[தினம் ஒரு கட்டளை] LS பட்டியலிடுவோமா ?

தினம் ஒரு கட்டளை பகுதியில் கணியம் வாசகர்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.

இன்று மூன்றாவது நாளில் நாம் காண இருப்பது

LS – பட்டியல்

ls கட்டளையை நாம் பட்டியல் (list) எனப் பொருள் கொள்ளலாம். இந்தக்கட்டளை கோப்புறைகளையும் கோப்புகளையும் பட்டியலிட பயன்படுகிறது.

எந்த ஒரு கோப்புறையின் பாதையையும் கொடுக்காமல் இக்கட்டளையை பயன்படுத்தும்போது தற்போது நாம் இருக்கும் கோப்புறையில் உள்ளவற்றை பட்டியலிடுகிறது.

தொடரியல்:

hariharan@kaniyam: ~/odoc $ ls

hariharan@kaniyam: ~/odoc $ sudo ls .

நீங்கள் சாதாரண பயனராக இருப்பின் சில கோப்புறைகளில் எந்தவித கட்டளையும் இயக்க முடியாத சூழல் இருக்கும் அப்போது மீப்பயனராக கோப்புகளை பட்டியலிட்டு பார்க்க sudo உடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.

hariharan@kaniyam: ~/odoc $ ls -l /home

பிற கோப்புறையில் உள்ள கோப்புகளை பட்டியலிட அதன் பாதையை ஒரு உள்ளீடாக அளிக்கவேண்டும். மேற்கண்ட உதாரணத்தில் கோப்புறையின் பாதை உள்ளீடாக அளிக்கப்படுள்ளது.

-l தெரிவுடன் இக்கட்டளையினை பயன்படுத்தும்போது கோப்பின் பெயருடன் பிற விவ்ரங்களான கோப்பு அனுமதிகள்,கோப்பு உரிமையாளர்,கோப்பின் அளவு, கடைசியாக திருத்தப்பட்ட நேரம் போன்ற பல்வேறு விவரங்களோடு நமக்கு அளிக்கிறது.

hariharan@kaniyam: ~/odoc $ ls -a

-a தெரிவுடன் இக்கட்டளையினை பயன்படுத்தும்போது மறைக்கப்பட்ட கோப்புகளையும் காட்சிப்படுத்துகிறது. (கோப்பின் பெயரில் ‘.’ புள்ளியுடன் தொடங்குவன இவற்றுள் அடங்கும்).

hariharan@kaniyam:~/odoc $ ls -lh

ஒரே நேரத்தில் இரு தெரிவுகளையும் சேர்த்து பயன்படுத்தலாம்.
-lh தேர்வுகளை சேர்த்து பயன்படுத்தும்பொழுது விரிவான பட்டியல் மற்றும் கோப்பின் அளவு kb,mb என்று நமக்கு புரியும் வகையில் வெளியிடும்.

hariharan@kaniyam:~/odoc $ ls -lhrt

பல தெரிவுகளை பயன்படுத்தும் மற்றொறு உதாரனத்தில் நான்கு தெரிவுகளை பயன்படுத்தியுள்ளேன்
இதில்
l ஆனது விரிவான விரங்களுடன் பட்டியலிடும்.
h ஆனது கோப்பின் அளவை kb,mb என காட்டும்.
r ஆனது பின்வரிசையில்(reverse order) காட்டும்.
t ஆனது திருத்தப்பட்ட நேரத்தின்படி புதியன முதலில் வருமாரு வரிசைப்படுத்தும்.

நன்றி!

ஹரிஹரன் உமாபதி,மென்பொறியாளர்.
Programmer Life – programmerlife1.wordpress.com

About Author

hariharan
Freelance Consultant | PHP Developer | Codeigniter | Laravel | Customized Web Application development | Pythonista | Novice Linux Boy

%d bloggers like this: