மொசில்லா
ஆம்!! மொசில்லா என்றாலே , அது இணையத்தை திறந்த தன்மையுடையதாக மாற்றுவதைப் பற்றியும் , இணையத்தின் உண்மையான சக்தியை உலகிற்கு உணர்த்துவதைப் பற்றியதுமே ஆகும். இதுவே மொசில்லாவை ஒரு புரட்சிகரமான பையர்பாக்ஸ் உலவியின் முலம் வலை தொழில்நுட்பங்களை நம் கணினிக்கு கொண்டு வர தூண்டிய விஷயமாகும். மொசில்லா இன்னும் பல புதுமைகளை செய்ய உள்ளது , அதில் நீங்கள் இழக்க கூடாத ஒன்று “மொசில்லா பாப்கார்ன்”
பாப்கார்ன் எதற்காக? அது எதனைக் கொண்டு வர நினைக்கிறது?
இணையம் உருவான காலம் முதலே , மக்கள் தங்களின் அறிவை பயன்படுத்தி இணையத்தில் மிகச்சிறந்த பறிமாற்றம் நடக்க முயற்சித்து வருகின்றனர். அவ்வகையில் , முதலில் தோன்றியவை குறிசொற்கள் மற்றும் மிகையிணைப்புகளாகும். அதனை தொடர்ந்து , சில காலத்திற்கு பின் புகைப்படங்கள் மற்றும் இசை தோன்றியது . இதனை தொடர்ந்து , பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதியாக வீடியோ இணையத்தில் தோன்றியது.மக்கள் இந்த மேம்பாடுகளை வியப்பாக சில காலத்திற்கு மட்டுமே பார்த்தனர் ,அதன் பிறகு இவை தன் ஆற்றலை இழந்தது. ஏன்? இவற்றில், ஏதோ ஒன்று உறுதியாக இல்லை.ஓர் எடுத்துக்காட்டாக , உணவில் காரம் இல்லாததைப் போல!!!
சிறிது யோசித்துப் பாருங்கள் உங்களுக்கு விடை கிடைக்கும்: இணையத்தில் உள்ள அனைத்து தகவல்களுக்கும் , பயனருக்கும் மத்தியில் நிகழ் நேர தொடர்பு என்பது எங்கே? நம்மிடம் , மிகப்பெரிய தகவல் வளங்கள் இணையத்தில் உள்ளன என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.ஆனால் , பிரச்சனை என்னவென்றால் அவை அனைத்தும் நிலையானவை என்பதேயாகும். மக்கள் உருவாக்குவதை,நம்மால் பார்க்கமுடியும். அவற்றில், நம்மால் ஏதும் செய்யவோ, மாற்றவோ முடியாது.சுருக்கமாக , தகவல்கள் நிலையானவை என்றால் ” பயனரின் பங்கு அதனை பார்ப்பதை தவிர வேறு எதுவும் இல்லை”.
எனவே , இது செய்தித்தாள்களை படிப்பதை போன்றது அல்லது தொலைகாட்சி பார்ப்பது போன்றதேயாகும். ஃபிளாஷ் இணையத்தில் ,உயிர்ச்சித்தரமாக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் மின்னுகின்ற கிராபிக்ஸ் முலம் சிறிய பயனருடனான தொடர்பை கொண்டுவர முயற்சித்தது. இருப்பினும் , இவையும் நிலையானவையே! ஏனெனில் ,தகவல்களுக்கும் , பயனருக்கும் நிகழ் நேர தொடர்பு என்று ஒன்று இல்லை.
ஆனால் , நிகழ் நேர தொடர்பை ஏற்படுத்த உறுதியாக ஓர் வழி இருக்க வேண்டும். ஓர் வலை உள்ளடக்கத்தினால் ,அனைத்து சிறந்த ஊடாடக்கூடிய அனுபவங்களையும் இணைத்து தகவல்களை தர முடியும் என்றால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட வலை உள்ளடக்கத்தை உருவாக்குவதைனையே குறிக்கோளாக கொண்டதே “மொசில்லா பாப்கார்ன்” திட்டமாகும்.
எவ்வாறு?
தொழில்நுட்ப ரீதியாக, பாப்கார்ன் திட்டமானது முழுக்கமுழுக்க ஜாவாஸ்கிரிப்ட் கொண்டு உருவாக்கப்பட்டது. பாப்கார்னுக்கு முதுகெலும்பாக popcorn.js உள்ளது – popcorn.js என்பது ஓர் ஜாவாஸ்கிரிப்ட் நூலகமாகும். இது HTML5 ஊடக கூறுகள், வழிமுறைகள் மற்றும் நிகழ்வுகளை பயன்படுத்தி ஒரு API-யை வழங்குகின்றது. இந்த API கொண்டு , வீடியோ / ஆடியோ- களில் நிகழ் நேர தகவல்கள் மற்றும் தொடர்பை கொண்டு வர முடியும்.
உங்களுக்கு சிறு குழப்பமாக இருக்கும் என்பதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். நாம் சிறிது விரிவாக பார்த்தால் இக்குழப்பம் நீங்கிவிடும். நீங்கள் ஓர் நிகழ்ச்சி அமைப்பாளர் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ரஜினிகாந்தின் நேரடி துபாய் நிகழ்ச்சியைப் பற்றி ஒரு விளம்பர வீடியோவை வெளியிட நீனைக்கின்றீர்கள். பொதுவாக , இவ்வகை வீடியோகளில் பின்னணி இசை , நிகழ்ச்சி நடைபெறும் இடம் , கட்டணத் தகவல்கள் போன்றவையே இருக்கும்.
இதுவே popcorn.js முலம் உருவாக்கப்பட்டால் ,பின்வரும் அம்சங்களை உங்கள் வீடியோவில் காணமுடியும்: வீடியோவில் ரஜினிகாந்தை டேக் பண்ணலாம் , அவரின் ப்ளிக்க்ர் புகைப்படங்களை ஸ்ட்ரியம் செய்ய முடியும், அவரின் ட்விட்டர் மற்றும் விக்கி
பக்கங்களின் இணைப்புகளை பார்வையாளர்கள் ஆணுகுவதற்கு திரையிடலாம் , யுடுப் வீடியோகளை உட்பொதிக்கலாம் , கூகிள் மாப்ஸ் இணைப்புகள் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைப் பற்றிய தகவல்களை தரலாம்.
இவை அனைத்திற்கும் மேலாக , உங்களால் வானிலைப் பற்றிய தகவல்களையும் தர முடியும் . துபாயின் வெப்பத்தை உங்களால் மஞ்சள் நிற ஒளியை இணைப்பதன் மூலம் காட்ட முடியும்.
பாப்கார்ன் திட்டத்தின் புதிய சேர்ப்பான பாப்கார்ன் மேக்கர் ( popcorn maker ) , பிற வீடியோ எடிட்டிங் மென்பொருள் போலவே மிக எளிதாக பாப்கார்ன் சார்ந்த வீடியோகளை உருவாக்க உதவுகிறது.
புதுமையாக உள்ளது அல்லவா? இப்போதே பங்களிக்க தொடங்குங்கள் – mozillapopcorn.org/
Interviewer : Dwaraka Nath
Translated By : Gautham Raj Elango
This article was made possible my Mozilla’s Project NeMo – News Mozilla. NeMo is all about taking knowledge and know how about Open Source and Web concepts to people like you and me by whatever means possible, print media being on top of it. Please visit wiki.mozilla.org/NeMo to know more and participate !