4 வது நாளில் நாம் காண இருக்கும் கட்டளை
CAT
cat என்றவுடன் பூனை என்று எண்ணிவிடாதீர்கள். concatnate என்பதன் சுருக்கமே அது.
தொடரியல்:
hariharan@kaniyam :~/odoc $ cat ./bashrc
ஒரே ஒரு கோப்புடன் இந்த கட்டளையை பயன்படுத்தும்போது கோப்பின் உள்ளடக்கத்தை முனையத்தில் காட்டும்.
hariharan@kaniyam:~/odoc $ cat video.mp4
அப்படியெனில் படம் அல்லது காணொலிகளை இந்த கட்டளை பயன்படுத்தி படித்தால் முனையத்தில் படத்தின்(காணொளியின்) இருநிலை மதிப்பின் உரைவடிவம் வெளியிடப்படும்.
hariharan@kaniyam:~/odoc $ cat file1 >> file2
இந்தக் கட்டளையை பயன்படுத்தி ஒரு கோப்பின் உள்ளடக்கத்தை நகலெடுத்து அதனை இன்னொறு கோப்பின் இறுதியில் சேர்க்க முடியும்.
hariharan@kaniyam:~/odoc $ cat file1 file2 > file3
மேலும் இதனால் இரு கோப்புகளை இணைத்து அதனை இன்னொறு கோப்பில் எழுத முடியும்.
தெரிவுகள் :
-n எனும் தெரிவைப்பயன்படுத்தி கோப்பின் உள்ளடக்கத்தினை வரிசை எண்களோடு பார்க்கலாம்.
-b எனும் தெரிவைப்பயன்படுத்தி கோப்பின் உள்ளடக்கத்தில் உள்ள வெற்று வரிகளை வரிசை எண்ணிடாமல் பெறமுடியும்.
-s எனும் தெரிவைப்பயன்படுத்தி பல வெற்றுவரிகளை ஒருவெற்று வரியாக மாற்ற முடியும்.
-T எனும் தெரிவைப்பயன்படுத்தி தத்தல்(tab) விசையின் உள்ளீட்டயும் இடைவெளி(space) விசையின் உள்ளீட்டையும் ^I குறியீட்டை பயன்படுத்தி பிரித்தறியலாம்.
-E எனும் தெரிவைப்பயன்படுத்தி ஒவ்வொறு வரியின் முடிவிலும் $ குறியீட்டை கொண்டு அடையாளப்படுத்தி பெறலாம்.
- A எனும் தெரிவைப்பயன்படுத்தி -E மற்றும் -T தனித்தனியே செய்வனவற்றை சேர்த்து செய்யலாம்.
மேற்கண்ட தெரிவுகளில் சில தெரிவுகளை சேர்த்து பயன்படுத்தலாம்.
உதாரணமாக, cat -ns வரிசை எண்களையிடுகிறது மேலும் பல வெற்று வரிகளை ஒரு வெற்று வரியாக மாற்றி அதற்கு வரிசை எண் அளிக்கிறது.
இதேபோல cat -ET ஐ சேர்த்து பயன்படுத்தும்போது cat -A க்கான வெளியீட்டை தருகிறது.
மற்றொன்றாக cat -bE ஐ சேர்த்து பயன்படுத்தும்போது வெற்றுவரிகளை நீக்கிவிட்டு பிறவரிகளில் இறுதியில் $ குறியீட்டை சேர்த்து அளிக்கிறது.
பின்னூட்டங்களை தவறாமல் குறிப்பிடுங்கள்.
நன்றி!
ஹரிஹரன் உமாபதி,மென்பொறியாளர்.
Programmer Life – programmerlife1.wordpress.com