[தினம் ஒரு கட்டளை] POWEROFF இயக்கத்தை நிறுத்து

By | November 13, 2024

இரண்டாவது நாளுக்கான கட்டளையாக நாம் பார்க்கவிருப்பது poweroff எனும் கட்டளைதான்.

POWEROFF –

தொடரியல் : 

hariharan@kaniyam: ~/odoc $  sudo poweroff

இந்த கட்டளை இயங்குதளத்தின் இயக்கத்தை நிறுத்த பயன்படும் கட்டளை ஆகும். இந்த கட்டளை இயக்கப்பட்டவுடன் இயங்குதளத்தில் நிகழும் எல்லாவிதமான செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துகிறது.

இவ்வாறு உடனடியாக செயல்பாடுகள் நிறுத்தப்படுவதால் சேமிக்கப்படாமல் இருக்கும் வேலைகள் அனைத்தும் தொலைந்துவிடும். மேலும் இது தற்போது இணைப்பில் உள்ள எல்லா கோப்பு அமைப்புகளின் இயக்கத்தையும் துண்டித்துவிட்டு  வன்பொருளின் இயக்கத்தையும் நிறுத்துகிறது.

கணினியின் இயக்கத்தை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு எளிமையான வழிகளில் இதுவும் ஒன்று. sudo கட்டளை இன்றி poweroff கட்டளையை பெரும்பாலும் இயக்கப்படுவதில்லை.

hariharan@kaniyam:~/odoc $ sudo poweroff –force

poweroff கட்டளையுடன் –force  தெரிவை பயன்படுத்தும் போது கணினியின் உடனடியாக எந்த செயல்பாடுகளையும் நிறுத்தாமல் இயங்குதளத்தினை நிறுத்துவதால் இந்த முறை பாதுகாப்பானதாக கருதப்படுவதில்லை. இந்த முறையில் கணினியின் எந்த செயல்பாடுகளும் சரிவர இயங்காதபோது பயன்படுத்தப்படுகிறது.

hariharan@kaniyam;~/odoc $ sudo poweroff –halt

poweroff கட்டளையுடன் –halt தெரிவை பயன்படுத்தும் போது கணினியில் தற்போது இயக்கத்தில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் poweroff கட்டளை நிறுத்துவது போலவே நிறுத்துகிறது. அனால் இறுதியா வன்பொருளுக்கு செல்லும் மின்சாரத்தை துண்டிப்பதில்லை. இந்த கட்டளை தெரிவு எல்லா இயக்கத்திலுள்ள செயல்பாடுகளையும் நிறுத்த பயன்படுத்தப்படுகிறது.

பின்னூட்டங்களை தவறாமல் குறிப்பிடுங்கள்.

நன்றி!

ஹரிஹரன் உமாபதி,மென்பொறியாளர்.
Programmer Life – programmerlife1.wordpress.com