கற்கும் கருவிகள் – ஒரு அறிமுகம் – உரை
சூம் செயலி இணைய வழி உரை – நித்யா துரைசாமி – மே 1 2022 மாலை 7 மணி
நுழைவு எண் – 812 5151 8830
கடவுச் சொல் – 2222
கணினிகள் ஒரு வேலையைச் செய்யவும், முடிவுகள் எடுக்க வைக்கவும் பல காலம் நிரல் எழுதி வந்தோம். நிரலைத் தாண்டி அவற்றால் செயல் பட முடியாது. அவை சொன்னதை மட்டும் செய்யும் கருவிகள். ஆனால் கணினிகளை தாமே கற்க வைக்கவும், தாமே முடிவு எடுக்கவும் செய்ய பல காலம் முயன்று பெரு வெற்றி கண்டு வருகிறோம். ஆரம்ப காலங்களில் கணினியின் விலை, தனியுரிம மென் பொருட்கள் ஆகியவற்றால் கற்கும் கருவிகளின் வளர்ச்சி மெதுவாகவே இருந்தது. அறிவியல் வளர்ச்சியால் கணினி விலை குறைந்து, கட்டற்ற மென் பொருட்கள் வளர்ச்சியால், அனைவருமே கணினிகளை கற்க வைக்கலாம் என்ற வாய்ப்பு உருவாகி உள்ளது. தேவையான தரவுகளை சரியான வடிவிலும் அளவிலும் தந்தால் போதும். பல்வேறு அல்காரிங்கள் மூலம் கணினிகளை கற்க வைத்து விடலாம். அதிவேகமாக வளர்ந்து வரும் Machine Learning, Deep Learning, Artificial Intelligence ஆகியவற்றின் அறிமுகம் பற்றி இந்த உரையில் காணலாம்.
மேலும் விரிவாக அறிந்து கொள்ள, இரு இலவச மின்னூல்களையும், காணொளிகளையும் வெளியிட்டுள்ளோம்.
சுருக்கமான அறிமுகம் இங்கே – www.youtube.com/watch?v=iHG8We58HVY
எளிய தமிழில் Machine Learning – மின்னூல் – freetamilebooks.com/ebooks/learn_machine_learning_in_tamil/
எளிய தமிழில் Deep Learning – மின்னூல் freetamilebooks.com/ebooks/learn_deep_learning_in_tamil/
எளிய தமிழில் Machine Learning – காணொளிகள் www.youtube.com/watch?v=iHG8We58HVY&list=PL5itdT07Pm8wxRaPWljPntnBmnOs4ExDM
எளிய தமிழில் Deep Learning – காணொளிகள் www.youtube.com/watch?v=-SVaaiKKR8w&list=PL5itdT07Pm8ytZOEAYeWesDxyCLlMSJ9r
நித்யா துரைசாமி – அறிமுகம்
2020 க்கான ஆனந்த விகடன் நம்பிக்கை இளைஞர் விருது பெற்ற கணியம் அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவர்.
2019 ல் உத்தமம் அமைப்பு வழங்கிய ‘தமிழ் இணைய இணையர்’ விருதாளர்.
kaniyam.com ல் பல நூறு கட்டுரைகள், FreeTamilEbooks.com ல் 13 நுட்ப மின்னூல்கள், YouTube ல் நுட்ப காணொளி பாடங்கள் உருவாக்கி, தமிழில் நுட்பங்களை வழங்கி, கட்டற்ற மென்பொருட்களின் வளர்ச்சிக்கும், தமிழர்களின் கணினி நுட்ப வளர்ச்சிக்கும் பங்களிக்கிறார்.