எளிய தமிழில் 3D Printing 8. சீரொளி சிட்டங்கட்டல் (laser sintering)

சிட்டங்கட்டல் என்பது துகள்களை முழுவதும் திரவமாக உருக்காமல் வெப்பம் மற்றும் அழுத்தம் கொடுத்து இறுக்குதல் அல்லது கெட்டித்தல் மூலம் ஒரு திடமான பொருளை உருவாக்கும் செயல்முறை. இது துகள்களை ஒன்றாக இணைத்து ஒரு திடமான பாகத்தை உருவாக்குகிறது. சீரொளி தேர்வு சிட்டங்கட்டல் (selective laser sintering – SLS) மற்றும் நேரடி உலோக சீரொளி சிட்டங்கட்டல் (Direct metal laser sintering – DMLS) இதில் அடங்கும். அடிப்படையில் இவை ஒரே மாதிரியானவை. நெகிழி, கண்ணாடி, பீங்கான் போன்ற பலவகையான பொருட்களுக்கு SLS செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. DMLS என்பது உலோகக் கலவைகளுக்குப் பயன்படுத்தப்படும் செயல்முறையைக் குறிக்கிறது. இழையை உருக்கிப் புனைதலுக்கு (Fused Filament Fabrication – FFF) அடுத்தபடியாக இவை 3D அச்சு வேலைக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சீரொளி தேர்வு சிட்டங்கட்டல் (selective laser sintering – SLS) 

SLS க்கு அதிக சக்திவாய்ந்த ஒளிக்கதிர்கள் தேவைப்படுவதால் இந்த இயந்திரம் இழையை உருக்கிப் புனையும் இயந்திரத்தை விட மிகவும் விலை உயர்ந்தது. மேலும் சீரொளி பயன்படுத்துவதால் வீட்டில் பயன்படுத்த மிகவும் ஆபத்தானது. 

உருகும் நிலைக்கு சற்றே கீழான வெப்பநிலை வரை தூளை முன்கூட்டியே சூடாக்கிவிடும். சீரொளி துரிதமாக வேலை செய்ய இது உதவுகிறது.

சீரொளி நேரடி உலோக சிட்டங்கட்டல் (Direct Metal Laser Sintering – DMLS )

சீரொளி சிட்டங்கட்டல்

சீரொளி சிட்டங்கட்டல்

இந்தத் தொழில்நுட்பம் உயர்தர உலோக பாகங்களை உருவாக்க உதவுகிறது. ஏனெனில் இது சிக்கலான வடிவியல் கொண்ட உலோக பாகங்களை உருவாக்கும் திறன் கொண்டது. வானூர்தி, விண்வெளி (aerospace) மற்றும் வாகனங்கள் (automotive) தயாரிப்புத் தொழில்களில் பாகங்கள் மற்றும் தயாரிப்பில் உதவும் கருவிகள் (tooling) போன்ற சிக்கலான கட்டமைப்புகளை உருவாக்க இது பயன்படுத்தப்படுகிறது. உள்கூடான பாகங்களை உருவாக்க இயல்வதால் எடை குறையும். மேலும் புதிய கருவிகளை வடிவமைத்து, தயாரித்து சந்தைக்குத் துரிதமாகக் கொண்டு வர இயலும். ஆகவே இது உற்பத்தித் தொழிலுக்கு ஏற்றதாக அமைகிறது.

நன்றி

  1. A Review on Direct Metal Laser Sintering: Process Features and Microstructure Modeling | SpringerLink

இத்தொடரில் அடுத்த கட்டுரை: படிவுத் துகளை உருக்கி இணைத்தல்

உலோகங்களை இளக்குவதும், கையாளுவதும் மிகக் கடினமான வேலை. மூலப்பொருளை உருக்கிப் பீச்சுதல் (Material Jetting – MJ) மற்றும் இணைக்கும் பசையைப் பீச்சுதல் (Binder Jetting – BJ). வடிவமைப்புக்கான பகுதிகளை மட்டும் சீரொளியால் உருக்குதல் (Selective Laser Melting – SLM).

ashokramach@gmail.com

%d bloggers like this: