[தினம் ஒரு கட்டளை] mkdir கோப்புறை உருவாக்கு

By | November 21, 2024

10 வது நாள் நாம் பார்க்கவிருப்பது கோப்புறை உருவாக்கும் கட்டளை

நாம் தொடர்புள்ள கோப்புகளை எல்லவற்றையும் சேர்த்து ஒரு கோப்புறை உருவாக்கி அதில் சேமிப்பது தேவைப்படும் நேரத்தில் அந்த கோப்பினை நாம் எளிதாக கண்டறிய வழிவகை செய்யும்.

mkdir –

இந்த கட்டளை கோப்புறையை உருவாக்கு (make directory) எனும் ஆங்கில சொற்சுருக்கத்தை அதன் பெயராகக் கொண்டுள்ளது. கோப்புறையை உருவாக்க பயன்படும் இந்த கட்டளை சில கோப்புறைகளின் உள்ளே மூல பயனர் மட்டுமே இயக்க இயலும். அவ்வாறான சமயங்களில் sudo உடன் பயன்படுத்தவேண்டும் இல்லையெனில் அனுமதி மறுப்பு பிழை காண்பிக்கபடும்.

தொடரியல் :

பொதுவான பயன்பாடு இருக்கும் கோப்புறையிலே துணைக்கோப்புறைகளை உருவாக்குதல்.

hariharan@kaniyam :~/odoc  $ mkdir directory

வேறுஒரு பாதையில் கோப்புறையை உருவாக்குதல்.

hariharan@kaniyam :~/odoc  $ mkdir /path/to/directory

சுடொ உடன் அனுமதி மறுக்கப்பட்ட கோப்புறைகளில் கோப்புறை உருவாக்குதல்.

hariharan@kaniyam :~/odoc  $ sudo mkdir /path/to/directory

தெரிவுகள்

-p எனும் தெரிவு கட்டளையை அளபுருக்கள் இல்லாமலேயே இயக்குமாறே இயக்குகிறது. சில சமயங்களில், பயனர்கள் அதிக துணைக்கோப்புறைகள் உருவாக்கும் நிகழ்வுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

hariharan@kaniyam :~/odoc  $ mkdir -p /path/to/nested/directory

-m எனும் தெரிவானது கோப்புறை பயனர் அனுமதியை கோப்புறை உருவாக்கப்படும்போதே குறிக்க பயன்படுகிறது.கோப்புறை அனுமதிகளை குறியீடுகள் மற்றும் எண்களைக்கொண்டு குறிப்பிட இயலும்.

hariharan@kaniyam :~/odoc  $ mkdir -m xyz /path/to/directory

-v எனும் தெரிவு அதிக விவரத்துடன் கட்டளையை இயக்குகிறது.கோப்புறை வெற்றிகரமாக உருவாக்கப்பட்டதற்கான உறுதிப்படுத்துதலை இது வழங்குகிறது. குனு அல்லாத அமைப்புகளில் இந்த தெரிவு வேலைசெய்யமாட்டா.

hariharan@kaniyam :~/odoc  $ mkdir -v /path/to/directory

நன்றி!

ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com