Featured Article

சோவியத் ரஷ்யா பதிப்பக மின்னூல்கள் வெளியீடு

1960 முதல் 1990 வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பதிப்பகங்கள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில், அறிவியல், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் எனப் பல்துறைகளில் பல நூல்களை வெளியிட்டன. மிர் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்கள் அவற்றுள் முதன்மையானவை. தமிழ்நாடு முழுதும் உள்ள அனைத்து ஊர்கள், கிராமங்கள் தோறும் அவர்களது நடமாடும் விற்பனை நிலைய வண்டிகள், மிகவும் குறைந்த விலையில் அனைத்து அறிவுச் செல்வங்களையும் மக்களுக்கு அள்ளி வழங்கின. சோவியத்… Read More »

Featured Article

துருவங்கள் – நுட்ப நாவல் – நக்கீரன்.ந

ஒரு காதல் கதையில் கணினியைச் சொல்லித் தர முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் நக்கீரன். மதன், கார்த்திகா ஆகிய இருவர் தாம் இந்தக் கதையின் தலைவனும் தலைவியும். இவர்கள் இருவரையும் லினக்ஸ் இணைக்கிறது. இது தான் கதையின் சுருக்கம். கதைச் சுருக்கத்தைக் கேட்டவுடன் ‘ஓ! அவ்வளவு தானா!’ என்று நினைத்து விடாதீர்கள். நீங்கள் இந்தக் கதையில் புரட்டப் போகும் ஒவ்வொரு பக்கத்திலும் எதிர்பாராத திருப்பங்களும் எதிர்பார்க்கும் விருப்பங்களும் நிரம்ப இருக்கின்றன. காதலிக்க விரும்பும் ஒவ்வோர் இளைஞருக்கும் இந்தப்… Read More »

பைத்தானில் பெரிய தரவுத்தொகுப்புகளைக் கையாளுவதற்கான உதவிக்குறிப்புகள்

பைத்தானில் மிகப்பெரியஅளவிலான தரவுத் தொகுப்புகளைக் கையாளுகின்ற பணியானது பொதுவாகஅனைத்து நிரலாளர்களுக்கும் உண்மையில் ஒருமிகப்பெரிய சவாலாக இருக்கலாம், குறிப்பாக கணினியில் எளிதில் கையாளக்கூடிய சிறுசிறு தரவுத்தொகுப்புகளுடன் பணிபுரியும் போது மிகப்பெரியஅளவிலான தரவுத் தொகுப்புகளைக் கையாளுவது என்பது உண்மையில் மிகமுக்கியமான சவாலாக இருக்கக்கூடும். இதற்காக கண்டிப்பாக பயந்திடவேண்டாம்! அவ்வாறான மிகப்பெரிய தரவைகூட திறம்பட செயலாக்கவும் பகுப்பாய்வு செய்யவும் உதவுவதற்கான கருவிகளாலும் தந்திரங்களுடனான செயலிகளாலும் பைதான் ஆனது நிரம்பியுள்ளது என்பதே உண்மையான களநிலவரமாகும். அதனடிப்படையில் இந்த பயிற்சிகட்டுரையில், அதிக கவனம் செலுத்துவதற்கான… Read More »

சில்லுவின் கதை 15. மதத் தடைகளால் தொழில் புரட்சியையே கோட்டை விட்டோம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) வெளிப்புறத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றியே புகார் செய்யாமல் தன்னிலையை ஆய்வு செய்தல் 0:00 பிரபல வானியற்பியல் (astrophysicist) அறிஞர் பேராசிரியர் ஜயந்த் வி. நர்லிகர் (Prof. Jayant V. Narlikar), புரட்சிகரமான பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். நான் அவரது மின்னஞ்சல் குழுவில் இணைந்திருக்கிறேன். நான் “சில்லுவின் கதை” -யில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது,… Read More »

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு – பைத்தான் 28

பைத்தான்: வா! நந்தா! வா! என்னை மறந்துட்டேல்ல! நந்தன்: அப்படியெல்லாம் இல்லை! கொஞ்ச நாளா வேலை அதிகம்! அதான், உன்ன பார்க்க வரல! மத்தபடி ஐ லவ் யூ தான்! பைத்தான்: நீ இல்லாத இந்த நாட்கள்ல நெறய மாறிப் போச்சு! நந்தன்: அப்படி என்ன மாறிச்சு! பைத்தான்: தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்துல மூணாவது மொழி உண்டுன்னு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சொல்லிட்டாரு! நந்தன்: என்னது?! மூணாவது மொழியா? பைத்தான்: ஆமாப்பா! மூணாவது மொழியா சி, சி++, ஜாவா… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 4

சில அடிப்படைகள் hello world என்று அச்சிடுவது மட்டும் போதாது. அதற்கும் மேலே ஏதாவது செய்தால் நன்றாக இருக்குமே. பயனரிடம் ஏதாவது கேள்வி கேட்கலாம். பதில் வாங்கி, அதில் ஏதாவது மசாலா சேர்த்து, புது கலவையாக்கித் தரலாமா? அதற்கு, பைத்தானில் உள்ள Constant, Variable ஆகியவை உதவும். அவை பற்றி இங்கே காணலாம். அதற்குள்ளே புது வார்த்தைகளைக் கண்டு பயந்து விட வேண்டாம். நான் முதலில் இவற்றைக் கண்டு மிகவும் கலங்கிப் போன நாட்கள் பல. செந்தமிழும்… Read More »

நான்கு மாத லினக்ஸ் பயனரின் கதை | லினக்ஸ் புராணம் 1

என்னப்பா! எலக்ட்ரானிக்ஸ்,கட்டற்ற செயலிகள் என அங்கொன்றும், இங்கொன்றுமாக கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த நீயும், இப்பொழுது லினக்ஸ் புராணத்தை பாடத் தொடங்கி விட்டாயா என கேட்கிறீர்களா? நான்கு மாத காலம் மட்டுமே நான் லினக்ஸ் பயனராக அறியப்படுகிறேன். இல்லையே! நீ ஏழு,எட்டு மாதங்களுக்கு முன்பே லினக்ஸ் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை எழுதி இருக்கிறாயே என்று கேட்கிறீர்களா? உண்மையை சொல்லப்போனால், நான் கடந்து ஆறு மாதங்களாக மட்டுமே மடிக்கணினியை பயன்படுத்து வருகிறேன்(அதுவும் நம் பொறுப்பாசிரியரின் பொறுப்பான அறிவுரைகளை கேட்டு தான்… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 3

முதல் நிரல் கணினி நிரல் உலகில், காலம் காலமாக செய்யப்பட்டு வரும் ஒரு சடங்கு ஒன்று உள்ளது. எல்லா கணினி நிரல் நூல்களிலும் இதைக் காணலாம். என்ன? அறிவியலிலும் சடங்கா? ஏன் இப்படி? ஆம். ஆனால் இங்கு நாம் எந்தக் கடவுளையும் வணங்கத் தேவையில்லை. பூசைகள் ஏதுமில்லை. முதல் நிரலாக, ‘Hello World’ என்பதை திரையில் அச்சடிப்பதே முதல் நிரல். இதுதான் இத்துறையின் ஒரு சின்ன சடங்கு. சாதாரணமாகவே நாம், சடங்கு என்று வந்து விட்டால், எந்தக்… Read More »