கணியம் அறக்கட்டளை தொடக்கவிழா – நிகழ்வுக் குறிப்புகள்

 

22.04.2018 அன்று காலை 10.30 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கின.

கட்டற்ற தமிழ்க்கணிமைக்கான ஒரு அமைப்பின் தேவை, பிற அமைப்புகளின் பங்களிப்புகள் பற்றி நித்யா பேசினார்.

பின் கணியம் அறக்கட்டளையின் நோக்கம், குறிக்கோள்கள், செயல்திட்டங்கள் பற்றி சீனிவாசன் பேசினார்.

பின் உதயன், எழுத்துரு உருவாக்கம், அவற்றின் சிக்கல்கள், தேவைகள் பற்றி பேசினார். தமது தளம் udayam.in பற்றிய அறிமுகம் தந்தார்.

தான் உருவாக்கிய கோலம் எழுத்துருவை வெளியிட்டார். இல.சுந்தரம் அவர்களின் 20 எழுத்துருக்களையும் வெளியிட்டார். அவற்றை பின்வரும் இணைப்புகளில் காணலாம்.

fonts.udhayam.in/

github.com/KaniyamFoundation/Fonts

 

பின் சீனிவாசன் Latex, Pandoc, Markdown பற்றி பேசினார். பின், GIMP மென்பொருள் மூலம் அட்டைப்படங்கள் உருவாக்குதல் பற்றிப் பேசினார்.

மதிய உணவுக்குப் பின், மின்னூலாக்கப் பணிகளைத் தொடங்கினோம்.சீனிவாசன், கலீல் இருவரும் make-ebooks நிரலை நிறுவுதல், இயக்குதல், markdown கோப்பு உருவாக்குதல் பற்றி பயிற்சி அளித்தனர்.

 

அனைவரும் github.com ல் கணக்கு உருவாக்கி, மின்னூலாக்கம் செய்து, archive.org ல் பதிவேற்றம் செய்தனர். 30 மின்னூல்கள் உருவாக்கப்பட்டன. அனைவரும் தொடர்ந்து பங்களிப்பதாக உறுதி கூறினர். உருவாக்கப்பட்ட மின்னூல்களை இங்கு காணலாம்.

github.com/KaniyamFoundation/Ebooks/issues?q=is%3Aopen+is%3Aissue+label%3A%22%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%22

இடையே மோகன், தமிழ் ஒலி உரை மாற்றியின் பல்வேறு மேம்பாடுகள் செய்து வெளியிட்டார்.

github.com/mohan43u/tamil-tts-install

 

இவ்வாறு நிகழ்ச்சி, இனிதே நடந்து, நிறைவு பெற்றது.

பங்கு பெற்றோர் –
சீனிவாசன்
நித்யா
அன்வர்
அருணாச்சலம்
ராஜரெத்தினம்
உதயன்
ச.குப்பன்
மோகன்
தனசேகர்
மணிமாறன்
நிஹால்
சரண்ராஜ்
பழனியப்பன்
ஶ்ரீதரன்

பங்குபெற்றோருக்கும், அழகிய அட்டைப்படங்கள் உருவாக்கிய லெனின் குருசாமி அவர்களுக்கும், இடம் அளித்த FSFTN குழுவினருக்கும் நன்றிகள்

காணொளிகள் –
 நித்யா உரைwww.youtube.com/watch?v=g2KfGPLiHu8
சீனிவாசன் உரை – www.youtube.com/watch?v=3i7hJxhLa9Y
தமிழ் எழுத்துருக்கள் – உதயன் உரை – www.youtube.com/watch?v=hWEbXhutLXc
%d bloggers like this: