லினக்ஸ் இயங்குதளத்தில் பல்வேறு கட்டளைகள் உள்ளன. அவற்றை ஓவ்வொன்றாக நாம் தினம் ஒரு கட்டளை தொகுப்பில் காணலாம்.
அதன்படி முதல் நாளான இன்று. PWD கட்டளை பற்றி காணலாம்.
PWD – Print Working Directory
தற்போது நாம் எந்த கோப்புறையில் பணிபுரிகிறோம் என்பதனை அறிய இந்த கட்டளை பயன்படுகிறது.
லினக்ஸ் கட்டளைகள் அனைத்திலும் கட்டளைகளோடு சில தெரிவுகள் கொடுக்கப்படும் அவ்வாறு PWD கட்டளையோடு இரு தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை –logical மற்றும் –physical
தொடரியல் :
hariharan@kaniyam: ~/odoc $ pwd
பொதுவாக நாம் இந்த கட்டளையை எந்த தெரிவுகளையும் குறிப்பிடாமல் பயன்படுத்தும் அது -P தெரிவை தானமைவாகவே (default) எடுத்துக்கொள்ளும். எடுத்துகொண்டு முழு கோப்புறையின் பாதையை அச்சிடும்.
/home/hariharan/odoc
hariharan@kaniyam: ~/odoc $ pwd -L
இந்த கட்டளையை -L தெரிவுடன் பயன்படுத்தும்போது முழு கோப்புறையின் பாதையில் எதேனும் மென்இணைப்புகள்(soft-links) இருப்பின் அதனையும் சேர்த்து காண்பிக்கும்.
hariharan@kaniyam: ~/odoc $ pwd -P
இதே கட்டளையில் -P தெரிவுடன் பயன்படுத்தும் போது முழுகோப்புறையின் பாதையில் இருக்கும் மென் இணைப்புகளை புறக்கணித்துவிட்டு கோப்புறையின் பாதையை காண்பிக்கும்.
பின்னூட்டங்களை தவறாமல் குறிப்பிடுங்கள்.
நன்றி!
ஹரிஹரன் உமாபதி, மென்பொறியாளர்.
Programmer Life – programmerlife1.wordpress.com