நாள் : 12
top
இந்த கட்டளை பெரும்பாலான லினக்ஸ் இயங்குதளங்களில் வேலைசெய்யும் வேலைசெய்யவிலை எனில் அது வேறொரு பெயரில் கண்டிப்பாக இருக்கக்கூடும்.
இந்தக்கட்டளை நமக்கு கணினியில் தற்போது நடந்துகொண்டிருக்கும் செயல்பாடுகளை பற்றிய பல்வேறு வகையான விவரங்களை தெரிவிக்கும். அவ்வாறு தெரிவிக்கும் விவரங்களின் பட்டியல் பின்வருமாறு :
1. தற்போதைய நேரம்.
2. கணினி இயங்கிக்கொண்டிருக்கும் நேரம்.
3. கணினியில் உள்நுழைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கை.
4. கணிணியில் உள்ள சராசரி செயல்பாடுகளின் சுமை ( Average System Load)
5. கணினியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் செயல்பாடுகள் (இயக்கத்தில் உள்ளவை மற்றும் இல்லாதவை)
6. நினைவக பயன்பாடு
7. தாவல் நினைவகம் பயன்பாடு (swap usage)
மேற்கண்ட தரவுகள் யாவும் நேரத்தை பொறுத்து மாறக்கூடியவை மேலும் அவை 3 நொடிகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ளும் முடிவில்லாமல்.
தொடரியல்:
hariharan@kaniyam: ~/odoc $ top
தெரிவுகள்:
-d: top கட்டளையின் தானமைவாக ஒவ்வொரு முறையும் புதிய விவரங்களை எடுப்பதற்கு 3 வினாடிகள் தாமதிக்கும். இந்த தாமத அளவை மாற்ற -d தெரிவை பயன்படுத்திக்கொள்ளலாம்.
hariharan@kaniyam: ~/odoc $ top -d 5
-n : top கட்டளை முடிவில்லாமல் புதுப்பித்துகொண்டேஇருக்கும் ஒரு குறிப்பிட்ட புதுப்பித்தல் எண்ணிக்கைகு பிறகு top கட்டளையிலிருந்து வெளியேற இந்த தெரிவை பயன்படுத்தலாம்.
hariharan@kaniyam: ~/odoc $ top -n 7
நன்றி!
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com