Google நிறுவனத்தின் பைண்ட் மை டிவைஸ்(Find my device)செயலியை, நீங்கள் பயன்படுத்தி இருப்பீர்கள்.
உங்கள் தொலைந்து போன மொபைல் போனை கண்டுபிடிப்பதற்கு, உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய ஜிபிஎஸ்(GPS ) சேவையை google find my device பயன்படுத்தும்.
ஆனால், மற்ற நேரங்களில் உங்களுடைய இருப்பிட தகவல்கள் google நிறுவனம் பெறுவதாக கருதப்படுகிறது.
மேலும், உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் சேவைகள் ஆன் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே! உங்களால்,உங்களுடைய கருவியை கண்டுபிடிக்க முடியும்.
தற்காலத்தில் இருக்கக்கூடிய மொபைல் போன்களில், கடவுச்சொல் மூலம் சுவிட்ச் ஆப் செய்யும்(lock for power off function)அம்சங்களை பெற முடிந்தாலும்! சில நேரங்களில் இன்டர்நெட் சேவைகளை ஆப் செய்து வைப்பதன் மூலம் உங்களுடைய மொபைல் தொடர்பான தகவல்களை கிடைக்காமல் செய்ய முடியும்.
இந்த செயலியில் கூட, ஜிபிஎஸ் முறை தான் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், அதனுடன் இணைந்து மொபைல் எஸ்எம்எஸ் முறையும் பயன்படுத்தப்படுகிறது.
கார்கள் மற்றும் பைக்கில் பயன்படுத்தக்கூடிய ஜிபிஎஸ் கருவிகளிலும் இதே முறை தான் பின்பற்றப்படுகிறது.
நீங்கள் மற்றொரு கருவியில் இருந்து கட்டளையை பிறப்பிக்கும் போது, உங்கள் மொபைல் போனில் இருந்து இருப்பிட தொடர்பான ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
உங்களுக்கு அருகில் உள்ள செல்போன் டவரின் தகவல்கள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் உங்களுடைய கருவி எங்கு இருக்கிறது? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்
தற்கால உலகில் உங்கள் மொபைல் ஃபோன்களை பாதுகாக்க ஆக்கபூர்வமான ஒரு வழியாக இது அமையும்.
இந்த தொழில்நுட்பத்தை சரியான முறைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.
பிறரை உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தினால், உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இது குற்றமாகும்.
மேற்படி சிறப்பம்சம் கொண்ட செயலியை, நீங்கள் fdroid தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அதற்கான பிரத்தியேக இணைப்பை கீழே வழங்கியுள்ளேன்.
சரி!மீண்டும் ஒரு சிறந்த கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலியோடு, உங்களை வந்து சந்திக்கிறேன்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com இணையம்: ssktamil.wordpress.com