தடையின்றி அரட்டைகளை மேற்கொள்ள, ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 6

நம்மில் பலரும் நண்பர்களோடு பேசுவதற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறோம்.

தற்பொழுது, telegram போன்ற செயலிகளும் பயன்பாட்டில் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

ஆனால், whatsapp போன்ற செயலிகளில் நீங்கள் உரையாடும்போது, உங்களுடைய தகவல்கள் பிற நிறுவனங்களுக்கு விற்கப்படுவதாக ஆண்டாண்டு காலமாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு கொண்டு வருகிறது.

தனிமனித தகவல்களை விளம்பர மற்றும் வியாபார நோக்கங்களுக்காக இத்தகைய நிறுவனங்கள் பயன்படுத்துவதாக, நாம் அடிக்கடி செய்திகளில் படித்து வருகிறோம்.

இவற்றிற்கு மாற்றாக, என்னுடைய நட்பு வட்டார நண்பர்கள் மட்டும் பேசுவதற்கு ஒரு கட்டற்ற செயலி இருக்கிறதா? என நீங்கள் கேட்டால் ஆம்! என்று பதிலளிக்கிறது jami எனும் கட்டற்ற செயலி.

இந்த செயலியில் உங்களால் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடியும்! குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்! ஏன்? அழைப்புகளையும் கூட மேற்கொள்ள முடியும்! உயர்தரத்திலான வீடியோ அழைப்புகளை கூட மேற்கொள்ள முடியும்.

இவை அனைத்தையும் இலவசமாக கட்டற்ற முறையில் வழங்குகிறது, இந்த செயலி.

F-droid ஆப் ஸ்டோரில் காணப்படக்கூடிய, இந்த செயலி சுமார் 90 mb அளவுடையதாக உள்ளது.

பெரும்பாலும், நீங்கள் whatsapp ல் செய்யக்கூடிய செயலிகளை இதிலும் செய்ய முடியும்.

மேலும், உங்களுடைய தரவுகள் முழுக்க, முழுக்க பாதுகாப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த கட்டற்ற செயலியை பயன்படுத்தி பாருங்கள்! பயன்படுத்திவிட்டு உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும், இந்த செயலி குறித்து மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி பாருங்கள்.Jami app link

மீண்டும் ஒரு பயனுள்ள கட்டற்ற செயலியோடு, உங்களை வந்து சந்திக்கிறேன்.

ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், தயங்காமல் மின் மடலுக்கு மடல் இயற்றவும்.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

%d bloggers like this: