நம் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வுகாண்பதை ஊக்குவிப்பதே இப்போட்டியின் நோக்கம். திட்டத்தில் சோனி நிறுவனம் இலவசமாக அளிக்கும் Spresense நுண்கட்டுப்படுத்தியைப் (microcontroller) பயன்படுத்த வேண்டும்.
- முதல் பரிசு ₹ 100,000.
- இரண்டு இரண்டாம் பரிசுகள் தலா ₹ 50,000.
- நான்கு மூன்றாம் பரிசுகள் தலா ₹ 25,000.
வெற்றியாளர்களுக்கு சென்னை IIT PTF தொழில்நுட்ப அறக்கட்டளையில் தொழில்முனைவோர் (Entrepreneur-In-Residence – EIR) திட்டத்திற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஒப்புதல் அளிக்கப்பட்டால், அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு ஒரு நபருக்கு மாதம் ₹ 35,000 வழங்கும் திட்டம் இது.
EIR திட்டத்தை வெற்றிகரமாக முடித்தபின், ஒரு தொடக்க நிறுவனம் (startup company) உருவாக்கி வளர்க்க (incubating) ரூ 50 லட்சம் வரை மானியத்துக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உண்டு.
விண்ணப்பிக்க முக்கிய நாட்கள்
- 31 Jul 2021: பதிவு செய்யக் கடைசி நாள். அதிகபட்சம் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு பதிவு செய்யலாம். அனைவரும் இந்தியாவில் வசிக்கும் இந்தியக் குடிமக்களாக இருக்கவேண்டும்.
- 5 Aug 2021: பங்கேற்பாளர்களுக்கான இணையவழி விரிவுரை (Webinar).
- 1 Sept 2021: திட்ட யோசனைகளை சமர்ப்பிக்கக் கடைசி நாள்.
- 25 Sept 2021: காலிறுதிப் போட்டிக்கு 75 குழுக்கள் தேர்வு.
- 5 Oct 2021: ஆவணங்கள் அனுப்பக் கடைசி நாள்.
- 6 Oct 2021: 75 குழுக்களுக்கு சோனி Spresense நுண்கட்டுப்படுத்தி (microcontroller) அனுப்புதல் தொடக்கம்.
- 15 Jan 2021: குழுக்கள் திட்டத்தை முடித்து அது வேலை செய்யும் காணொளியை அனுப்பக் கடைசி நாள்.
மேலும் விவரங்களுக்கு
சோனி Spresense நுண்கட்டுப்படுத்தியைப் (microcontroller) பயன்படுத்தி உருவாக்கிய சில மாதிரி திட்டங்கள் இங்கே. இவை உங்களுக்கு நல்ல திட்ட யோசனைகள் கிடைக்கத் தூண்டுகோலாக உதவலாம்.
சோனி Spresense நுண்கட்டுப்படுத்தி பற்றிய விவரங்கள் இங்கே.
மேலும் இந்தப் போட்டி தொடர்பான விவரங்களுக்கு இந்த இணைய தளத்தைப் பாருங்கள்.