Note pad ++ இலவச உரைப்பான்

Note pad ++ இலவச உரைப்பான்

இது ஒரு விண்டோசில் செயல்படும் இலவச உரைப்பான். இணைய பக்கங்கள் உருவாக்கவும்,CSS ஆவணங்கள் உருவாக்கவும் பயன் படுத்தலாம். பல கணனி மொழிக்களுக்குத் தேவையான ஆவணங்களாகவும் இந்த உரைப்பானைக் கொண்டு சேமிக்கலாம்.

கட்டளைகள் பல வண்ணங்களில்த் தோன்றுவதால் நமது தவறுகளைச் சரி செய்துக் கொள்ள வசதியாக இருக்கும். இந்த உரைப்பானின் கட்டளைகள் தமிழில் அமைக்க முடியும். தமிழில் தட்டச்சுச் செய்வதும் எளிது.

notepad-plus-plus.org என்ற இணைய தளத்திற்கு சென்று இந்த இலவச உரைப்பானை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த மென்பொருளை உங்களுக்குத் தகுந்த முறையில் பதிவிறக்கிக் கொள்ளவும்.

முதலில் வரும் சாரளத்தில் ஆங்கிலத்தைக் கணினி மொழியாகத் தேர்வு செய்யவும்.

இரண்டாவது சாளரத்தில் Localization என்றத் தேர்வில் இருக்கும் கூட்டக்க் குறியைஅழுத்தினால் நமக்குத் தேவையான மொழியில் உரைப்பான் செயல் படும்

பல மொழிகளின் வரிசையில் தமிழும் இருக்கிறது. இதை நாம் தேர்வு செய்தால் இந்த உரைப்பான் தமிழில் செயல் படும்.

முதலில் திறக்கும் உரைப்பானின் சாளரத்தின் அமைப்பு ஆங்கிலத்தில் இருக்கும். Settingsல் உள்ள Preference என்ற கட்டளையை தேர்ந்தெடுத்தால் நம் தாய் மொழிக்கு மாற்றிக் கொள்ளக் கூடிய சாளரம் வரும்.

அடுத்ததாகத் திறக்கும் சாளரத்தில்

General பகுதியில் மொழியை மாற்ற தேர்வு செய்யலாம்.

நாம் தமிழைத் தேர்ந்தெடுத்த தும் கணனியின் பல கட்டளைகள் தமிழுக்கு மாறுவதைக் காணலாம்.

New Document Default Directory ல் UTF-8 என்று தேர்வு செய்ய வேண்டியது முக்கியம். அப்போது தான் நம்மால் தமிழில் தட்டச்சுச் செய்ய முடியும். நமது ஆவணத்தை நாம் சேமிக்க முயலும் போது பல வகையான ஆவணங்களாக சேமிக்க முடியும்.

சுகந்தி வெங்கடேஷ்  மின்னஞ்சல் : vknsvn@gmail.com வலை : tamilunltd.com/

%d bloggers like this: