கிறது. எனவே அருகில் இருக்கக்கூடிய நாணயங்கள், இரும்புப் பொருட்கள் எதையாவது தொட்டு மின்சாரத்தின் போக்கை மட்டுப்படுத்த வேண்டும்.
ஆனால், என்னதான் இருந்தாலும் சர்க்யூட் பிரேக்கர் அல்லது பியூஸ் மற்றும் தரைக்காப்பு போன்ற நடவடிக்கைகளை எடுப்பதுதான் சரியானதாக இருக்கும்.
பெரும்பாலும், இரண்டு மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாத ! எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.
மேற்படி நிகழ்வில், பக்கத்து வீட்டில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகளின் காரணமாக மின்னதிர்ச்சி ஏற்பட்டதாக தெரிவித்திருந்தேன்.
இத்தகைய நிகழ்வுகளில், அலங்கார விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிகளை அமைக்கக்கூடிய நபர்கள் பெரும்பாலும் தரைக்காப்பு வழங்குவதில்லை! மேலும் மின்சார ஒயர்களை தரையோடும், பிற ஒயர்களில் உரசும்படியும் எடுத்துச் செல்வதை பார்க்க முடிகிறது.
உள்ளூர் அளவில் செயல்படும் இத்தகைய ஒலிபெருக்கி சேவை நிறுவனங்களில் பயிற்சி பெற்று எலக்ட்ரிசியன்கள் பணியாற்றுவதில்லை.
மேலும், இத்தகைய இடங்களில் திருத்தப்பட்ட நேர் திசை மின்னோட்டம் வழங்கப்படுவது பாதுகாப்பானதாக அமையும்.
மேலும், நேர் திசை மின்னோட்டத்தில் இயங்கக்கூடிய விளக்குகளை பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும்.
ஏனெனில், மாறுதிசை மின்னூட்டத்தில் இருப்பதைக் காட்டிலும்! நேர் திசை மின்னோட்டத்தில் ஆபத்து குறைவு.
மேலும், இரும்பு கம்பிகள் இருக்கக்கூடிய இடங்களில் மிகவும் குறுகலான சாலைகளில், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் இது போன்ற அலங்கார விளக்குகளை தவிர்ப்பது நல்லது.
மிகப்பெரிய மதில் சுவர்களின் மீது அலங்கார விளக்குகளை வைத்தாலும், குறைந்தபட்சம் 3 அடி உயரத்திற்கு மேல் வைப்பது நல்லது. இதன் மூலம், சிறு குழந்தைகள் விபத்தில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க முடியும்.
அதுபோல, அலங்கார விளக்குகளை ரோட்டில் நிற்கக்கூடிய சிறிய மரங்களில் சுற்றி விடுவதை தவிர்க்க வேண்டும். அவற்றில் இருக்கக்கூடிய இலைகளை, உண்ணவரும் மாடுகள் இந்த உயர்களையும் இழுத்து ரோட்டில் போட்டு விட அதிக வாய்ப்புகள் உள்ளது.
அவ்வாறு வைக்கப்படும் அலங்கார விளக்குகளில் கூட முறையான சீலிங் டேப் அல்லது கயிறு கொண்டு இறுக்கமாக கட்டி வைக்க வேண்டும்.
ஒரு முறைப்படியான தரைகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பெரும்பாலும் வீட்டிலிருந்து வரக்கூடிய 240 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது. மாறாக டீசல் மற்றும் பெட்ரோல் ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டும்.
மேலும் அவையில் இருந்து உயிருக்கு ஆபத்து விளைவிக்காத மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் வெளியிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், இத்தகைய அலங்கார விளக்குகள் இணைக்கப்படும் நிலங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட வேண்டும்.
இன்னும் பல நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. பல இடங்களிலும் தரமற்ற ஒயர்கள் பயன்படுத்தப்படுவதை பார்க்க முடிகிறது.
இவை அனைத்தையும் சரி செய்தால்தான், மின்விபத்துகள் ஏற்படுவதை குறைக்க முடியும்.
மேலும், நான் எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் குறிப்பிடும் பொருட்களை நீங்கள் பரிசோதித்துப் பார்க்க விரும்பினால் முறைப்படியான துறை நிபுணர்களின் முன்னிலையில் செய்து பார்க்கவும். அல்லது முறைப்படியான வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெறவும்.
எதற்கும் ஒருமுறை, உங்கள் வீட்டின் மின் இணைப்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என அடிக்கடி பரிசோதித்துப் பார்த்துக் கொள்வதும் சிறப்பான ஒன்றுதான்.
எனக்குத் தெரிந்த தகவல்களை, தொகுத்து இங்கு கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறேன்.
உங்களுக்கு மேற்கொண்டு தகவல்கள் தெரிந்திருக்கும் பட்சத்தில், தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு தெரிவியுங்கள் அதையும் இந்த கட்டுரையோடு நினைக்கிறேன்.
இந்தக் கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.
உங்களுடைய கருத்துக்கள் எப்பொழுதும் வரவேற்கப்படுகிறது.
என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிப்பதற்கு கீழே வழங்கப்பட்டுள்ள பட்டனை பயன்படுத்தவும்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி நாகர்கோவில் – 02),
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின் மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையதள முகவரி: ssktamil.wordpress.com